உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 11/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அர்மகெதோனை முன்னுணர்வுடன் தடுத்தலா?
  • நல்ல முதலீடா?
  • விலையுயர்ந்த தீக்கோழி
  • ஆழ்கடற் பணியில் ஒரு புதிய பதிவு
  • செயற்கை கண்ணீர்
  • சிரிப்பதற்கானதல்ல
  • சாதனை ஓட்டம்
  • வெற்றிகண்ட புதிய தக்காளிச் செடி
  • கதிரியக்கம் நன்கு பயன்படுத்தப்படுகிறது
  • உடற்பயிற்சிக்கு அடிமைப்பட்டவர்கள்
  • பாய்ந்தோடும், பறக்க முடியாது, கண்ணைக் கவரும்—நெருப்புக்கோழி
    விழித்தெழு!—1999
  • தீக்குருவியும் நாரையும்
    விழித்தெழு!—1988
  • கறையான்—நண்பனா பகைவனா?
    விழித்தெழு!—1995
  • நல்ல ஆரோக்கியம் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 11/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

அர்மகெதோனை முன்னுணர்வுடன் தடுத்தலா?

நடுத்தர குறுகிய தூரம் செல்லும் தரை சார்ந்த ஏவுகணைகளை ஒழிப்பது சம்பந்தமான ஓர் ஒப்பந்தம் சோவியத் யூனியனுக்கும் ஐக்கிய மாகாணங்களுக்குமிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அதிபர் மிகேயல் கோர்பச்சேவும் ரோனால்டு ரீகனும் மாஸ்கோவில் கூடியபோது நிறைவேறியது. அந்த ஒப்பந்தத்தின்படி சோவியத் யூனியன் 1,752 ஏவுகணைகளையும் ஐக்கிய மாகாணங்கள் 859 ஏவுகணைகளையும் அழிக்க வேண்டியிருந்தது. அந்த ஏவுகணைகள் எவ்வாறு பெயர்க்கப்படும் என்ற செயல் முறையைக் காண்பதற்கு மேற்கத்திய செய்தி நிருபர்கள் அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாக இருந்தது. படைப்பகுதி முதல்வர் எவ்கெனி A. கோஸ்லாவ் நிருபர்களைச் சுற்றிக் காண்பித்தபோது அந்த ஆயுதங்களை அழிப்பது குறித்து அவர் எப்படி உணருகிறார் என்று கேட்கப்பட்டது. “நாங்கள் அர்மகெதோனை விரும்பியதில்லை,” என்றார் படைப்பகுதி முதல்வர் கோஸ்லாவ். “நாங்கள் போரை விரும்பினதில்லை.”

நல்ல முதலீடா?

ஜப்பானிலுள்ள அநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு உயர் கல்வி மேன்மையான பதவிகளையும் உயர்ந்த வருமானத்தையும் உயர்ந்த வாழ்க்கைப் பாணிகளையும் உறுதியளிக்கும் என்று பலமாக நம்புகின்றனர். பிள்ளையை மிகச் சிறந்த தனியார் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சேர்ப்பதற்கு 6 கோடி யென் (ரூ72,00,000) வரை செவழித்து கடன்படுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்த பங்குவீதத்தைப் பெறுகின்றனரா? “உண்மையில், அந்த நம்பிக்கை இனிமேலும் உண்மையாக இல்லை,” என்று மெய்னிச்சி தினச்செய்தி கூறுகிறது. “அவர்களை ஏற்றுக்கொள்ளத்தக்க அளவுக்கு வாய்ப்புகள் மிகுந்த பதவிகள் இல்லை.” முன்னதாக உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் நிரப்பப்பட்ட வேலை வாய்ப்புகளையே அநேகர் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. பல்கலைக்கழக பட்டதாரிகளின் சராசரி வாழ்நாள் ஊதியம், அலுவலக வேலை செய்யும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பெறும் வாழ்நாள் ஊதியமாகிய 19.29 கோடி யென்னுக்கு (ரூ1,77,50,000) எதிராக 20.60 கோடி யென் (ரூ2,31,00,000) அதிகமாக இருந்தபோதிலும்—“தங்களுடைய வீட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் கடுமையான அந்த ஊதியத்தின் விகிதத்திலிருக்கும் மிகச்சிறிய வித்தியாசத்துக்கு இணையல்ல என்பதை ஜப்பானிய பெற்றோர்கள் என்றாவது ஒரு நாள் உணரக்கூடும்,” என்று அந்தத் தினசரி கூறுகிறது.

