உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 8/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • டிபி—“சர்வலோக அவசரநிலை”
  • சோதோம், கொமோராவுக்காக தோண்டுதல்
  • சப்தமான இசையின் ஆபத்து
  • பெண்கள் மத்தியில் மோசமான நடத்தை அதிகரிப்பு
  • சர்ச்சுகளுக்குச் செல்லாதவர்களில் சிலர் இன்னும் அந்தரங்கத்தில் ஜெபிக்கின்றனர்
  • உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய “தொழில்”
  • முழுக்காட்டுதல் விற்பனைக்கு
  • பருவமுறாத தாய்மை
  • டிவி தரம் குறைகிறது
  • பைபிளின் ஞானத்தை பிஷப் சந்தேகிக்கிறார்
  • வெற்றியும் அவலமும்
    விழித்தெழு!—1997
  • காசநோயை எதிர்க்க புதிய கவசம்
    விழித்தெழு!—1999
  • காச நோய் திரும்பவும் தாக்குகிறது!
    விழித்தெழு!—1996
  • கொலைக் கூட்டாளிகள்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 8/8 பக். 28-29

உலகை கவனித்தல்

டிபி—“சர்வலோக அவசரநிலை”

ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ், மலேரியா, வெப்பமண்டல நோய்கள் ஆகிய எல்லா நோய்களாலும் இறக்கும் வயதுவந்தவர்களைவிட காசநோயினால் (டிபி) இறக்கும் வயதுவந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிடுகிறது. ஒவ்வொரு நொடியும், எங்காவது எவராவது டிபி-யினால் பாதிக்கப்படுகின்றனர். டிபி கிருமி இருமலின் மூலமாகவோ தும்மலின் மூலமாகவோ பரவக்கூடும். அடுத்த பத்து வருடங்களில், 30 கோடி ஜனங்கள் டிபி-யால் பாதிக்கப்பட்டு, மூன்று கோடி ஜனங்கள் அதனால் இறப்பார்கள் என்பதாக WHO எதிர்பார்க்கிறது. இன்னும் மோசமாக, மருந்துகளை எதிர்க்கும் வகையான டிபி தோன்றியிருப்பது வியாதியை குணப்படுத்த முடியாததாக்கும் அச்சுறுத்தலை அளிக்கிறது. WHO-ன்படி, “டிபி-யால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜனங்களில் 5-10% மட்டும்தான் உண்மையிலேயே வியாதிப்படுவர் அல்லது பாதிக்கப்படுவர். ஏனெனில், எதிர்ப்புச் சக்தி டிபி கிருமிகளை தடை செய்துவிடுகிறது.” இருந்தபோதிலும், பரவிவரும் இந்நோய் அவ்வளவு பயங்கரமானதாக இருப்பதன் காரணமாக WHO அதை ஒரு “சர்வலோக அவசரநிலை” என்பதாக அறிவித்தது. WHO-ன் சரித்திரத்திலேயே அப்படிப்பட்ட அறிவிப்பு அப்போதுதான் முதன்முறையாக வந்தது.

சோதோம், கொமோராவுக்காக தோண்டுதல்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பண்டைய சோதோம், கொமோராவை கண்டுபிடித்திருப்பதாக சொல்கின்றனர். ஏமான் பண்டைய பொருட்கள் இலாகாவோடு சேர்ந்து, யோர்தானில் அமைந்துள்ள, சவக்கடலுக்கு கிழக்கே உள்ள எல் லேசானில் விஞ்ஞானிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். ஒயிஸ்ட்ஜோட-கோரஸ்போன்டன்டென் என்ற ஸ்வீடன் நாட்டு செய்தித்தாள், கிறிஸ்துவுக்கு 1,900 வருடங்களுக்கு முன்பாக அழிக்கப்பட்ட கட்டிடங்களின் அழிவுப்பொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டது திகைப்பூட்டுவதாய் இருப்பதாக விவரிக்கிறது. சோதோமையும் கொமோராவையும் கண்டுபிடித்துவிட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். மண்பாண்டங்கள், சுவர்கள், கல்லறைகள், சக்கிமுக்கிக்கல் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகு, நகரங்கள் இயற்கை சேதத்தினால் அழிக்கப்பட்டன என்பதே அவர்களது முடிவாக இருந்தது. எனினும், அந்தப் பட்டணங்களில் காணப்பட்ட படுமோசமான ஒழுக்கக்கேட்டின் காரணமாக கடவுள்தாமே அந்த அழிவைக் கொண்டுவந்தார் என்பதாக பைபிள் காண்பிக்கிறது.

