உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 31
  • கைதேர்ந்த தோட்டக்காரன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கைதேர்ந்த தோட்டக்காரன்
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள்
    விழித்தெழு!—2017
  • எறும்பின் கழுத்து
    விழித்தெழு!—2016
  • ‘எறும்பினிடம் போ’
    விழித்தெழு!—1991
  • படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் ஞானம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 31

கைதேர்ந்த தோட்டக்காரன்

தென் அமெரிக்க இலைவெட்டி எறும்பு, தோட்டவேலையில் தன் சிக்கலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரியலர்களை பிரமிக்கச் செய்கிறது. உணவளிப்பதற்காக, இந்த மிகச் சிறிய பூச்சியினம், இலையைத் துண்டுதுண்டாக வெட்டுகிறது, காட்டில் கீழே விழுந்து கிடக்கும் குப்பைக்கூளங்களைச் சேகரிக்கிறது, பிறகு இவற்றை அதன் தரையடிப் புற்றுகளுக்குக் கொண்டுவருகிறது. இந்த எறும்பு, அதன் பூசண தோட்டத்தை வளப்படுத்துவதற்காக, இக் குப்பைகளைக் கூழ்போன்ற பொருளாக அரைக்கிறது. மிகச் சிறந்த பலன்களைப் பெறுவதற்காக, அந்தப் பயிரை சரியான தட்பவெப்பநிலையிலும் ஈரப்பதத்திலும் வைத்திருப்பது எப்படி என்பது இந்த இலைவெட்டிக்கு மரபுவழி வந்த உள்ளுணர்வு தெரிவிக்கிறது. பயிரிடப்படும் இடத்தை விரிவாக்குவதற்கு, ஏற்கெனவே பயிரிடப்பட்ட பயிர்களிலிருந்து சிறிய பாகங்களை வெட்டியெடுத்து, புதிய பயிர்களுக்காக தயார் செய்யப்பட்ட புதிய நிலத்தடி அறைகளுக்கு இது இடமாற்றம் செய்யும். இந்த இலைவெட்டி எறும்பு, பூசண வளர்ச்சியை அதிகரிப்பதற்காக கத்தரித்துவிடும் கலையிலும் கைதேர்ந்துள்ளது. புற்றுக்குத் தேவையான உணவுக்கு ஏற்றாற்போல் தன் முயற்சிகளை இந்தக் கைதேர்ந்த தோட்டக்கலை நிபுணன் மாற்றியமைத்துக்கொள்வதன் மூலம் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்திக்கொள்வதாக வேல்ஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

தோட்டவேலை என்பது, கடின உழைப்பை உள்ளடக்குகிறது; இந்த விஷயத்தில் இலைவெட்டி எறும்போ பிரமிக்கச் செய்கிறது. “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும் கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்” என்று பைபிள் சொல்வது ஆச்சரியத்துக்குரியதல்ல. (நீதிமொழிகள் 6:6-8) உண்மையிலேயே, இந்த இலைவெட்டி எறும்பின் உள்ளுணர்வு, அதைப் படைத்தவரான யெகோவா தேவனின் ஞானத்துக்குச் சான்று பகர்கிறது.—நீதிமொழிகள் 30:24, 25.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்