தீக்குருவியும் நாரையும்
இரண்டு பிராணிகளும் பெரியவை, இறக்கைகள் உள்ளவை, இறகுகள் உள்ளவை, நீண்ட கால்கள் உடையவை என்ற உண்மையைத் தவிர நாரையும் தீக்குருவியும் எந்த ஒரு பொதுவான காரியத்தையும் உடையவையாக இல்லை. அநேக விதங்களில் அவை எதிர்மறையானவை.
பறக்கையில், நாரை வசீகரத்தின் பிம்பம், அதன் பெரிய இறக்கைகள் 2.6 மீட்டர் தூரத்தை எட்டிப்பிடிக்கும். அவைகளின் மகத்தான பறக்கும் சக்தியினால் சில நாரைகள் தெற்கே உள்ள நெடுந்தொலை நாடுகளில் குளிர்காலத்தைக் கழிக்கச் செல்ல முடியும். தீக்குருவிகள் அவ்வாறு ஆசீர்வதிக்கப்படவில்லை அவைகள் தங்கள் இறக்கைகளை மூர்க்கமாக அசைத்தாலும் அவற்றின் பெரிய உடல்கள் நிலத்தில் ஊன்றியிருக்கும். ஆகவேதான் பைபிள் கேட்கிறது: “பெண் தீக்குருவி தன் செட்டைகளை மகிழ்ச்சியாக அசைவாட்டியதுண்டோ. அல்லது அவள் நாரையின் செட்டைகளையும் இறகுகளையும் கொண்டிருக்கிறாளோ?” யோபு-39:13, NW.
இருப்பினும், கோபமூட்டப்படும்போதோ அல்லது பயமுறுத்தப்படும்போதோ ஒரு தீக்குருவி தன்னுடைய இறக்கைகளின் உதவியால் மணிக்கு 64 கி.மீ. வேகம் வரையும் ஓடக்கூடும். பைபிள் சொல்வது போல்: “அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் பண்ணும்.” (யோபு-39:18) ஒரு தீக்குருவி குதிரை ஒன்றைத் துரத்தினதையும் அதைப் பலமாகக் கால்களால் தாக்கியதையும் பார்வையாளர் ஒருவர் கவனித்தார்.
இந்த இரண்டு பறவைகளும் வேறுபட்ட தன்மைகளையும் உடையவை. எபிரேய மொழியில் நாரைக்கான பெயர் “தயை” அல்லது “உண்மை அன்பு.” என்ற அர்த்தத்தையுடை வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இடப்பெயர்ச்சியின்போது பிரிந்தபிறகு ஒரு ஜோடி நாரைகள் ஒவ்வொரு ஆண்டிற்குப் பிறகும் ஒரே கூட்டில் மறுபடியும் ஒன்று கூடும். அவை கூட்டை மறுபடியும் கட்டுவதிலும், முட்டைகளை அடை காப்பதிலும், மற்றும் புதிதாகப் பொரித்த குஞ்சுகளைக் கவனிப்பதிலும் பங்குகொள்கின்றன. சாதாரணமாக ஒரு தடவையில் நான்கு குஞ்சுகள் பொரிக்கும், மற்றும் அநேக வாரங்களுக்கு, ஈன்றவை அவைகளுக்கு உணவு கொடுப்பதில் சுறுசுறுப்பாக இருக்கும். “நாரைக் குஞ்சுகள் இரண்டு மாதம் ஆனபிறகுதான் முதல் தடவையான பறக்கமுடிகிறது. அதுவும் அவைகளைப் பெற்றவை அவைகளுடன் துணை சென்று அவைகளைக் கவனிக்கவும் வேட்டையாட பழக்குவிக்கவும் தொடர்ந்து உதவிசெய்கின்றன.”என்று லாரெளசே என்ஸைக்ளோபீடியா ஆஃப் அனிமல் லைஃப் கூறுகிறது.
அதற்கு மாறாக, தீக்குருவிகள் அநேக துணைகளைக் கொண்டிருக்கும் மற்றும் அவைகளின் பெட்டைக் குருவிகள் அவைகளின் முட்டைகளைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. இவைகள் அவைகளின் சமூகப் பொதுக்கூடுகளில் சேர்க்கப்படுகின்றன, சில வெளியே விட்டுவிடப்படுகின்றன. அபாயத்தை சமூகப் பொதுக்கூடங்களில் சேர்க்கப்படுகின்றன. அபாயத்தை உணரும்போது தீக்குருவிகள் தற்காலிகமாக தங்கள் முட்டைகளை அல்லது குஞ்சுகளை கைவிட்டுவிடுகின்றன.
அத்தகைய கைவிடுவதைப் போலத் தோன்றும் காரியம் பெட்டைத் தீக்குருவியைப் பற்றிய பைபிளின் விவரிப்புக்கு இசைவாக இருக்கிறது. “அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு. . .காலால் மிதிபட்டு உடைந்து போம் என்பதை நினைக்கிறதில்லை. . . அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாதது போல அவைகளைக் காக்காத கடின குணமுள்ளதாயிருக்கும்.” (யோபு 19:14-16) “அநேக பைபிள் வாசகர்கள் இந்த மேற்கோள் எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதை அறியார்கள்” என்று பறவை நூல் நிபுணர்களான டாக்டர் R.C மர்ஃபி மற்றும் டாக்டர் D. ஏமடன் ஆகியோர் கூறுகின்றனர்.
