எமது வாசகரிடமிருந்து
அச்சுறுத்தப்படுகிற கிரகம் நான் எழுதுவது, “அச்சுறுத்தப்படுகிற நம் கிரகம்—அதை பாதுகாக்க முடியுமா?” என்ற தொடரைப் பற்றியது. (ஜனவரி 8, 1996) உற்சாகமளிக்கும் ஒன்றை வாசிக்க முடிந்தது மகிழ்வளிப்பதாய் இருக்கிறது. அத் தொடரின் மூன்றாவது கட்டுரை, சூழல்மண்டலம் அல்லது ஓஸோன் அடுக்கில் துளைகள் பற்றி நாம் கவலைப்படவேண்டியிராத பரதீஸுக்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது! என் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து அந்தப் பரதீஸில் வாழ நான் ஆவலாய் இருக்கிறேன்.
ஏ. சி., ஐக்கிய மாகாணங்கள்
காடழிப்பு, தண்ணீர் பற்றாக்குறை, அருகிவரும் உயிரினங்கள் போன்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறியிருந்த தகவல் நிறைந்த, பக்கங்கள் 8 மற்றும் 9-ல் இருந்த பெட்டி எங்களுக்குப் பிடித்திருந்தது. அக் கட்டுரைகள் நம் கிரகத்திற்கு இப்போதுள்ள கடுமையான சூழ்நிலையை நாங்கள் புரிந்துகொள்ளும்படி செய்தது. இக் கடுமையான பிரச்சினைக்கான ஒரே தீர்வு நம் சிருஷ்டிகரிடம்தான் இருக்கிறது என்பதை அறியவருகையில் நாங்கள் பாதுகாப்பாய் உணருகிறோம்.
ஓ. பி. மற்றும் எஃப். ஜே. ஓ., ஸ்பெய்ன்
ஜெசிக்காவின் பேச்சு நியமிப்பு ஜனவரி 8, 1996 இதழில், “ஜெசிக்காவின் பேச்சு நியமிப்பு” கட்டுரையை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அது அவ்வளவு உற்சாகத்தை எனக்கு அளித்தது! பிரசித்திப் பெற்ற ஓர் இளம் பெண் அவ்வளவு மகிழ்ச்சியுடனும் விசுவாசத்துடனும் சேவை செய்வதை நான் காண்கையில் அது என்னைப் பெருமிதமடையச் செய்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாட்சி பகரவேண்டிய தேவையை ஜெசிக்காவின் சரிதை எனக்கு நினைப்பூட்டுகிறது.
ஏ. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
வாழ்வில் நோக்கத்தைக் கண்டுபிடித்தேன் “குறிக்கோளற்ற நான் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டேன்” (ஜனவரி 8, 1996) என்ற கட்டுரை உண்மையிலேயே என் இதயத்தைத் தொட்டது. நான் அதை வாசிக்கையில் அது என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்ததுபோல் இருந்தது. நானும்கூட, எதிர்காலத்தைப் பற்றி ஒரு கிளர்ச்சியற்ற மனோபாவத்துடன் குறிக்கோளின்றி அலைந்துகொண்டிருந்தேன். ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்கு வரும்படி எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது, மேலும் பைபிளையும் படிக்க ஆரம்பித்தேன். யெகோவா எனக்குக் காட்டியிருக்கும் ஆச்சரியமான நம்பிக்கையை மற்றவர்கள் காண உதவி செய்யுமாறு, இப்போது நான் மகிழ்ச்சியாக முழு நேர பிரசங்க வேலையில் பங்கெடுத்து வருகிறேன்.
சி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை “மலட்டுத் தம்பதிகளுக்கு புது நம்பிக்கையா?” என்ற “உலகை கவனித்தல்” பகுதி என் கவனத்தைக் கவர்ந்தது. (செப்டம்பர் 22, 1995) அதை ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளரிடம் காட்டினேன்; அதில் கூறப்பட்டிருந்த செய்முறையை—நுண்ணிய ஊசியானது ஒரேவொரு ஆண் விந்துவை “பெண்ணுக்குள் இருக்கும்” ஒரு முட்டையின் மேல் வைக்கும் முறையை—தான் ஒருபோதும் கேள்விப்படக்கூட இல்லை என்று கூறினார்.
