எமதுவாசகரிடமிருந்து
நீதிமன்ற வழக்கு “கிறிஸ்தவர்கள் ஜெரூசலமின் உயர்நீதிமன்றத்தை மறுபடியும் சந்திக்கின்றனர்” (நவம்பர் 8, 1994) என்ற கட்டுரைக்காக என் நன்றியறிதலை வெளிப்படுத்துவதிலிருந்து என்னை அடக்கிவைக்க முடிகிறதில்லை. அதை நான் பல தடவைகள் வாசித்து, அந்த நிகழ்ச்சியால் உள்ளக்கிளர்ச்சியடைந்தேன். சரியானதன் சார்பாக ஆரில் ஃபெட்மன் உறுதியான நிலைநிற்கையை எடுத்ததனால், வியக்கத்தக்க ஒரு சாட்சி கொடுக்கப்பட்டது.
எ. ஐ. பி., பிரேஸில்
பேட்டரிகள் பிழைப்புக்காக பேட்டரிகளைக்கொண்டு நான் வேலைசெய்கிறேன், “உலகத்தைக் கவனித்தல்” என்பதில் “அபாய பேட்டரிகள்” (ஆகஸ்ட் 22, 1994) என்ற பகுதிக்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆனால் ஸ்நோ கன்ட்ரி பத்திரிகையால் கொடுக்கப்பட்ட ஜம்ப் ஸ்டார்ட் செய்யும் சம்பந்தமான குறிப்புகளில் ஒரு முக்கிய நுட்ப விவரம் தவறவிடப்பட்டுள்ளது. அதாவது, அந்தக் கருப்பு கேபிள் கடைசியாகச் செய்யப்படும் இணைப்பாக இருக்க வேண்டும்.
பி. ஆர்., கனடா
இந்தப் பாதுகாப்பு குறிப்புக்காக உங்களுக்கு நன்றி.—ED.
விழித்தெழு! ஆறுதலைக் கொண்டுவருகிறது ”நடைமுறையான ஆறுதலளிக்கும் பத்திரிகைகள்” (ஜனவரி 8, 1995) என்ற கட்டுரையை நான் வாசித்தேன், நாட்கடந்த விழித்தெழு! வெளியீடுகளை அளிப்பதில் நானும்கூட வெற்றி கண்டிருக்கிறேன். பொதுவாக, ஆட்கள் தங்கள் பிரச்சினைகள் சம்பந்தமாக ஏதாவது உதவியைப் பெறுவதில் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். ஓர் அம்மாள், தன் மகனுக்குக் கவனப் பற்றாக்குறை மிகை இயக்க சீர்கேடு (Attention Deficit Hyperactivity Disorder) இருப்பதாகச் சொன்னார்கள். “சமாளிக்கமுடியாத பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுதல்,” என்ற கட்டுரையைக்கொண்ட வெளியீட்டை (நவம்பர் 22, 1994) நான் அவர்களுக்கு அளித்தேன், அவர்கள் தங்களுடைய நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள இன்னும் 30 பிரதிகள் வேண்டுமென்று கேட்டார்கள்!
டி. க்யூ., ஐக்கிய மாகாணங்கள்
“நடைமுறையான ஆறுதலளிக்கும் பத்திரிகைகள்,” என்ற கட்டுரையை வாசித்த பின்பு, கலைத்தொழிலருக்கு அளிக்க சிலவற்றைக் கண்டெடுக்கக் கூடுமாவென்று காண என் பழைய பத்திரிகைகளுக்குள் தேடினேன். இதுவரை நான், பகல் கவனிப்பு நிறுவனம், சவ அடக்கத் தயாரிப்பிடங்கள் சில, இளைஞர் தடுப்புக் காவலிடம் ஒன்று, பொதுப்பள்ளி ஒன்று, மற்றும் மாவட்ட கல்வி மன்றம் ஆகியவற்றிற்குச் சென்று சந்தித்திருக்கிறேன். விரைவில் என் பத்திரிகைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன!
