உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 11/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 11/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

வேலையில்லா திண்டாட்டம் “வேலையில்லா திண்டாட்டம்—ஒரு தீர்வுண்டு” (மார்ச் 8, 1996) என்ற தொடர்கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நான் வேலைதேடி வெளியே சென்று, ஒன்றும் கிடைக்காமல் திரும்பியபோது அது வந்தது. பக்கம் 11-ல் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், வீட்டிற்குள்ளேயே வேலையை உருவாக்க நான் முயன்றேன், அதுவும் வெற்றிகரமாய் இருந்திருக்கிறது. உங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி!

ஜே. எம்., பிரெஞ்சு கயானா

சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை அக் கட்டுரைகள் விளக்கின. ஒரு கட்டுரை கூறிய விதமாகவே, ஒருசில மாதங்களுக்கு “எல்லாவித வேலைகளையும்” செய்வதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நான் உற்சாகத்தை இழக்கவில்லை. ஒரு நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருக்க முயன்றேன், கடைசியில் ஒரு நிலையான வேலை எனக்குக் கிடைத்தது. அச் சமயத்தின்போது, என் மனைவியின் உதவி எனக்கிருந்தது. அவள் கடைஜாமான் வாங்குவதில் வெகு சிக்கனமாய் இருந்தாள். கடினமான சூழ்நிலைகளில் பைபிள் நியமங்களைப் பொருத்த எங்களுக்கு உதவும் தகவலுக்காக மறுபடியும் நன்றி.

யூ. சி., இத்தாலி

நீங்கள் போட்டிருந்த “வீட்டில் வேலையை உருவாக்குதல்” என்ற பெட்டி எனக்கு விசேஷமாகப் பிடித்திருந்தது. நான் ஓர் ஒழுங்கான பயனியர், அதாவது ஒரு முழுநேர ஊழியர். பகற்பொழுதில் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் இல்லம் ஒன்றை நடத்துவதற்கு உரிமம் பெற்று இரண்டு ஆண்டுகளாக அதை நடத்திவந்தேன். பள்ளி செல்லும் முன்பும், சென்றுவந்த பின்பும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டேன், அவ்வேலையில் நல்ல வருவாய் கிடைத்தது. அவ்வாறு செய்தது, ஒரு நாளின் மத்திபப் பகுதியின்போது பிரசங்கிக்கச் செல்வதற்கு என்னை அனுமதித்தது, நான் ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேரம் மட்டுமே வேலை செய்தேன். தரமான கவனிப்பைக் கண்டுபிடிப்பது கடினமாகையால் பல பெற்றோர் நன்றியுள்ளவர்களாய் இருந்தனர். மற்றவர்களும் யெகோவாவைச் சேவிப்பதில் தங்களுக்கு உதவும் வகையிலான வேலையைக் கண்டுபிடிக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

டி. கே. எல்., ஐக்கிய மாகாணங்கள்

வேலை கிடைக்கப் பெறாதவர்கள், தனிப்பட்ட விதமாக இருக்கைகளுக்குத் திண்டுறை தைத்து இணைப்பது, முடி திருத்தும் வேலை, தனியார் கட்டடங்களைப் பராமரிக்கும் வேலை, இன்னும் அது போன்ற பிற வேலைகளை எடுத்துச் செய்யலாம் என்று நீங்கள் ஆலோசனை கூறினீர்கள். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அப்படிப்பட்டவர்கள் தங்கள் சேவைகளை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ விளம்பரம் செய்யலாம் என்றும் கூறினீர்கள். ஜெர்மனியில் இது சட்டவிரோதமானதாய் இருக்காதா?

ஆர். டி., ஜெர்மனி

சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒருவேளை இந்த ஆலோசனைகள் சில நாடுகளில் சட்டவிரோதமானவையாய் இருக்கலாம். ஆகவேதான் அப்படிப்பட்ட ஒன்றைத் துணிந்து செய்வதற்கு முன்பு, நிதி சம்பந்தமான மற்றும் வரிச் சட்டங்களைப் பற்றியெல்லாம் அறிந்திருக்க வேண்டிய தேவையை நாங்கள் பக்கம் 9-ல் குறிப்பிட்டுக் காட்டினோம். தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் கடமை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (ரோமர் 13:1)—ED.

மிருகக் காட்சிசாலை “பைபிளைப் படித்தல்—மிருகக் காட்சிசாலையில்!” (மார்ச் 8, 1996) என்ற கட்டுரையை நான் நிஜமாகவே அனுபவித்தேன். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகங்களைப் பற்றிய தகவல் எனக்குப் பிடித்திருந்தது. பைபிளில் வரிக்குதிரைகள் குறிப்பிடப்பட்டிருப்பது ஒருபோதும் எனக்குத் தெரியாமல் இருந்தது. எறும்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட பத்தியும் எனக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு வித்தியாசமான மிருகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு அக் கட்டுரை என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

எம். எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

என் அன்புத் தோழி “என் அன்புத் தோழி” (பிப்ரவரி 22, 1996) என்ற, சொக்கவைக்கும் ஒரு கட்டுரைக்கான என் உள்ளங்கனிந்த போற்றுதலைத் தெரிவிக்க விரும்புகிறேன். அப்படிப்பட்ட வயதுவித்தியாசம் இருந்தபோதிலும் ஓர் இனிய நட்பு இருந்துவந்ததாக வாசித்தது களிப்பூட்டுவதாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் வயதை ஒத்த வயதினரை மட்டுமே மிக நெருங்கிய நண்பர்களாகக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை அது விளக்கிக் காட்டுகிறது. அனுபவம், ஞானம், நகைச்சுவை ஆகியவற்றின் மூலம் அதிகத்தை அளிப்பதற்கென வைத்திருக்கும் பல வயோதிகர் உள்ளனர்.

எஸ். டி., இங்கிலாந்து

இளைஞரும் முதியவரும் நன்றாக ஒத்துப்போக முடியும் என்றும், முதிய தலைமுறையிடமுள்ள ஏராளமான அனுபவங்களிலிருந்து இளைஞர்கள் பலனடையலாம் என்றும் அக் கட்டுரை நிரூபித்தது. நானும்கூட ஒரு வயோதிக நண்பரிடம் கவனத்தைக் கவரும், இன்பமான நேரங்கள் பலவற்றை செலவிட்டிருக்கிறேன். சகாக்களின் அழுத்தம் போன்ற பிரச்சினைகளைக் கையாளுவதில் எனக்கு அதிக உதவியை அவர் செய்திருக்கிறார்.

டபிள்யூ. எஸ்., ஆஸ்திரியா

இதுவரை, வயோதிகரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நான் முயன்றதே இல்லை. அப்படிப்பட்டவர்களிடமிருந்து எதுபோன்ற காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது எனக்குப் புரிகிறது, எனவே இக் கட்டுரைக்காக நன்றி. ஞானத்தில் செறிந்தவர்களாய் இருக்கும் வயோதிகர் சிலரோடு ஒரு நெருங்கிய சிநேகிதியாக வேண்டும் என்று எனக்கு அதிக விருப்பம்.

ஆர். கே., ஜப்பான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்