உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 1/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 1/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

புகையிலைத் தொழில்துறை “லட்சக்கணக்கில் சம்பாதிக்க லட்சக்கணக்கில் கொல்லுதல்” (மே 22, 1995) என்ற தொடர்கட்டுரைகள், தகவல்நிறைந்தவையாயும் அறிவூட்டுபவையாயும் இருந்தன. மேலட்டையிலிருந்த, வின்சென்ட் வான் காக் உருவாக்கிய (“சிகரெட்டை வைத்திருக்கும் ஒரு மண்டையோடு”) ஓவியம் அச்சுறுத்துவதாயிருந்தது! புகைபிடிப்பதை சிலர் நிறுத்துவதற்கும், அதை ஆரம்பிப்பதிலிருந்து சிலரை தடுப்பதற்குமாவது, ஒருவேளை இந்தப் படம் மாத்திரமே போதுமானதாயிருக்கும்.

எம். பி., ஐக்கிய மாகாணங்கள்

அமெரிக்க கான்சர் சங்கத்திற்கு வேலை செய்கிறதினால், இந்தக் கட்டுரைகளைப் படிப்பதற்கு குறிப்பாக நான் ஆர்வமாயிருந்தேன். புகையிலையில்லா கூட்டிணைவின் உள்ளூர் கிளையின் தலைவிக்கு ஒரு பிரதி அனுப்பினேன். அதன் எழுத்து மற்றும் ஆராய்ச்சி தரத்தினாலே கவரப்பட்டு, தன்னுடைய கூட்டாளிகளுக்குத் தர 35 பிரதிகளை அவர் கேட்டார்.

ஜே. ஓ., ஐக்கிய மாகாணங்கள்

ஏறத்தாழ மூன்று மாதங்களாக, நானும் என்னுடைய கணவரும் புகைபிடிப்பதை நிறுத்தியிருந்தோம். ஆனால், எனக்கு சிகரெட்டுகளின் மேல் இன்னும் நாட்டமிருந்து கொண்டிருந்தது. பின்னர் இந்தக் கட்டுரையைப் படித்தபோதுதான் எனக்குப் புரிந்தது, சிகரெட்டிலுள்ள கூட்டுப்பொருட்களில் சிலவற்றை குப்பைக்குழியில் கொட்டுவதுகூட சட்டவிரோதமான செயலாக ஆகுமளவுக்கு நச்சுத்தன்மை உடையவையாய் இருக்கின்றனவென்று! கெட்டது எதுவோ அதை வெறுக்க இது என்னை பலப்படுத்தியது.

எல். டி., தென் ஆப்பிரிக்கா

தோல் அழிநோயினால் பாதிக்கப்பட்டவர் “இப்போது மீயாவும் யெகோவாவுந்தான்” (பிப்ரவரி 22, 1995) என்ற கட்டுரையில் தோல் அழிநோயைப்பற்றிய விளக்கவுரைக்கு மிகவும் நன்றி. 18-வயதுள்ள நான், சுமார் இரண்டு வருடங்களாக இந்த வியாதியினால் அவதிப்பட்டுவருகிறேன். உலகத்தில் பல்வேறு பாகங்களிலுள்ள மற்ற சகோதர சகோதரிகள் கஷ்டத்தை எப்படித் தாங்கிவருகிறார்கள் என்பதையும், நம் சிருஷ்டிகர் எப்படி எப்போதும் நமக்கு அன்பாய் ஆதரவளிக்கிறார் என்பதையும் அறியவரும்போது உற்சாகமளிக்கின்றது.

ஜே. ஏ. ஒய்., இத்தாலி

பிரச்சினைப் பெற்றோர்கள் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் பெற்றோர் குறைவுபடுகையில்?” (மே 22, 1995) என்பதைப் போன்ற கட்டுரைக்காக நான் ஜெபம் செய்திருக்கின்றேன். கிறிஸ்தவ சபையிலிருந்து என் தாயார் சபைநீக்கம் செய்யப்பட்டபோது, நான் எவ்வளவு வருத்தப்பட்டும், புண்பட்டுமிருந்தேன்! முழுநேர ஊழியமான பயனியர் சேவையிலிருந்து ஏறக்குறைய விலகிவிட்டிருந்தேன். யெகோவாவினிடத்தில் அம்மா வைத்திருந்த உறவைப்பற்றி அதிகமாக கவலைப்படுவதைவிட ‘பயத்தோடும் நடுக்கத்தோடும் என்னுடைய இரட்சிப்புக்காக பிரயாசப்பட,’ இந்தக் கட்டுரை என்னை பலப்படுத்தியது. (பிலிப்பியர் 2:12) உங்களுக்கு மிகவும் நன்றி.