விலையுயர்ந்த தீக்கோழி

ஒரு தீக்கோழி வியாபார சந்தையில் என்ன விலைபோகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் முட்டைகளில் ஒன்று 24 கோழி முட்டைகளுக்குச் சமானம். தீக்கோழியின் இறைச்சி நல்ல சுவை மிகுந்ததும் குறைந்த கொளுப்புள்ள மாமிசமாகும். அத்துடன் கொலஸ்ட்ராலிலும் குறைவாக இருக்கிறது. தீக்கோழியின் இறகுகள் ஒவ்வொன்றின் விலையும் $5 (ரூ75). மற்றும் தீக்கோழியின் கடினமான தோலும், தோல் பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கரும் டெக்ஸாஸ் மக்களும் நன்கு விருத்தியாகும் தீக்கோழிப் பண்ணைகளை நிறுவியிருக்கின்றனர். அப்பொழுது ஆஸ்திரேலியாவும் அதைப் பின்பற்றுகிறது. ஆஸ்திரேலியாவில் முதல் நிறுவப்பட்ட பண்ணைகளில் ஒன்று—முதல் பண்ணை அல்ல—மத்திய நியு சவுத் வேல்ஸில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தி வீக்கெண்டு ஆஸ்திரேலியன் செய்தித்தாள் கூறுகிறது. அந்தச் செய்தித்தாளின்படி தீக்கோழிகள் உருவத்தில் பெரியவையாக இருந்தாலும் அவற்றைக் கையாளுவது உண்மையிலேயே கடினமல்ல என்று நம்பிக்கையின் மனநிலையோடு தெரிவிக்கிறார் ஒரு பண்ணை முதலாளி. அவற்றை ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு விடுகிறார். உணவுக்காக தீக்கோழிகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் அன்றாட மேச்சலுடன் கூடுதலான வைக்கோல் அல்லது பார்லியாகும்.

ஆழ்கடற் பணியில் ஒரு புதிய பதிவு

மார்ச் 1988-ல் பிரெஞ்சு ஆழ்கடற் பணியாளர் அதற்கு முன்னிருந்த எல்லாப் பதிவுகளையும் முறியடித்து ஒரு புதிய சாதனை படைத்தனர். அவர்கள் ஒரு சதுர அங்குலத்திற்கு 700 பவுண்டு அழுத்தம் கொண்டிருக்கும் 1,706 முதல், 1,742 அடி ஆழத்தில் மூன்றரை மணிக்கு மேலாகப் பணியாற்றினர். அந்த ஆழ்க்கடற் பணி மத்தியதரைக் கடலில் பிரான்சுக்குத் தென்கிழக்கே கேஸிஸுக்கு அப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பே ஆறு ஆழ்கடற் பணியாளர்கள் ஹைப்பர்பாரிக் அறையில் வைக்கப்பட்டு, அதில் அழுத்தநிலை, நீரின் அழுத்த நிலைக்கு சமமாக மெதுமெதுவாகக் கூட்டப்பட்டது. லெ ஃபிகாரோ என்ற தினசரி பின்வருமாறு குறிப்பிட்டது: “அப்படிப்பட்ட அழுத்தத்தின்கீழ் அவர்கள் தங்கள் அறையைவிட்டு கடலுக்குள் 520 மீட்டர் ஆழத்தில் எந்தவித ஆபத்துமின்றி பிரவேசிக்க முடிந்தது.” இதன் நடைமுறையான பொருத்தம் கடலில் அமைந்த எண்ணெய் மேடைகளின் கீழ் பராமரிப்பு வேலைக்கானதாயிருக்கிறது.

