எமது வாசகரிடமிருந்து
விழித்தெழு!-வால் காப்பாற்றப்பட்டோம் சில வருடங்களுக்கு முன், தீப்பற்றிக்கொண்டால் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் கலந்தாலோசிக்கவும் வழக்கமான தீயணைக்கும் பயிற்சி செய்யவும் விழித்தெழு! (மே 8, 1984) சிபாரிசு செய்தது. என் கணவரும் நானும் அந்த ஆலோசனையை ஏற்று பின்பற்றினோம். இவ்வருட ஜனவரியில், எங்கள் வீட்டின் கீழ் அடுக்கில் பயங்கரமாக தீப்பற்றிக்கொண்டிருந்ததை நான் விழித்தெழுந்து பார்த்தபோது, நாங்கள் திட்டமிட்டதை நடைமுறையாக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு பயிற்சி செய்திருந்தோமோ அப்படியே செய்து, பத்திரமாக வெளியேறினோம். ஒரு விழித்தெழு! கட்டுரைக்கு நான் இவ்வளவு நன்றியுள்ளவளாக என்றுமே இருந்ததில்லை!
ஜி. இ., ஜெர்மனி
சாட்சிகள் மாத்திரமா நடுநிலை வகித்தனர்? உங்களுடைய மே 8, 1995-ன் இதழில் (“இது இனிமேலும் இரகசியமாயில்லை”) பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் தங்கள் நடுநிலைமையைக் காத்துக்கொண்ட ஆட்களாக, இனிமேலும் போரைக் கற்க அல்லது அதில் ஈடுபட மறுத்திருக்கின்றனர்.” இரண்டாம் உலகப் போரில் போரிட மறுத்த 11,996 மனிதரில், யெகோவாவின் சாட்சிகள் 940 பேர் மட்டுமே. மனசாட்சியின் நிமித்தம் மறுப்புத் தெரிவித்தவனாக நான் இருந்தேன். உங்களுடைய அறிக்கையில் இருந்த “மாத்திரம்” என்ற வார்த்தை, யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் இந்த நம்பிக்கையைக் கடைப்பிடித்தனர் என்ற தவறான கருத்தை அளிக்கிறது.
பி. பி., ஐக்கிய மாகாணங்கள்
சில தனிப்பட்ட நபர்கள் போரில் பங்கேற்க மறுத்திருக்கின்றனர் என்பதை நாங்கள் உணருகிறோம், இதை எங்கள் பிரசுரங்களில் ஒத்துக்கொண்டுள்ளோம். (காண்க: செப்டம்பர் 8, 1987 தேதியிட்ட ஆங்கில “விழித்தெழு!,” பக்கம் 7.) ஆயினும், கேள்விக்கிடமான கூற்று, ருவாண்டா, லைபீரியா, பால்கன்ஸ் மற்றும் இதர இடங்களின் தற்போதைய போரில் நடுநிலை வகிக்கத் தவறிய “கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் மதத்தினரை” குறிப்பாக குறிப்பிட்டதாகும். மத அமைப்புகளில், யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் நிலையாக நடுநிலை எடுத்திருக்கிறார்கள்.—ED.
மருத்துவமனை கருத்தரங்குகள் “மருத்துவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்குமிடையே உறவுகளை மேம்படுத்தும் கருத்தரங்குகள்,” (மார்ச் 22, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவுக்கு (HLC) நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனக்கு வயது 81, நான் வெளியே சென்றிருந்தபோது என் இடுப்பும் தோளும் முறிந்தன. நான் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே, உள்ளூர் குழு மருத்துவமனையில் இருந்தது. அந்த இடத்தில் என் குடும்பம் இல்லாத காரணத்தால், சகோதரரில் ஒருவர், அறுவை சிகிச்சையின்போது என்னுடன் இருந்தார். எத்தகைய ஓர் உதவி! HLC ஏற்பாடு யெகோவாவிடமிருந்து கிடைத்த உண்மையான ஓர் ஆசீர்வாதமாகும்.