ஜே. பி., பிலிப்பைன்ஸ்

நான் ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவ பெண்ணாயிருந்தாலும், தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்குவரும் என் அப்பாவிற்கு மரியாதை கொடுப்பதற்கு மிகவும் கடினமாக உணர்ந்திருக்கின்றேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது என்னால் அழுகையை நிறுத்தமுடியவில்லை. இப்போது இதைப் படித்ததற்குப் பிறகு, என் அப்பாவின் மீதிருந்த எதிர்மறையான உணர்ச்சிகளும் எண்ணங்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. மனதிற்குள்ளே மிகுந்த அமைதியை உணருகிறேன்.

என். எம்., ஜப்பான்

கிறிஸ்டியன் சையன்ஸ் “மருத்துவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்குமிடையே உறவுகளை மேம்படுத்த கருத்தரங்குகள்” (மார்ச் 22, 1995) என்ற கட்டுரையில் வியாதிகளுக்கு கிறிஸ்டியன் சையன்ஸின் அணுகுமுறையைப்பற்றி ஒரு குறிப்புரை இருந்தது. நம் நம்பிக்கைகளிடையே உள்ள புரிந்துகொள்ளுதலை வளர்க்கும் நோக்கத்துடன் உங்கள் வாசகருக்கு என்ன உறுதிகூற விரும்புகிறேனென்றால், ஆவிக்குரிய சுகப்படுத்துதலின்மேல் சார்ந்திருப்பதினால், கிறிஸ்டியன் சையன்டிஸ்டுகளாகிய நாங்கள், கிறிஸ்து இயேசு எங்களுக்கு காண்பித்ததாக நாங்கள் நம்புகிறபடி, மனித வாழ்க்கையை உயர்வாகக் கருதி அதைப் பாதுகாக்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள மெய்ப்பிக்கப்பட்ட சுகப்படுத்துதல்களின் பதிவுகள், எங்களுடைய நோக்கம் உயிர்த்தியாகமல்ல, கடவுளின் வணக்கமே என்று தெளிவாக்குகின்றன. ஆவிக்குரிய, ஒழுக்கமுறையான, மற்றும் உடல்சம்பந்தப்பட்ட நலம்தானே அவற்றின் மாறா விளைவாக இருக்கின்றன.

எம். வி. டபிள்யூ., மானேஜர், கமிட்டீஸ் ஆன் பப்ளிகேஷன், தி ஃபஸ்ட் சர்ச் ஆஃப் கிறைஸ்ட், சையன்டிஸ்ட், ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் குறிப்புகளுக்காக உங்களுக்கு நன்றி. யெகோவாவின் சாட்சிகள் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையைச் சிறப்பித்துக் காட்டும் நோக்கத்திற்காகவே ஒரு மருத்துவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியிருந்தோம். தாங்கள் விரும்புகிறதை நம்புவதற்கான மற்றவர்களின் உரிமையை நாங்கள் மதிக்கும் அதே சமயத்தில், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை,” என்று இயேசு கிறிஸ்து உண்மையில் கூறினார். (மத்தேயு 9:12) தீமோத்தேயுவுக்கு ‘அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களை’ குறித்து பவுல் கூறினபோது ஆவிக்குரிய சுகப்படுத்துதலை அவர் பரிந்துரைக்காமல், ஒரு சாதாரணமான மருத்துவ சிகிச்சையைத்தான் அளித்தார். (1 தீமோத்தேயு 5:23) இதன்படி, மருத்துவ சிகிச்சைமுறையைக் குறித்த பைபிளின் நோக்குநிலை, கிறிஸ்டியன் சையன்ஸின் போதனைகளுக்கு முரணாக உள்ளது.—ED.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்