சப்தமான இசையின் ஆபத்து

ராக் இசைநிகழ்ச்சிகள், கேட்கும் ஆற்றலை நிரந்தரமாகவே இழக்கச் செய்யக்கூடும் என்பதாக நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த, செவிப்புல நிபுணரான க்ரிஸ்ட்யான் மையர்-பிஷ், 14-லிருந்து 40 வயதுவரை உள்ள 1,364 ஆட்களை ஆராய்ந்தார். இசைநிகழ்ச்சிகளுக்கு எப்போதும் செல்வோரில் அதிகமான சதவீதத்தினர், தற்காலிகமான செவி வியாதிகளால் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடித்தார். ராக் இசைநிகழ்ச்சிகள் பொதுவாக பெரிதும் விரும்பப்படுவதன் காரணமாக, இப்படிப்பட்ட கெடுதியான பாதிப்புகள் “இனியும் ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினையாக இல்லை, ஆனால் பொதுமக்களின் உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது” என்பதாக மையர்-பிஷ் எச்சரிக்கிறார்.

பெண்கள் மத்தியில் மோசமான நடத்தை அதிகரிப்பு

•ஆஸ்திரேலியாவின் இளவயது பெண்களில் அதிகரிக்கும் எண்ணிக்கையானோர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்பதாக ப்ரிஸ்பேன் சண்டே மெயில் அறிக்கை செய்கிறது. ஆஸ்ட்ரேலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாடர்ன் லேன்குவேஜஸின் டைரக்டரான பேராசிரியர் மேக்ஸ் ப்ரான்டெல், இவ்வாறு விளக்குகிறார்: “ஆண்களோடு ஒப்பிடுகையில் முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது பெண்கள் அதிகமாக குடிக்கின்றனர், அதிகமாக புகைபிடிக்கின்றனர். அவர்கள் அசிங்கமான வார்த்தைகளையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அசந்தர்ப்பவசமாக, அதன் ஒரு விளைவு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள சில பாரம்பரியமான கரிசனைச் செயல்கள் குறைந்துவிட்டிருக்கின்றன. இரண்டு பாலினத்தவருமே அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, முந்நாளைய காதல் உணர்ச்சிகள் விரைவில் மறைந்துவிடுகின்றன. முந்திய சந்ததியினரால் பயன்படுத்தப்பட்ட காதல் வார்த்தைகள் தற்கால சமுதாயத்தில் எந்த இடத்தையும் பெறுவதில்லை. இன்றுள்ள இளைஞர்கள் மத்தியில் படு இழிவான வார்த்தைகள் மிகவும் சர்வசாதாரணமானவையாய் இருப்பதை நான் காண்கிறேன்.”

•பிரேஸிலில், 1995-ல் பெண்களால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களின் வீதம் இரட்டிப்பாக உயர்ந்தது. ப்ரான்சிஸ்கூ பாஸிலே என்ற போலீஸாரின்படி, அதிகமான பெண்கள் தாக்குதல்களிலும் திருட்டுகளிலும் போதைப்பொருள் விற்பனையிலும்கூட சம்பந்தப்பட்டு வருகிறார்கள் என்பதாக ஓ எஸ்டாடோ டெ எஸ். பௌலூ என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அநேக பெண்கள் பார்ட்டிகளில் கோக்கைன் சீவல்களைப் புகைப்பதன்மூலம் தங்கள் குற்றவாளி வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். அங்கே போதைப்பொருள் விநியோகிப்பவர்கள் கோக்கைன் சீவல்களை அளிக்கின்றனர். பெண்கள் போதைப்பொருள்மீது சார்ந்திருக்க ஆரம்பிப்பது மாத்திரமல்லாமல் அடிக்கடி தாங்களே போதைப்பொருளை விநியோகிப்பவர்களாகவும் ஆகின்றனர். செய்தித்தாளின்படி, ஆன்டோன்யூ விலெலா என்ற தலைமை போலீஸ் அதிகாரி இவ்வாறு விளக்கினார்: “போதைப்பொருட்களை விற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆச்சரியமளிப்பதாய் இருக்கிறது . . . , மேலும் அதற்கு எந்த வயது வரம்பும் இல்லை.” வயதில் அநேகர் 20-களில் உள்ள இளம்பெண்கள், ஆனால் சிலர் 50-களில் இருக்கின்றனர்.

