உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 11/8 பக். 3-5
  • கலை என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கலை என்றால் என்ன?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கலையை விளக்குதல்
  • கலைத்திறனுக்கு பின்னிருக்கும் கலைஞர்
  • மிகவும் அசட்டை செய்யப்பட்ட நமது காலத்து கலைஞர்
    விழித்தெழு!—1995
  • ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை
    விழித்தெழு!—2001
  • கற்பனைத் திறனை சரியாக பயன்படுத்துகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • மகத்தான ஓவியர் யெகோவா!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 11/8 பக். 3-5

கலை என்றால் என்ன?

ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்

நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வனப்புமிக்க காட்சி எது? வெப்பமண்டல சூரிய அஸ்தமனமா, பனிமூடிக்கிடக்கும் மலைத்தொடரா, பாலைவனம் பூத்துக் குலுங்குவதா, வருடத்தின் இலையுதிர் காலத்தில் காடுகளில் காணப்படும் மகிமையான வர்ண ஜாலங்களா?

பூமியின் அழகால் நாம் ஆட்கொள்ளப்பட்ட ஏதோவொரு விசேஷித்த கணத்தை நம்மில் பெரும்பாலானோர் நினைத்து மகிழ்கிறோம். முடியுமானால், நம்முடைய விடுமுறையை பரதீஸிய சுற்றுச்சூழலில் கழிக்கவேண்டுமென்று நாம் விரும்புகிறோம். நினைவில் ஆழமாகப் பதிந்த காட்சிகளை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம்.

கெடுக்கப்படாத இந்த மகத்துவத்தை நீங்கள் அடுத்த தடவை பார்க்கும்போது, கீழ்க்காணும் கேள்விகளை நீங்கள் ஒருவேளை சிந்திக்கலாம். கலைக்கூடம் ஒன்றில் இருக்கும் ஒவ்வொரு ஓவியத்திலும் “யாரோ” என்று குறிப்பிட்டிருந்தால், இருக்கவேண்டிய ஏதோவொன்று குறைவுபடுகிறதே என்று நீங்கள் உணரமாட்டீர்களா? ஒரு கண்காட்சியில் உள்ள ஓவியங்களின் தரத்தினாலும் அழகினாலும் நீங்கள் கிளர்ச்சியடைந்திருந்தால், அவற்றைத் தீட்டிய ஓவியன் யாரென்று அறிந்துகொள்ள விரும்பமாட்டீர்களா? வெறுமனே பூமியின் அழகான அற்புதங்களை மட்டும் கண்டு திருப்தியடைந்துவிட்டு, அவற்றைப் படைத்த கலைஞரைப்பற்றி கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டுமா?

இயற்கையில் கலை என்பதொன்றும் இல்லை, கலைக்கு மனித படைப்புத் திறனும் விளக்கமும் தேவை என்று அடித்துச் சொல்லுகிற ஆட்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே. எனினும், இந்த விளக்கமானது ஒருவேளை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். சரியாக, கலை என்பது என்ன?

கலையை விளக்குதல்

கலை என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்தும் ஒரு விளக்கத்தை அளிப்பதென்றால் ஒருவேளை அது முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் உவெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்‍ஷ்னரி கிட்டத்தட்ட நல்ல ஒரு விளக்கத்தைத் தருகிறது. “விசேஷமாக, அழகான பொருட்களை உருவாக்குவதற்கு திறமையையும் படைப்புக் கற்பனாசக்தியையும் உணர்வோடு உபயோகித்தல்” என்று அது சொல்லுகிறது. இதன் அடிப்படையில் ஒரு கலைஞனுக்கு திறமை, படைப்புக் கற்பனாசக்தி ஆகிய இரண்டுமே இருக்கவேண்டும் என்று நாம் சொல்லலாம். இந்த இரண்டு திறமைகளையும் தன்னுடைய வேலையில் ஈடுபடுத்துகையில், மற்றவர்களை மகிழ்விக்கக்கூடிய அல்லது வசீகரிக்கக்கூடிய ஏதோவொன்றை அவனால் உருவாக்க முடியும்.

திறமையையும் கற்பனையையும் வெளிக்காட்டுவது என்பது மனிதனால் செய்யப்படும் கலைநயமுடைய வேலைப்பாடுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டவையாய் இருக்கின்றனவா? அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையின் உலகத்திலும்கூட அவை வெளிப்படுத்தப்படுகின்றனவா?