டி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
விவாகமின்மை ”பைபிளின் கருத்து: விவாகமின்மை ஒரு வரமாயிருக்கையில்” (பிப்ரவரி 8, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நான் வாழுமிடத்தில், விவாகம் செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது; கிறிஸ்தவ சகோதரரும் சகோதரிகளும் விவாகம் செய்யும்படி உங்களை ஊக்குவிப்பர். 30 வயதாகும்வரையில் விவாகம் செய்வதைப்பற்றி நான் அதிகமாய் ஒருபோதும் சிந்தித்ததில்லை. பின்பு ஒரு துணைக்கான தேவையை உணரத் தொடங்கினேன். என்னால் இனிமேலும் பொறுக்கமுடியாதென்று நான் உணர்ந்த சமயத்தில் இந்தக் கட்டுரையை அளித்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
இ. எம். எ., ஐக்கிய மாகாணங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நான் முழுநேர சுவிசேஷ ஊழியம் செய்யும் பயனியரானேன். “கவலையில்லாமல்” யெகோவாவைச் சேவிப்பது எவ்வளவு திருப்தியாயிருக்கிறதென்பதை, காலம் எவ்வளவு அதிகமாய்ச் சென்றுகொண்டிருக்கிறதோ அவ்வளவு அதிகமாய் நான் உணர்ந்துவருகிறேன். விவாகம் செய்யாமல் தொடர்ந்திருக்க நான் தீர்மானித்தேன்.—மிகச் சரியான நேரத்தில் இந்தக் கட்டுரை வந்துசேர்ந்தது.
ஜி. வி., இத்தாலி
நவீன பாணிகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . நவீன பாணிகள்—அவற்றை நான் பின்பற்ற வேண்டுமா?” (டிசம்பர் 8, 1994) என்ற உங்கள் கட்டுரையில் பச்சைக் குத்திக்கொள்வதை குறிப்பிட்டீர்கள். “அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக,” என்ற லேவியராகமம் 19:28-ல் கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை நீங்கள் குறிப்பிடாதது எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
எல். டி., ஐக்கிய மாகாணங்கள்
இந்த வார்த்தைகள், இந்தக் காரியத்தின்பேரில் கடவுளுடைய சிந்தனைக்குள் ஓரளவான உட்பார்வையை நிச்சயமாகவே அளிக்கலாம். சொல்லப்போனால், கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை. (கொலோசெயர் 2:14) இருந்தபோதிலும், இந்தக் காரியத்தில் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, தனிநபர்கள் இந்த வசனத்தை மனதிற்கொள்வது நல்லது. உடல்நலத்துக்கு ஏற்படும் அறிக்கையிடப்பட்டுள்ள அபாயங்களும், பச்சைக் குத்தியிருப்பது மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அபிப்பிராயமும், ஒரு கிறிஸ்தவன் வெகு கருத்துடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கூடுதலான காரணங்களாக இருக்கின்றன.—ED.
ஆறு மாதங்களுக்கு முன்பாக நான் நவீன பாணிக்குள் குதித்து, கணுக்காலில் பச்சைக் குத்திக்கொண்டதுடன் முடிவடைந்தேன். என் கணுக்காலை நான் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் என் தீர்மானத்தைப்பற்றி நினைப்பூட்டப்படுகிறேன். என் நடத்தைப்போக்கைப்பற்றி மற்றவர்களுக்கு என்ன சந்தேகங்கள் இருக்குமோவென நான் சிந்தித்துக்கொண்டு மாத்திரமே இருக்கக்கூடும். சபையிலுள்ள மற்றவர்களுக்கு நான் இடறுதலுக்கான காரணமாயிருக்கக்கூடுமோ என்றும் மனசங்கடப்படுகிறேன். அடுத்த தடவை புதிய ஒரு நவீன பாணி தோன்றுகையில் நான் மேலும் அதிக கவனத்துடன் சிந்திப்பேன்.
எஸ். சி., ஐக்கிய மாகாணங்கள்