தீக்குருவிகள் சிறிய தலையையும், அக்ரோட்டு அளவான மூளையையும் பெற்றிருக்கின்றன. இதிலிருந்து மிருகக்காட்சி சாலை இயக்குநரான ட்டெர்ரி மர்ஃபி எழுதியதை விளங்கிக் கொள்ள முடிகிறது: பறவைகள் புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் என்பதற்கு விதிவிலக்காக ஓர் இனம் உண்டு என்றால் அது தீக்குருவியாகத்தான் இருக்கும்.”
என்னுடைய சிறந்த நண்பர்களில் மிருகங்கள் சில என்ற தன்னுடைய புத்தகத்தில் எப்படி ஒரு தீக்குருவி ஒரு குளிர்ந்த இரவில் வேலியின் அருகாமையில் உறங்கி அதனால் உறைந்து மாண்டதை விவரிக்கிறார். இன்னொன்று வேலியின் இரண்டு கப்பிகளுக்கிடையே தன்னுடைய கழுத்தைச் சிக்கவைத்து நெருக்குண்டு செத்தது. “ஆனால், அவைகளைப் பற்றிய மிகவும் சிரிப்பூட்டும் காரியம் அவைகள் உட்கொள்ளும் பொருட்களே” என்று மர்ஃபி எழுதினார்.
சமீபத்தில் ஒரு தீக்குருவியின் புகைப்படத்தை மிகவும் அருகிலிருந்து எடுக்க முயற்சி செய்தபோது ஒரு சுற்றுலா பயணி தன்னுடைய புகைப்படக்கருவியைப் பறிகொடுத்தார். தீக்குருவியின் நீண்ட கழுத்துக்குள்ளே அது மெதுவாக இறங்கிச் சென்றதை ஆச்சரியத்தோடு அவர் கவனித்தார். தி கின்னர் புக் ஆஃப் அனிமல் ஃபேக்ட்ஸ் அண்ட ஃபீட்ஸ் ஒரு தீக்குருவியின் வயற்றில் காணப்பட்ட கீழ் கண்ட பொருட்களின் பட்டியலை அளிக்கிறது: “3 அடி நீளமுள்ள ஒரு கயிரு, ஓர் உருளை படச்சுருள், ஒரு அலாரம் கடிகாரத்தின் சாவி, ஒரு சைக்கிள் வால்வு, ஒரு பென்சில், ஒரு சீப்பு, மூன்று கையுறைகள், ஒரு கைக்குட்டை, கையுறை இணைப்பான்கள், கழுத்தில் அணியும் பொன் அட்டிகைத் துண்டுகள், இரண்டு கழுத்துப்பட்டை பொத்தான்கள், பெல்ஜிய நாட்டு வெள்ளி நாணயம் ஒன்று, இரண்டு ஃபார்த்திங்குகள் (இங்கிலாந்து நாணயம்) மற்றும் நான்கு பென்னிகள் (இங்கிலாந்து செம்பு நாணயம்).”
பொருத்தமாகவே, பைபிள் பெட்டைத் தீக்குருவியைப் பற்றி பேசுகிறது: (யோபு 39:17) இது உண்டாக்கினவரால் ஒரு தவறு இழைக்கப்பட்டது என்று குறிப்பாக உணர்த்துகிறதா? எவ்விதத்திலும் இல்லை. உண்மையில், தீக்குருவியின் அசட்டைத்தனம் போன்று தோன்றும் காரியம் அதனுடைய பாதுகாப்புக்கு வழிநடத்துகிறது. கூட்டுக்கு வெளியே கவனக்குறைவாக விடப்பட்ட முட்டைகள் சில சமயங்களில் புதிய குஞ்சுகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. மேலும், தீக்குருவிக்குப் பற்கள் இல்லாததால் கற்களைப்போன்ற இயற்கைப் பொருட்கள் விழுங்கப்படுவது செரித்தலுக்கு ஒரு முக்கிய ஏதுவாக இருக்கிறது.
ஒரு தீக்குருவி அதன் முட்டைகளை அல்லது குஞ்சுகளைக் கைவிட்டு விலகும்போது. அது எதிரிகளில் கவனத்தைச் சிதறடிக்கிறது. சில சமயங்களில் இதைச் செய்கையில் தீக்குருவிகள் வியப்பூட்டும் தீரச்செயலை வெளிக்காட்டுகின்றன. ஒரு தீக்குருவி, அணுகிவரும் லாரியைப் பார்த்தபோது, தன்னுடைய குஞ்சுகளைக் கைவிட்டு வண்டியை நோக்கி ஓடியது! பிறகு அது தனது ஓர் இறக்கையைத் தாழ்த்தி காயப்பட்டது போல் பாசாங்கு செய்து வண்டியின் ஒரு பக்கமாக வளைந்து சென்றது.
தீக்குருவியும் நாரையும் அவைகளை இத்தனை வித்தியாசமானவைகளாக திட்டமிட்டு அமைத்தவரின் அளவிடமுடியாத ஆழ்ந்த சிந்தனை ஆற்றல்களுக்குக் கவனத்தைத் திருப்புகின்றன. (ரோமர் 11:33) சங்கீதக்காரன் வியந்து பாராட்டுகிறான்: “மெய்யாகவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்றது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்.” சங்கீதம் 104:24 (g87 1/8)
[பக்கம் 18, 19-ன் படங்கள்]
மாராபே நாரை
தீக்குருவி
சாடில்-பில் நாரை
உவுட்நாரை