வானுயர வளரும் கலிபோர்னிய ரெட்வுட் மரங்கள், பசிபிக்கில் பரந்துகிடக்கும் பவளப்பாறைகள், மழைக்காட்டில் உள்ள வல்லமைவாய்ந்த நீர்வீழ்ச்சிகள், ஆப்பிரிக்க வெப்பமண்டல புல்வெளிகளில் மேயும் வெகு நேர்த்தியான மந்தைகள் ஆகியவை “மோன லிசா” ஓவியத்தைவிட, வெவ்வேறு வழிகளில் மனிதவர்க்கத்திற்கு விலையேறப்பெற்றவையாய் இருக்கின்றன. இதன் காரணமாகத்தான், ரெட்வுட் தேசிய பூங்கா, அ.ஐ.மா.; இகுவாசு நீர்வீழ்ச்சி, அர்ஜன்டினா/பிரேஸில்; கிரேட் பாரியர் பவளப்பாறை, ஆஸ்திரேலியா; செரன்கெட்டி தேசிய பூங்கா, டான்ஜானியா ஆகியவற்றை யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான கலாச்சார கழகம்) மனிதவர்க்கத்தின் “உலக பரம்பரைச் சொத்தின்” பாகமாக ஒதுக்கி வைத்திருக்கிறது.

இந்த இயற்கைப் புதையல்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களோடு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஏன்? “தனிச்சிறப்புவாய்ந்த பொதுமதிப்புடைய” எதையும் பாதுகாத்து வைப்பதே இதன் நோக்கம். இந்தியாவிலுள்ள தாஜ்மகாலின் அழகாக இருந்தாலும்சரி அல்லது அ.ஐ.மா.-விலுள்ள கிராண்டு பள்ளத்தாக்கின் அழகாக இருந்தாலும்சரி, எதிர்கால சந்ததிகளுக்காக பாதுகாத்து வைக்கப்பட தகுதியுள்ளவையாக இருக்கின்றன என யுனெஸ்கோ வாதிடுகிறது.

ஆனால் படைப்புத் திறனை நீங்கள் பார்க்கவேண்டுமானால் ஒரு தேசிய பூங்காவிற்குப் போய்தான் பார்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. மிக உயர்ந்த எடுத்துக்காட்டாக இருப்பது உங்களுடைய சொந்த உடலேயாகும். பண்டைய கிரீஸின் சிற்பக் கலைஞர்கள் மனித வடிவை மிகச் சிறந்த கலைநுணுக்கத்தின் சிறுமாதிரியாகக் கருதிவந்தனர். அதை முடிந்தளவு துல்லியமாக வரைய முயற்சித்தனர். உடலின் இயக்கங்களைப் பற்றிய நம்முடைய தற்கால அறிவை வைத்துத்தானே அதன் படைப்புக்கும் வடிவமைப்புக்கும் தேவைப்படுகிற முழுநிறைவான திறமையை நம்மால் அதிகம் போற்றமுடியும்.

படைப்புக் கற்பனாசக்தியைப் பற்றியதென்ன? மயில் விரித்தாடும் தோகையில் உள்ள பகட்டான அமைப்பையும், ரோஜா மொட்டு நேர்த்தியாக மலர்வதையும், அல்லது பளபளக்கும் தேன் சிட்டின் அதிவேக பாலே நடனத்தையும் பாருங்கள். நிச்சயமாகவே அத்தகைய கலைத்திறன்தான், அதை வரைவதற்கு அல்லது போட்டோ எடுப்பதற்கு முன்னமே, கலை எனப்படுவதாகும். நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகையின் எழுத்தாளர் ஒருவர், டேக்கா லில்லி மலர்களின் நறுமணமுள்ள இழைகளைக் கண்டு ஆர்வமூட்டப்பட்டவராய், இவற்றின் நோக்கம்தான் என்ன என்று இளம் விஞ்ஞானி ஒருவரிடம் கேட்டார். அவருடைய சுருக்கமான பதில் இதுவே: “அவை கடவுளின் கற்பனாசக்தியை வெளிப்படுத்துகின்றன.”

