உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 3 பக். 16
  • எறும்பின் கழுத்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எறும்பின் கழுத்து
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள்
    விழித்தெழு!—2017
  • கைதேர்ந்த தோட்டக்காரன்
    விழித்தெழு!—1997
  • ‘எறும்பினிடம் போ’
    விழித்தெழு!—1991
  • ‘எறும்பினிடத்துக்குப் போ’
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—2016
g16 எண் 3 பக். 16

யாருடைய கைவண்ணம்?

எறும்பின் கழுத்து

An ant carries foliage in its mouth

எறும்புக்கு அதன் எடையைவிட பல மடங்கு அதிகமான எடையைச் சுமக்கிற சக்தி இருக்கிறது; இந்தத் திறமையைப் பார்த்து பொறியியல் வல்லுநர்கள் மலைத்துப்போகிறார்கள். அதன் திறமையைப் புரிந்துகொள்வதற்காக, சில எறும்புகளின் உடற்கூறு... உடலின் தன்மைகள்... மெக்கானிக்கல் செயல்பாடுகள்... இதையெல்லாம் கம்ப்யூட்டர் மாடல்களாக ஒஹையோ ஸ்டேட் யுனிவர்சிட்டி என்ஜினியர்கள் உருவாக்கினார்கள். இதற்காக, குறுக்குவெட்டு எக்ஸ்ரே படங்களை (மைக்ரோ சிடி ஸ்கேன்ஸ்) பயன்படுத்தினார்கள். அதோடு, பாரத்தைச் சுமக்கும்போது ஓர் எறும்பு உற்பத்தி செய்கிற சக்தியை மாடல்களாகவும் (சிமுலேஷன்ஸ்) பயன்படுத்தினார்கள்.

ஓர் எறும்பில் அதன் கழுத்துப் பகுதிதான் மிக முக்கியமான பகுதி. வாயில் கவ்வுகிற பொருளின் முழு பாரத்தையும் அதுதான் தாங்க வேண்டும். எறும்பின் கழுத்துக்குள் இருக்கிற மென்மையான திசுக்கள் அதன் உடம்பின் மேற்பகுதியில் இருக்கிற கடினமான ஓடுகளையும் தலையையும் ஒன்றாக இணைக்கின்றன. எப்படி? இரண்டு கைகளின் விரல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதைப் போல் அவை ஒன்றோடு ஒன்றாக இணைந்திருக்கின்றன. “கழுத்துப் பகுதியிலுள்ள கடினமான பொருள்களுக்கும் மென்மையான திசுக்களுக்கும் இடையே இருக்கிற இணைப்பு செயல்படுவதற்கு அதன் வடிவமும் அமைப்பும் (டிஸைன் & ஸ்ட்ரக்ச்சர்) மிக முக்கியம்” என ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் சொல்கிறார். “கடினமான பொருள்களும் மென்மையான திசுக்களும் தனிச்சிறப்புமிக்க விதத்தில் இணைந்து இருப்பதால் அவை உறுதியாக இருக்கின்றன; அதோடு, கழுத்துப் பகுதியிலுள்ள இணைப்பு பெரும் பாரத்தைச் சுமப்பதற்கு அதன் வடிவமைப்பு காரணமாக இருக்கலாம்.” எறும்பின் கழுத்துப் பகுதி எப்படி செயல்படுகிறது என்பதை நன்றாகப் புரிந்துகொள்வது... மனிதன் உருவாக்கும் ரோபோ மெக்கானிஸம்களை நன்கு வடிவமைக்க உதவியாக இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இவ்வளவு அருமையாக இருக்கும் எறும்பின் கழுத்து பரிணாமத்தால் தோன்றியதா? அல்லது வடிவமைக்கப்பட்டதா? ◼ (g16-E No. 3)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்