உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமதுவாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஞாபகசக்தி “உங்கள் ஞாபகசக்தியை நீங்கள் மேம்படுத்தலாம்” (ஏப்ரல் 8, 1996) என்ற கட்டுரைக்காக என் மனமார்ந்த நன்றி. முன்பெல்லாம் நான் கூட்டுறவுகொண்டிருந்த உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை உறுப்பினர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்—ஆனால் வெற்றியடையவில்லை. சமீபத்தில் ஒரு பயணக் கண்காணியாக சேவை செய்யும்படி காவற்கோபுர சங்கத்தால் நான் நியமிக்கப்பட்டபோது அந்தப் பளு அதிகரித்தது. என் ஜெபங்களுக்கு இந்தக் கட்டுரை விடையளித்தது! கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பொருத்தியதன் மூலம், வெவ்வேறான எட்டு சபைகளில் நான் சந்தித்தவர்களாய் இருந்த பாதிப்பேரின் பெயர்களை என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது.

சி. ஈ. யு., நைஜீரியா

கடவுளைக் காணுதல் “கடவுள் தம்மைக் கண்டுகொள்வதற்கு எங்களை அனுமதித்தார்” (மார்ச் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. அதை வாசித்துக்கொண்டிருந்தபோது ஸ்காட் மற்றும் ஸ்டீவ் டேவிஸை நினைத்து என் கண்கள் ஆனந்தக்கண்ணீரால் நிறைந்தன. நான் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முழுநேர ஊழியத்தை என் வாழ்க்கைப்பணியாக்கிக்கொள்ள அவர்களுடைய அனுபவம் நான் எடுத்திருந்த தீர்மானத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.

ஜி. ஜி. இத்தாலி

இதைப் போன்ற ஆச்சரியமான, இதயத்தைக் கனிவிக்கும் ஓர் அனுபவத்தை நான் ஒருபோதும் வாசிக்கவில்லை! இந்த இரண்டு இளைஞரும் யெகோவாவைச் சேவிப்பதற்கு கடினமாய் முயலுவதைக் காண்கையில் அவர் நிச்சயமாகவே அங்கீகாரப் புன்னகை பூத்திருக்க வேண்டும். கடவுளுக்கு அவர்கள் செய்த தன்னலமற்ற சேவை மிகவும் போற்றப்படத்தக்கது.

ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்

ஸ்காட் மற்றும் ஸ்டீவ் கடவுளைத் தேடுவதைப் பற்றிய சரிதை உண்மையிலேயே தூண்டுதல் அளிப்பதாய் இருந்தது. நானும் கடவுளைத் தேடி பல சர்ச்சுகளுக்குச் சென்றிருந்தேன். ஆனால் திருப்தியடையவில்லை. கடவுளை மகிழ்விக்க வேண்டும் என்று மிகவும் விரும்பியிருக்கிறேன், ஆனால் எவ்வாறு மகிழ்விப்பது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். என் இதயம் தவித்துக்கொண்டிருந்ததை யெகோவா அறிந்திருந்தார் என்பதற்காக நான் எவ்வளவு நன்றியுடன் இருக்கிறேன்! யெகோவாவைச் சேவிப்பது என் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறது, எனக்கு நிம்மதியையும் தந்திருக்கிறது.

டி. சி., ஐக்கிய மாகாணங்கள்

கடவுளிடமிருந்து பாதுகாப்பு? யெகோவா என் ஜெபங்களைக் கேட்பவராய் இல்லை என்று நான் நினைத்ததால் சமீபத்தில் மனச்சோர்வு அடைந்திருந்தேன். என்றபோதிலும், “பைபிளின் கருத்து: உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்க்கலாமா?” (ஏப்ரல் 8, 1996) என்ற கட்டுரை, கடவுள் தம் நோக்கங்களுக்கு இசைவாகவே செயல்படுகிறார் என்றும், எப்பொழுதுமே நம் விருப்பங்களுக்கு இசைவாக செயல்படுவதில்லை என்றும் நான் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. நம் நம்பிக்கையை அவரில் வைப்பதற்கு நமக்கு உதவும் கட்டுரைகளை நீங்கள் எழுதுவதற்காக யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக.

சி. ஏ. ஏ., பிரேஸில்

பயன்படுத்தப்பட்ட கார்கள் “பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்குவது எப்படி” (ஏப்ரல் 8, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நானும் என் கணவரும் அப்போதுதான் ஒரு பயன்படுத்தப்பட்ட காரை வாங்கினோம். முதலில் அது கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பதாகவே தோன்றியது. ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிலிருந்து தேவையில்லாத ஒலிகளைக் கேட்க ஆரம்பித்தோம். ஆறு வாரங்களுக்குப் பிறகு அந்தக் கார் ஓடவேயில்லை. இந்த நல்ல தகவலை முன்னதாகவே நாங்கள் பெற்றிருந்தால், ஓடாதிருக்கும் ஒரு கார் எங்கள் வீட்டுப்பாதையில் வெறுமனே நின்றுகொண்டிருக்கும்படி இராதவாறு நாங்கள் செய்திருக்கலாம்.

எம். சி., ஐக்கிய மாகாணங்கள்

ஒரு தொழில்முறை ஆட்டோ டெக்னிஷனாக, நான் ஒரு குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். பயன்படுத்தப்பட்ட ஒரு காரை நீங்கள் வாங்குமுன், காரின் அடிப்பாகத்தில் உள்ள எண்ணும் மோட்டார் எண்ணும் பதிவுச்சீட்டிலுள்ள எண்களுடன் ஒத்திருக்கின்றனவா என்று சரிபாருங்கள். அவ்வாறு அவை ஒத்திருக்காவிட்டாலோ, அவை அழிக்கப்பட்டிருந்தாலோ, திருட்டுக்கார் ஒன்றை நீங்கள் வாங்குபவர்களாய் இருக்கலாம்!

எம். வி., செக் குடியரசு

அந்தப் பயனுள்ள ஆலோசனைக்காக நன்றி.—ED.

புகைவிடாத புகையிலை “இளைஞர் கேட்கின்றனர் . . .புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?” (ஏப்ரல் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. அந்தத் தலைப்பு என்னவோ புரியாததுபோல் எனக்குத் தெரிந்தது, அதுவே நான் அந்தக் கட்டுரையை வாசிக்கும்படி என்னைத் தூண்டியது. டோகோவில் இந்தப் பிரச்சினை எனக்கு ஏற்படாதபோதிலும், உலகின் வெவ்வேறு பகுதியிலுள்ள மற்றவர்களைப் பாதிக்கும் விதவிதமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள அந்தக் கட்டுரை எனக்கு உதவியது.

சி. ஹெச்., டோகோ

உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் வாசிப்பதில் எனக்குக் கொள்ளை விருப்பம். ஆனால் இது மிகச்சிறந்ததாய் இருந்தது. புகைவிடாத புகையிலையை உபயோகிக்கும் இளைஞர் இங்கு இருக்கின்றனர். ஆனால் அதனால் வரும் ஆபத்தைப் பற்றி இந்தக் கட்டுரை எச்சரித்தது. நான் ஒருபோதும் அதை உபயோகிக்கப்போவதில்லை.

பி. ஹெச். டபிள்யூ., பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்