இயற்கை உலகில் திறமையும் படைப்புக் கற்பனாசக்தியும் மட்டும் நிறைந்து காணப்படுவதில்லை, ஆனால் அவை மனித கலைஞர்களுக்கு இடைவிடா ஊக்கத்தின் ஒரு மூலமாகவும் இருந்திருக்கின்றன. ஆகஸ்ட் ரோடின் என்ற பிரபல பிரெஞ்சு சிற்பக் கலைஞர் இவ்வாறு சொன்னார்: “கலைஞன் இயற்கையின் அந்தரங்க தோழனாக இருக்கிறான். மலர்கள் தங்களுடைய தண்டுகளை ஒய்யாரமாக வளைப்பதன் மூலமும், ஒத்திசைவான வண்ணங்களோடு பூத்துக் குலுங்குவதன் மூலமும் அவனோடு உரையாடுகின்றன.”

இயற்கை அழகுக்கு நிகரான அழகிய வேலைப்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதில் தங்களுக்கு இருக்கும் குறைபாடுகளை சில கலைஞர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றனர். இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்று கருதப்படும் மைக்கலேஞ்சலோ, “மெய்யான கலை வேலைப்பாடு என்பது தெய்வீக பரிபூரணத்தின் நிழலாகவே இருக்கிறது,” என்று மனம்திறந்து சொன்னார்.

விஞ்ஞானிகளும் கலைஞர்களும் இயற்கை உலகின் அழகைக் கண்டு மயங்கலாம். “ஒரு உணர்ச்சியும் இல்லாத நாத்திகர்களுக்கும்கூட பொதுவாகவே, இயற்கைக்கான பயபக்தி என்று சொல்லப்படுகிற, அதன் ஆழ்ந்த ஞானம், வனப்பு, மென்னயம் ஆகியவற்றுக்கான கவர்ச்சியும் மதிப்பும் இருக்கிறது. இவை மதத்தின்மீதுள்ள பயபக்தியைப் போலவேதான் இருக்கிறது,” என்பதாக கடவுளின் மனது என்ற தனது ஆங்கில புத்தகத்தில், கணித இயற்பியல் பேராசிரியராக இருக்கும் பால் டேவீஸ் விவரிக்கிறார். இது நமக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்?

கலைத்திறனுக்கு பின்னிருக்கும் கலைஞர்

ஒரு கலை மாணாக்கன், கலைஞன் ஒருவனின் கலையைப் புரிந்துகொள்வதற்கும் போற்றுவதற்கும் அக்கலைஞனைப்பற்றி படிக்கிறான். அக்கலைஞனின் வேலைப்பாடு, அத்தனிநபரின் பிரதிபலிப்பு என்பதை அவனோ அவளோ உணர்கிறான் அல்லது உணர்கிறாள். இயற்கையின் கலையும்கூட அந்த இயற்கையைத் தோற்றுவித்தவரின், சர்வவல்லமையுள்ள கடவுளின் ஆளுமையைப் பிரதிபலிக்கிறது. “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, . . . தெளிவாய்க் காணப்படும்,” என்று விளக்கினார் அப்போஸ்தலன் பவுல். (ரோமர் 1:20) அதுமட்டுமல்லாமல், பூமியை உண்டாக்கியவர், யாரோ ஆள் அடையாளம் தெரிந்துகொள்ளப்படாதவர் அல்லவே அல்லர். பவுல் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த அத்தேனிய தத்துவஞானிகளிடம் சொன்னதுபோல, “[கடவுள்] நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:27.

கடவுளுடைய படைப்பிலுள்ள கலைநுணுக்க வேலைப்பாடு ஏதோ நோக்கமற்ற அல்லது தற்செயலான ஒன்றல்ல. நம்முடைய வாழ்க்கைக்கு வளமூட்டுவது மட்டுமல்லாமல், தலைசிறந்த கலைஞரும், சர்வத்தையும் வடிவமைத்தவருமான யெகோவா தேவனின் திறமைகள், கற்பனாசக்தி, மகத்துவம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகிறது. உயர்வான இந்தக் கலைஞரைப்பற்றி நன்கு அறிந்துகொள்ள இந்தக் கலை நமக்கு எவ்வாறு உதவலாம் என்பதை அடுத்துவரும் கட்டுரை சிந்திக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்