செயற்கை கண்ணீர்

கண்ணீர் சுரப்பிகள் நாசமடைவது அல்லது கண்ணீர் நாளங்களில் அடைப்பு மோசமான பாதிப்புகளை, சில சமயங்களில் பார்வையையும் இழக்கச் செய்யும். இதற்குப் பரிகாரமாக, பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த ஜீன் அன்டோய்ன் பெர்னார்ட் என்ற ஒரு மருத்துவர் பாட்ரியில் செயல்படும் 14 அவுன்ஸ் தானியக்கக் கண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இதை நோயாளி தன் கைகளுக்குக் கீழே அணிந்துகொள்கிறார். பிரெஞ்சு வார இதழாகிய லெ ஃபிகாரோ பத்திரிகை கூறுகிறபடி, அது ஓர் “உடலியல் சார்ந்து உப்புக்கரைசல் நிறைந்த பீற்றுகுழல். அதிலிருந்து அந்த உப்புக்கரைசல் கண்ணுக்குப் புலப்படாதளவுக்கு இருக்கும் ஒரு பிளாஸ்டிக் குழாய் வழியே சென்று கண்விழிக்குக் கீழே பொருத்தப்பட்டுள்ள மென்மையான சிலிக்கான் குழல்மூலம் இடைவிடாது கண்ணுக்கு நீர் வழங்குகிறது.” காற்றுக்காலத்தில் அதிக நீரும், தூங்கும்போது குறைந்த நீரும் என்ற அளவில் கட்டுப்படுத்தலாம்.

சிரிப்பதற்கானதல்ல

சிரிப்பு சிறந்ததோர் மருந்து என்ற பழைய நம்பிக்கைக்கு இப்பொழுது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள சில மருத்துவமனைகளில் வேதனையில் அவதிப்படும் நோயாளிகளுக்குச் “சிரிப்பு அறைகள்” ஏற்பாடு செய்யப்படுகின்றன, மருத்துவர்கள் “நகைக்கும் சிகிச்சை முறையைக்” கற்றுக்கொடுக்கின்றனர், “சிரிப்பதற்கு செவிலியர்கள்” என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு இப்பொழுது அதிக பிரபலமாகி வருகிறது” என்று தி வான்கூவர் சன் குறிப்பிடுகிறது. சிரிப்பு “அழுத்தத்தை முறித்திடும் மருந்து,” மற்றும் “தேக தடைக்காப்பு முறைக்கு நல்லது” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. “உள்ளான உடல் பயிற்சி” என்றுங்கூட அழைக்கப்படுகிறது. தி சன் கூறுகிறபடி “என்டார்பின்ஸ் என்ற உடலின் இயல்பான வேதனைக்கொல்லிகளை சிரிப்பு விடுவிப்பதன் மூலம் வேதனை வாயிலைக் கூட்டுகிறது,” என்று உளநூல் பேராசிரியர் உரிமைப்பாராட்டுகிறார். கானடாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கூறுவதாவது, முகத்தின் சிரிப்புத் தசைகள், “நீங்கள் எப்படி உணர்ந்தாலும் நன்றாக உணரும்படியாக மூளைக்குக் கூறுகிறது.”

சாதனை ஓட்டம்

ஜெர்மன் பெடரல் இரயில்வே ஏறக்குறைய 80 விருந்தினரை அழைத்து, கடந்த மே மாதத்தில் நடத்திய “இன்டர்சிட்டி எக்ஸ்பெரிமெண்டல்” (ICE) இரயிலின் சோதனை ஓட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தது. இரண்டு ICE பெட்டிகளில் உட்கார்ந்துகொண்டும் நின்றுகொண்டுமிருந்த பயணிகள், கதவுகளுக்கு மேல் பொருத்தப்பட்ட வேகமாணிகளின் பிரகாசமான எண்கள் மணிக்கு 252 மைல் வேகத்தை எட்டியதைக் கண்டனர்! இது உலகத்தில் இதுவரை எட்டப்பட்டதில் புதிய வேகம்! பிராங்க்பர்ட்டர் ஆல்ஜீமீன் ஜீட்டங் குறிப்பிடுகிறபடி, ஜெர்மன் ஃபெடரல் இரயில்வே 150 கோடி ஜெர்மன் மார்க்ஸ் விலையை உட்படுத்தும் 41 ICE இரயில் வாகனங்களுக்கான ஆர்டரை சமர்ப்பித்தது.

வெற்றிகண்ட புதிய தக்காளிச் செடி

பிப்ரவரி 1988-ல் ஜப்பானில் ட்சக்குபா என்ற இடத்தில் வளர்க்கப்பட்ட ஓர் இராட்சத தக்காளிச் செடி 1985 உலக சாதனையைவிட 3,585 தக்காளிகளை அதிகமாக விளைவித்து உலக சாதனை புரிந்தது. முன்னதாக வெற்றிகண்ட தக்காளிச் செடியும் இந்த ஆண்டு தக்காளிச் செடியும் மண்ணிலி வேளாண்மை முறையில் வளர்க்கப்பட்டன. அந்த விலையுயர்ந்த வளர்ப்புமுறை செடிகளை மண் இல்லாமலேயே திரவ உரங்கள் ஊட்டி ஓர் உஷ்ண அறையில் வளர்ப்பதை உட்படுத்துகிறது. வெற்றிப் பட்டம் பெற்ற இந்தப் புதிய வீராங்கனை ஒரு பின்னல் அமைப்பு கொண்ட மேடையில் வளர்த்தான். அந்தச் செடியின் ஓராண்டுக்கும் சற்று அதிகமான போட்டி வாழ்க்கையின் முடிவுக்குள் அந்த வெற்றி கண்ட தக்காளிச் செடி 16,897 தக்காளிகளை விளைவித்திருக்கிறது!