இ. கே., ஜெர்மனி
எமது பகுதி, பிரான்ஸ்-பிரஸ் என்ற பிரெஞ்சு செய்தி நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது, அதில் டேனிஷ் மருத்துவர், ஆனர்ஸ் நியூபோ ஆனர்ஸனால் கொடுக்கப்பட்ட ஒரு சொற்பொழிவு அடங்கியிருந்தது. எதிர்பாராத வகையில், சில விஷயங்கள் சரியாக அறிக்கை செய்யப்படவில்லை. உண்மையில், விந்துவை நுண்ணிய ஊசி மூலம் வெளியே வைப்பதாக, அதாவது, பெண்ணின் உடலுக்கு வெளியே செய்யப்பட்டதாக டாக்டர் ஆனர்ஸன் “விழித்தெழு!”-விடம் கூறினார். அதன்பிறகு, கருவுற்ற சினை முட்டை பெண்ணுக்குள் செலுத்தப்படும். இம் முறைப்படி, “யாரோ ஒரு கொடையாளரின் விந்துவுக்குப் பதிலாக கணவனின் ஒரு விந்துவைப் பயன்படுத்த முடிவதன் மூலம்—கூருணர்வுடைய ஒழுக்க மற்றும் மத சம்பந்தமான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்” என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தது சரியே. காரியம் அவ்வாறிருப்பினும், இம் முறையைப் பொறுத்ததில், ஒரு கிறிஸ்தவ தம்பதி தனிப்பட்ட தீர்மானத்தைச் செய்ய வேண்டியிருக்கும். (ஆங்கில “காவற்கோபுரம்” ஜூன் 1, 1981, பக்கம் 31-ஐக் காண்க.)—ED.
நிலையற்ற சிநேகிதி நான் எழுதுவது “இளைஞர் கேட்கின்றனர் . . . ஒரு நண்பர் பிரச்சினைக்குள்ளாகும்போது நான் என்ன செய்ய வேண்டும்?” (ஜனவரி 22, 1996) என்பதைப் பற்றியது. ஒரு வருடத்துக்கு முன்பு என்னுடைய மிகச் சிறந்த சிநேகிதிகளில் ஒருத்தி சபைநீக்கம் செய்யப்பட்டாள். அது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் அவளுக்குப் போதியளவு உதவி செய்யவில்லையென்றும், அவளோடு போதியளவு நேரம் செலவழிக்கவில்லையென்றும் ஒரு மிக நல்ல சிநேகிதியாய் இருக்கவில்லையென்றும் உணர்ந்தேன். அவள் சத்தியத்தில் இல்லாமல் போய்விட்டது என் குற்றமல்ல என்று நான் வாசித்தபோது, என் தோளிலிருந்து பெரியதொரு பாரம் இறக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன்!
எல். டி., ஐக்கிய மாகாணங்கள்
என் விஷயத்தில், எனக்கு நெருங்கிய நபராயிருந்தவர் என் சிநேகிதி மட்டுமல்ல, ஆனால் ஈடுசெய்யமுடியாத, கனிவான என் அம்மாவாக இருந்த அவர், “கேள்விக்கிடமான ஒரு வாழ்க்கைப்பாணியைப் பின்பற்ற” ஆரம்பித்தார். நான் முடிவில் அவரது நிலைமையைக் குறித்து சபை மூப்பர்களிடம் எடுத்துச்சென்றபோது, அவர் சபைநீக்கம் செய்யப்பட்டார். மூப்பர்களிடம் சொன்னதற்காக என்னையே திட்டிக் கொண்டிருந்தேன். அக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பொருத்துவதன் மூலம் நான் தவறாகக் கொண்டிருந்த குற்ற உணர்வுகளை இப்போது மேற்கொள்ள விரும்புகிறேன்.
ஐ. ஒய்., ஜப்பான்