சர்ச்சுகளுக்குச் செல்லாதவர்களில் சிலர் இன்னும் அந்தரங்கத்தில் ஜெபிக்கின்றனர்

தி ஸிட்னி மார்னிங் ஹெரால்ட்-ன்படி, ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற சமுதாயமாக கருதப்படுகிறது. சர்ச்சுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அசாதாரணமான அளவுக்கு குறைந்துவருகிறது. எனினும், சில ஆஸ்திரேலியர்கள் இன்னும் தவறாமல் ஜெபிக்கிறார்கள் என்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிக்காட்டியது. வயதுவந்த ஐந்துபேரில் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது ஜெபிக்கிறார், மேலும் 11 சதவீதத்தினர் வாரத்திற்கு ஒருமுறையாவது ஜெபிக்கின்றனர் என்பதாக அந்தச் சுற்றாய்வு காண்பிக்கிறது. கிறிஸ்தவ ஆராய்ச்சி கூட்டுறவு, 1990-களில் மதத்தின் பேரிலான அதன் அறிக்கையில், சர்ச்சுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கவலைதரும் விதத்தில் குறைந்துவந்தாலும், “அநேக ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையில் இடைவிடாத ஆவிக்குரிய அம்சத்தைக் கொண்டிருக்கின்றனர்,” என்று விளக்குவதாய் தி ஹெரால்ட் சொல்கிறது.

உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய “தொழில்”

சட்டவிரோதமான போதைப்பொருள் வணிகத்தின் விற்பனை அளவு, ஒவ்வொரு வருடமும் $40,000 கோடியையும் (ஐ.மா.) தாண்டுவதாய் வளம்பெறுகிறது என்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் பத்திரிகையான உவர்ல்ட் ஹெல்த் குறிப்பிடுகிறது. இது, அதை உலகத்திலேயே மிக வேகமாக வளரும் “தொழிலாக” ஆக்குகிறது. அது உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய தொழிலாகவும் இருக்கிறது—போர் தளவாடங்கள் தொழிலுக்கு இரண்டாவதாகவும் பெட்ரோலியத்திற்கு முன்னதாகவும் இருக்கிறது. சென்ற 30 வருடங்களாக, சட்டவிரோதமான போதைப்பொருட்கள் கிடைப்பது ஆறு மடங்காக அதிகரித்திருக்கிறது. கரைமங்கள், டாக்டர் சீட்டு மருந்துகள், மதுபானம் போன்ற சட்டப்பூர்வமான பொருட்களின் துர்ப்பிரயோகம் அதே வீதத்தில் அதிகரித்துவருகிறது.

முழுக்காட்டுதல் விற்பனைக்கு

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லூத்தரன் சர்ச், அரசாங்கத்தோடு 300 வருடங்களுக்கும் மேலாக சர்ச்-அரசு உறவை அனுபவித்து வருகிறது. எனினும், ஜனவரி 1, 2000-த்திற்குள்ளாக இந்த சர்ச்-அரசு உறவு முழுமையாக துண்டிக்கப்படும் என்பதாக சர்ச் உத்தியோகஸ்தர்கள் சமீபத்தில் அறிவித்தார்கள். பல நூற்றாண்டுகளாக எல்லா ஸ்வீடன் மக்களும் பிறப்பில் சர்ச்சுடன் இயல்பாகவே இணைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், 1996-ன் ஆரம்ப காலம் முதற்கொண்டு, சர்ச்சில் அங்கத்தினர்களாவது முழுக்காட்டுதலின்மீது சார்ந்திருக்கிறது. ‘முழுக்காட்டுதலை விற்கும்’ குருமார் வீடுகளுக்கு செல்வதை உட்படுத்தும் ஒரு கடினமான விற்பனை திட்டத்தை தலைமை குரு அறிவிப்பதாக டாஜென்ஸ் இன்டுஸ்ட்ரி என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஸ்டாக்ஹோமில் உள்ள பெண் பாதிரி ஒருவர் “ஆக்ரமிக்கும் விற்பனை பிரச்சாரத்தை” நடத்திவந்ததாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதில் “பெரிதும் விற்பனையானவற்றில் ஒன்று முழுக்காட்டுதல்.” முழுக்காட்டுதலுக்கு கொண்டுவரப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 ஸ்வீடிஷ் க்ரானோர் ($15, ஐ.மா.) சேமிப்புடன்கூடிய பாங்க்புக் ஒன்றை ஒரு பாரிஷ் கொடுக்கும் என்பதாக மோ ப்ரா என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது.