கதிரியக்கம் நன்கு பயன்படுத்தப்படுகிறது

கதிரியக்கத்தின் ஒரு புதிய உபயோகம் ஆஸ்திரேலியாவின் பழைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களில் கரையான்களை ஒழிப்பதற்கு உதவியிருக்கிறது. மிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள் அதன் உணவோடு சேர்க்கப்படுகிறது என்று தி கேன்பரா டைம்ஸ் அறிக்கை செய்தது. அது கரையானின் குடியிருப்பு முழுவதும் பரவிட, அதன் குடியிருப்பின் அளவைக் கணிக்க உதவுகிறது. கதிரியக்கப் பொருள் கரையான்களைக் கொல்லுவதில்லை. அவை ஒருமுறை கணிக்கப்பட்டதும், பொதுவாக பயன்படுத்தப்படும் கரையான் மருந்துகளை நல்ல விதத்தில் சிக்கனமான முறையில் பயன்படுத்த முடிகிறது. டைம்ஸ் பத்திரிகையின்படி, இந்த முறை அந்தளவுக்கு வெற்றிகண்டிருப்பதால் இலங்கை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து மற்றும் எகிப்து போன்ற நாடுகள் தங்களுடைய சொந்த கரையான் பிரச்னைகளைத் தீர்க்க இதில் அக்கறை காண்பித்திருக்கின்றன. உபயோகிக்கப்படும் கதிரியக்கப் பொருள் மிகவும் குறைவானதால், அது மனிதருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

உடற்பயிற்சிக்கு அடிமைப்பட்டவர்கள்

அளவோடு செய்யப்படும் உடற்பயிற்சி நிச்சயமாகவே உடல்நலத்துக்கு நன்மை பயக்குகிறது, ஆனால் கூடுதலான அமெரிக்கர் தங்களுக்குத் தாங்களே கேடு விளைவித்துக் கொள்கின்றனர். “உடலைத் தக்கநிலையில் வைத்துக்கொள்ளுதல் பேரில் தேசம் முழுவதும் கொண்டிருக்கும் காதல்—அனாரக்ஸியா, பல்மியா போன்ற உணவருந்தும் பிரச்னைகள் சேர்ந்து—வளர்ந்துகொண்டிருக்கும் மற்றொரு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னை ஆட்டிப்படைக்கும், அடிமையாக்கும் உடற்பயிற்சி,” என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது. “மதுபானங்களும் போதை மருந்துகளும் எடுக்கும் வெறியர்கள் அவற்றை நிறுத்தும்போது எப்படிப்பட்ட விலகல் அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றனரோ, அதே மாதிரியான அடிமையாகும் அறிகுறிகளை அநேகர் காண்பிக்கின்றனர். மனச்சோர்வு, நரம்புத் தளர்ச்சி மற்றும் தூக்கமின்மை.” ஆரோக்கியமான, தன்னை ஆட்கொள்ளும் உடற்பயிற்சிகளைக் குறித்து புகழ்வரிகள் இருந்தபோதிலும், ஒருவர் உடற்பயிற்சிக்கு அடிமையாகியிருக்கிறார் என்பதற்கான பலமான அறிகுறி, அவர் அடிபட்டிருக்கும்போதும் உடற் பயிற்சி செய்வதாகும்—அடிக்கடி வேதனையை மறைக்க வீக்கம் குறைக்கும் மருந்துகளை உட்கொள்ளுதலாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். “அழுத்தத்தால் ஏற்படும் முறிவுகள் அல்லது முன்னங்கால் எலும்பு முறிவு அல்லது குதிங்காலைப் பிணைக்கும் தசைநாண் பாதிப்பு ஆகியவை ஓட்டத்துக்கு அடிமைப்பட்டவர்களுக்கும் நடனக்காரர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடும்,” என்று ஜர்னல் கூறுகிறது. (g88 9⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்