ஏ. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்
மென்னோட்டத்தின் ஆபத்துக்கள் நான் வழக்கமாக ஓடுபவன். “மென்னோட்டத்தை அனுபவியுங்கள்—ஆனால் ஆபத்துக்களுக்கு உஷார்!” (மார்ச் 22, 1995) என்ற உங்களுடைய கட்டுரையின் காரணமாக, என்னுடைய உடன் கிறிஸ்தவர்களில் பலர் என்னை சமநிலை அற்றவனாக நோக்குவார்கள். எதிர்மறையான உள்ளர்த்தத்தை நீங்கள் முன்வைத்த காரணத்தால், அதை பலர் பற்றிக்கொண்டு ஓடுவதை நிறுத்திவிடுவார்கள் என்றும்கூட நான் அஞ்சுகிறேன். நீங்கள் வாதிட்டதைப்போல் ஓட்டக்காரர்கள் மாரடைப்புக்கு ஆட்படுவதில்லை. எண்டார்ஃபின் மூளையில் ஏற்படுகிறது, நீங்கள் குறிப்பிட்டதைப்போல் தசை நரம்புகளில் அல்ல.
கே. டி., ஐக்கிய மாகாணங்கள்
ஓடுவதை தடைசெய்ய வேண்டும் என்பது எங்கள் உள்நோக்கமல்ல. உடற்பயிற்சியின் நன்மைகளை நாங்கள் ஒத்துக்கொண்டுள்ளோம், ஆனால் வாசகரை சமநிலையோடு இருக்கவேண்டும் என்றும், நியாயமான வரம்புகளுக்கு அப்பால் தங்கள் உடல்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என்றும் உற்சாகப்படுத்தினோம். சில தனிப்பட்ட நபர்களுக்குத் தொலைதூர ஓட்டமானது எவ்வளவு ஆபத்தை அளிக்கக்கூடும் என்று வெறுமனே அறிவதற்கு முன், இன்னும் அதிக ஆராய்ச்சி செய்யவேண்டியிருக்கிறது. எண்டார்ஃபின்னைப் பொருத்தமட்டில், அவை “சிறப்பியல்பு முறைகளில் நரம்பு மண்டலம் முழுவதற்கும் விநியோகிக்கப்படுகிறது,” என்று “தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா” உறுதிசெய்கிறது. மாரடைப்பைப் பற்றியதில், தீவிரமான உடற்பயிற்சி மாரடைப்பின் பெரும்பாலான ஆபத்தைக் குறைப்பதாக “தி மெடிக்கல் போஸ்ட்” ஒத்துக்கொள்கிறது; ஆயினும், “உடற்பயிற்சியாளருக்கு அதிகரிக்கப்பட்ட ஆபத்தானது அவர்கள் உண்மையில் பயிற்சி செய்யும் அந்தச் சமயத்தில் இருக்கிறது,” என்று அது குறிப்பிடுகிறது.—ED.
அஞ்சல் தலை சேகரிப்பு “அஞ்சல் தலை சேகரிப்பு—கருத்தைக் கவரும் ஓய்வுநேர விருப்பவேலை மற்றும் பெரும் வாணிகம்” (ஜனவரி 8, 1995) என்ற கட்டுரை எனக்குப் பிடித்திருந்தது. எதையும்—அஞ்சல் தலைகளையும்கூட விழித்தெழு! அசட்டை செய்வதில்லை என்ற நம்பிக்கையை அடைந்தேன். ஓய்வுநேர விருப்பவேலையாக அஞ்சல் தலைகளை நான் சேகரிக்கிறேன், அந்தக் கட்டுரை அதிக முழுமையாக இருந்ததை உணர்ந்தேன். உங்களுடைய மதிப்புவாய்ந்த ஆலோசனைகளுக்காக உங்களுக்கு நன்றி.
ஆர். கே., வெனிசுவேலா