எமது வாசகரிடமிருந்து
சர்வநாசம் சர்வநாசத்தைக் குறித்து எவரேனும் ஒளிவுமறைவின்றி பேசாமல் இருப்பது ஏன் என்று நான் எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். “சர்வநாசம்—தைரியமாக பேசியது யார்?” (ஆகஸ்ட் 22, 1995) என்ற தொடர் என் கேள்விக்குப் பதிலளித்துவிட்டது. யெகோவாவின் சாட்சிகள் தைரியமாகப் பேசினார்கள், ஆகவே என் உடன் சாட்சிகளைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!
சி. பி., ஐக்கிய மாகாணங்கள்
சர்வநாசம் என்ற பொருளைக் கையாண்டிருப்பதன்பேரில் நான்—ஓர் உறுப்பினராயிராதவன்—உங்களை வாழ்த்த விரும்புகிறேன். மனிதனுக்கு எதிராக மனிதனால் இழைக்கப்படும் மனிதத்தன்மையற்ற இத்தீய வெளிக்காட்டுதலை எதிர்மறையாக நீங்கள் கையாண்டிருப்பதுதான் நான் இதுவரை எதிர்ப்பட்டவற்றிலேயே மிகவும் அறிவொளியூட்டுவதாய் உள்ளது. அச்சமயத்தில் வருந்தத்தக்க விதமாய், உங்கள் உடன் சாட்சிகளின் தைரியமானது, இவ்வுலகம் சிறிதும் அறிந்திராத ஏதோவொன்றாகும்.
எல். பி., இங்கிலாந்து
என் தந்தை ஜாக்ஸன்ஹாவுஜனில் உயிரிழந்தார். என் மூத்த சகோதரனும் நாசி சிறைவாசத்தால் தன் உயிரை இழந்தார். யெகோவாவின் சாட்சிகள் அனுபவித்த நாசி துன்புறுத்தலைப்பற்றி எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. ஆகவே அந்தக் கட்டுரைகளுக்காக என் போற்றுதலைத் தெரிவிக்க நான் அசைவிக்கப்படுகிறேன். சபாஷ்!
எஃப். டி. ஜே., கனடா
அக்கட்டுரைகளால் நான் வெகுவாய் கவரப்பட்டேன். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே ‘மௌனத்தின் மத்தியில் ஒரு குரலாய்’ இருந்தார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். கம்யூனிஸ்ட்டுகளும் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்குமுன்பாக மக்களை அவருக்கெதிராக எச்சரித்தனர். பலர் சித்திரவதை முகாம்களில் போடப்பட்டனர்.
பி. டபிள்யூ., ஜெர்மனி
ஹிட்லருக்குப் பல அரசியல் எதிரிகள் இருந்திருந்தனர் என்பதை எவ்வித மறுப்புமின்றி “விழித்தெழு!” ஏற்றுக்கொள்ளுகிறது. என்றபோதிலும், நாசி ஆட்சியுடன் சேர்ந்து செயலாற்றிய பெரும்பான்மையான பிரிவுகளைத் தன்னுள் கொண்ட மத அமைப்புகளின் தோல்வியை அக்கட்டுரைகள் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுக்காட்டின. நாசிக்கள்தாமேயும் யெகோவாவின் சாட்சிகளைத் தங்களுடைய மூல மத எதிரிகளாகக் கருதினர். ஆகவே அந்த சாட்சிகள் சித்திரவதை முகாம்களில் தங்களுக்கென்றே சிறைக்கைதியின் அடையாளத்தை—அந்த இழிவான கருஞ்சிவப்பு முக்கோணத்தை—பெற்றிருந்த ஒரே மதத் தொகுதியாக விளங்கினர்.—ED.
ஜப்பானின் நிலநடுக்கம் “ஜப்பானின் சடுதியான பேரழிவு—மக்கள் எப்படி சமாளித்தனர்” (ஆகஸ்ட் 22, 1995) என்ற கட்டுரையை வாசிக்கையில் நான் அழுதுவிட்டேன். என் பிரியமான கிறிஸ்தவ சகோதரியை அந்த நிலநடுக்கத்தில் நான் இழந்துவிட்டேன். அவர்கள் மிகவும் வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்றும் நான் அவர்களை மீண்டும் காணமுடியும் என்றும் எனக்குத் தெரியும். சபையிலிருந்தும் சங்கத்திலிருந்தும் நாங்கள் பெற்ற எல்லாவித ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான உதவிக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாயிருக்கிறேன். ஆனாலும், அன்று நடந்ததை நினைக்கும்போது, இன்னும் நான் அழுகிறேன்.
டி. எம்., ஜப்பான்
சாட்சிகளின் பங்கில் ஒழுங்கமைப்போடு, விரைவாகச் செயல்பட்ட விதம் என்னை முற்றிலும் பிரமிக்கச் செய்தது. கொரியாவிலுள்ள சபையைச் சேர்ந்த சகோதரர்களிடமிருந்து அக்கறைமிகுந்த செய்தியை வாசிக்கையில், நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். நான் அத்தகைய கனிவான ஓர் அமைப்பின் பாகமாயிருந்ததற்காக மிகவும் சந்தோஷமடைந்தேன்.
எம். கே., ஜப்பான்
பாலின தொந்தரவு “இளைஞர் கேட்கின்றனர் . . . பாலின தொந்தரவு—நான் எவ்விதமாக என்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?” (ஆகஸ்ட் 22, 1995) என்ற உங்கள் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. எனக்கு வயது 17, நான் கிறிஸ்தவனல்லாத ஒரு பையனை பள்ளியில் சந்தித்தேன். நான் அவனை நம்பினேன், ஆனால் நாட்கள் கடந்துசெல்லுகையில் அவனும் அவனுடைய நண்பர்களும் கற்பைக் குலைக்கும் ஆலோசனைகளாலும் அச்சுறுத்தல்களாலும் என்னைத் தொந்தரவு செய்தனர். அச்சூழ்நிலையிலிருந்து விடுதலைபெறுவதற்காக அப்பள்ளியிலிருந்து நான் வெளியேற வேண்டியதாய் இருந்தது. இக்கட்டுரையிலிருந்து ஏராளமானவற்றை நான் கற்றுக்கொண்டேன். எதிர்பாலாரோடு பழக நேரிடுகையில் என்ன செய்ய வேண்டும் என்று இப்போது எனக்குத் தெரியும்.
டி. ஜி., போர்ச்சுகல்
என்னுடன் வேலைபார்க்கும் ஒருவனால் நான் பால் சம்பந்தமாக தொந்தரவு செய்யப்பட்டேன், அச்சுறுத்தப்பட்டேன். குழந்தைப்பருவத்தில் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டிருந்த நான், என்னைத் தற்காத்துக் கொள்ளுவதை எப்போதுமே கடினமாகக் கண்டதுண்டு. என்றாலும், என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்படியாக அவனைப் பலமுறை நான் கேட்டுக்கொண்டேன். கடைசியாக நான் அவனைப் பற்றி எங்களைப் பணியில் அமர்த்தியவர்களிடம் புகார் செய்துவிட்டேன், அதன் பிறகு அவன் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. அக்கட்டுரையை நான் உண்மையிலேயே போற்றுகிறேன். இப்பிரச்சினையை எப்படி கையாளுவது என்று பெண்கள் அறிந்திருக்க வேண்டும்.
வி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்