பருவமுறாத தாய்மை

1994-ல் பிரேஸிலில், புவியியல் மற்றும் புள்ளிவிவரங்களுக்கான பிரேஸிலியன் இன்ஸ்டிட்யூட்டின்படி, 15 வயதுக்குட்பட்ட பெண்களில் 11,457 பேர் குழந்தையைப் பெற்றெடுத்தனர். சென்ற 18 வருடங்களில் இப்படிப்பட்ட பருவமுறாத மகப்பேறு 391 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே காலப்பகுதியில் ஜனத்தொகையின் வளர்ச்சி வெறும் 42.5 சதவீதத்திற்கு மாத்திரமே அதிகரித்திருக்கிறது. குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களில் 15-க்கும் 19-க்கும் இடைப்பட்ட வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கு அதிகரித்தது. “சுற்றுப்புறங்களும், தொலைக்காட்சியும், புத்தகங்களும், பத்திரிகைகளும் பருவமுறாத பாலுறவைத் தூண்டுகின்றன” என்பதாக ரியோ டி ஜனீரோ ஃபெடரல் யூனிவர்ஸிட்டியைச் சேர்ந்த டாக்டர் ரிகார்டூ ரேகோ பேர்ராஸ் விளக்குவதாக வெஜா பத்திரிகை சொல்கிறது. பெற்றோர்களும் பள்ளிகளும் அப்படிப்பட்ட காரியங்களின்பேரில் பிள்ளைகளுக்கு போதிப்பதை இன்னும் கடினமாகக் காண்கின்றனர் என்பதாக மற்றொரு நிபுணர் கருத்து தெரிவித்தார்.

டிவி தரம் குறைகிறது

தொலைக்காட்சியைப் பார்ப்போர், டிவி செக்ஸ் மற்றும் நிர்வாணத்தை பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமாக அனுபவிக்கின்றனர் என்பதாக லண்டனின் இண்டிபெண்டன்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கான ஒரு சுற்றாய்வின்படி, டிவி செக்ஸ் மற்றும் நிர்வாணத்தின்பேரிலான நடுத்தரவயது பெண்களின் சகிப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது. சுமார் 41 சதவீத முதிர்வயதுள்ள பெண்களும் இவ்வகையான டிவி நிகழ்ச்சியை ஆட்சேபிப்பதில்லை. இளைஞர்களுக்கிடையில், 75 சதவீதத்தினர் ஆபாசமான வார்த்தைகளை சகித்துக்கொள்கின்றனர், பத்து வருடங்களுக்கு முன்பு இது 69 சதவீதமாக இருந்தது. ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியினிடமாக உள்ள மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் இருந்திருக்கிறது. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நாற்பது சதவீதத்தினரும் 35-லிருந்து 55 வயதுக்குட்பட்ட ஆண்களில் 56 சதவீதத்தினரும் 18-லிருந்து 34 வயதுக்குட்பட்ட இளம் ஆண்களில் 70 சதவீதத்தினரும் தொலைக்காட்சியில் ஒத்தபாலினத்தவர் புணர்ச்சி வாழ்க்கைமுறை காட்டப்படுவதை வெறுக்கத்தகாததாக கருதுகின்றனர். இது, சென்ற பத்து வருடங்களில் 20 சதவீத அதிகரிப்பாகும்.

பைபிளின் ஞானத்தை பிஷப் சந்தேகிக்கிறார்

“கிறிஸ்தவர்களுக்கிடையே திருமணத்தையும் விவாகரத்தையும் அடக்கி ஆளும் சட்டங்கள்” என்ற தலைப்பின்பேரில் இந்தியாவில் ஒரு மாநாட்டில் பேசுகையில், பௌலூஸ் மார் பௌலூஸ் என்ற நெஸ்டாரியஸ் பிஷப், நன்னெறியின் நியதியாக பைபிளை எடுத்துக்கொள்ள முடியாது என்பதாக குறிப்பிட்டார். இண்டியன் எக்ஸ்ப்ரஸ்-ல் அறிக்கை செய்யப்பட்டிருப்பதன் பிரகாரம், விவாகரத்தின் பேரிலான பைபிள் போதனை மாற்றமுடியாதது என்று வலியுறுத்துவது, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவை புரிந்துகொள்வதில் நவீன நாளைய மனிதன் செய்திருக்கும் முன்னேற்றத்தை மறுப்பதாய் இருக்கும் என்பதாக அவர் சொன்னார். எக்ஸ்ப்ரஸ்-ன்படி, ஒவ்வொரு வசனத்திற்கும் இரண்டு எதிரிடை அம்சங்கள் உள்ளன, ஒன்று தற்காலிகமானதும் அழிந்துபோவதுமானது. அது, எழுதப்பட்ட காலத்திற்குரிய ஜனங்களின் கருத்துக்களையும் அந்நாட்டையும் சார்ந்தது. மற்றொன்று, நித்தியமானதும் அழிவில்லாததுமானது. அது எல்லா வயதினருக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்பதாக இந்து மத கல்விமான் ஒருவர் சொன்னதை பிஷப் மேற்கோள்காட்டினார். “பைபிளில், கொட்டையிலிருந்து பருப்பை நாம் வேறுபடுத்திக் கண்டறிய வேண்டும். நிலையான சத்தியத்தையும் கலாச்சார ஒருதலைப் பற்றையும் நாம் கண்டறிந்து . . . நம் சொந்த வாழ்க்கைக்கான வழிநடத்துதலை நாமே தீர்மானிக்க வேண்டும்,” என்பதாக பிஷப் சொன்னார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்