உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/8 பக். 3-4
  • எவரையாகிலும் நம்பிவிடலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எவரையாகிலும் நம்பிவிடலாமா?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பிக்கை எங்கும் கெடுக்கப்படுகிறது
  • மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கை அவசியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • யாரையாவது நம்ப முடியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • என் அப்பா-அம்மாவின் நம்பிக்கையை நான் எப்படிச் சம்பாதிக்கலாம்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/8 பக். 3-4

எவரையாகிலும் நம்பிவிடலாமா?

“அவர் எங்கள் பெற்றோர் பூரண நம்பிக்கை வைத்திருந்த, எங்கள் குடும்பத்தவரல்லாத சில பேரில் ஒருவராயிருந்தார். . . . அவர் எங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக ஒருபோதும் எதையாகிலும் செய்யாத நல்ல ஒரு நபராகவும் அக்கறையுள்ள ஓர் ஆளாகவும் தன்னைக் காட்டிக்கொண்டார். . . . என் வாழ்க்கையில் நான் முற்றிலும் நம்பிக்கை வைத்திருந்த சில பேரில் அவர் ஒருவராயிருந்தார்.”

அப்படித்தான் ஓரிளம் பெண், தன் குடும்ப மருத்துவரிடம் கொண்டிருந்த நம்பிக்கையை விவரித்தாள். வருந்தத்தக்க விதத்தில், அது தவறான இடத்தில் வைக்கப்பட்ட ஆபத்தான நம்பிக்கையாயிருந்தது. அவளது 16 வயதிலிருந்து இம்மருத்துவர் அவளைப் பாலின துர்ப்பிரயோகம் செய்தார். “அவர் என்னிடம் பொய்சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்,” என்பதாக அப்போது நீதிவழங்கிய நீதிமன்ற அதிகாரிகளிடம் அவள் கூறினாள்.—தி டோரன்டோ ஸ்டார்.

நம்பிக்கை எங்கும் கெடுக்கப்படுகிறது

நம்பிக்கையானது, ஓர் அழகிய ஆனால் மென்மையான பூவைப்போல், எளிதில் பறிக்கப்பட்டு காலின்கீழ் மிதிக்கப்படலாம். அது எங்கும் நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது! இங்கிலாந்தில் ஒரு கார்டினலுக்கும் ஒரு பேராயருக்கும் செயலராக இருந்த மைக்கல் கேன் சொன்னார்: “எல்லாருமே ஒரு பாதிரியை நம்பிவந்த ஒரு காலம் இருந்தது. அப்போது, குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அவரது கவனிப்பில் ஒப்படைப்பவர்களாயிருந்தனர். அதை நான் இப்போது எதிர்பார்க்கமாட்டேன். அந்த நம்பிக்கையிலிருந்து நாம் என்றென்றுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறோம்.”—தி கார்டியன் வீக்கென்ட்.

வணிகர்கள் போட்டியாளர்களை ஏமாற்றுகின்றனர். தந்திரமான விளம்பரதாரர்கள் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுகின்றனர். உணர்ச்சியற்ற ஓர் அலுவலர் தன் சொந்த நிறுவனங்களின் ஓய்வூதிய நிதிகளைச் சூறையாடி, தன் தொழிலாளர்கள் சேர்த்துவைத்திருந்த சேமிப்புப் பணத்தைக் கொள்ளையடித்தார். பணியாளர்கள் தங்களை வேலைக்கு அமர்த்தினவர்களை தொடர்ந்து கொள்ளையடிக்கின்றனர். உதாரணமாக, “நிறுவனங்களுக்குள்ளே நடைபெறும் திருட்டுகளால், மதிப்பிடப்பட்ட $2,000 கோடி பணத்தைக் கனடாவின் வணிக நிறுவனங்கள் ஓராண்டில் இழக்கின்றன” என்பதாக ஓர் அறிக்கை குறிப்பிட்டது.”—கனடியன் பிஸ்னஸ்.

எல்லா அரசியல்வாதிகளும் நம்பத்தகாதவரல்லர். ஆனால் பின்வருவதைப் போன்ற அறிக்கைகள் பல மக்களை ஆச்சரியமூட்டுவதாயில்லை: “ஃபிரான்ஸின் மிகவும் சர்ச்சைக்குரிய பெண் அரசியல்வாதிகளுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட இருவாரங்களுக்குப் பிறகு, மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள அரசாங்கத்தின் முயற்சிகளை நீண்டகாலமாக தடங்கல் செய்திருக்கும் அரசியல் வஞ்சகங்கள், குற்றச்சதிகள் ஆகியவற்றாலான முகமூடிகளை போலீஸார் சுக்குநூறாகக் கிழித்துக்கொண்டிருக்கின்றனர்.”—தி சன்டே டைம்ஸ், லண்டன்.

அடிக்கடி நெருங்கிய உறவுகளில் நம்பிக்கை தகர்க்கப்படுகிறது. கணவன்மாரும் மனைவிமாரும் தங்கள் விவாகத் துணைகளுக்கு துரோகம் செய்கின்றனர். பெற்றோர் பிள்ளைகளை துர்ப்பிரயோகம் செய்கின்றனர். பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றுகின்றனர். ஷ்டாஸி-யின், அதாவது முன்னாள் கிழக்கு ஜெர்மனியிலுள்ள இரகசிய போலீஸின் பொது ஆவணக் காப்பகங்கள் திறக்கப்பட்டபோது, நண்பர்களாகக் கருதப்பட்டிருந்த மக்களால் செய்யப்பட்ட “ஏமாற்றத்தின் படர்ந்து பரவுகிற அமைப்புமுறை” ஒன்றை அவை வெளிப்படுத்தின. நம்பினவரை ஏமாற்றும் ஒரு சூழ்ச்சிவேலையில், ஓர் அறிக்கை கூறுகிறது, “ஷ்டாஸியின் கொடூர அதிகாரம் வகுப்பறையில், பிரசங்கமேடையில், படுக்கையறையில், பாவமன்னிப்பறையிலும்கூட செலுத்தப்பட்டன.”—டைம்.

அயர்லாந்தில் ஒரு பத்திரிகையாளர் எழுதினார்: “நாம் அதிகாரபீடத்தில் வைத்தவர்களால் பொய்சொல்லப்பட்டிருக்கிறோம், தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம், பிரயோகப்படுத்தவும் துர்ப்பிரயோகப்படுத்தவும் பட்டிருக்கிறோம் மற்றும் அவமதிக்கப்பட்டிருக்கிறோம்.” (தி கெர்ரிமன்) தாங்கள் அவ்வளவு அடிக்கடி ஏமாற்றப்பட்டிருப்பதால், பலர் எவரையும் நம்புவதில்லை. நம் நம்பிக்கை தவறான இடத்தில் வைக்கப்படவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? அடுத்த இரு கட்டுரைகள் இக்கேள்வியைக் கூர்ந்தாராயும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்