எமது வாசகரிடமிருந்து
பிணைக்கைதிகள்நான் ஒரு சிறைக்கைதி. என்னுடைய தண்டனை முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. “ஒரு சிறை எழுச்சியின்போது நாங்கள் பிணைக்கைதிகளாய் இருந்தோம்” (நவம்பர் 8, 1996) என்ற கட்டுரையை நான் இரண்டுமுறை வாசித்தேன். ஒவ்வொரு முறை அதை வாசிக்கும்போதும் என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வந்தது; மேலும் என் தொண்டை துக்கத்தால் அடைத்தது. யெகோவாவின் சாட்சிகள் இந்தச் சிறையை சந்திக்க வருவதை நான் எப்போதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அந்த சந்திப்புகள் மிகுந்த புத்துணர்ச்சியளிக்கின்றன!
ஜெ. கே., ஐக்கிய மாகாணங்கள்
உங்களுடைய கட்டுரையைக் குறித்து இதற்கு முன்னால் நான் உங்களுக்கு எழுதியது இல்லை, ஆனால் பிணைக்கைதிகளைப் பற்றிய கட்டுரை என்னுடைய விசுவாசத்தை மிகவும் கட்டியெழுப்புவதாக இருந்தது. யெகோவா, துன்பத்திலிருக்கும் தம்முடைய மக்களை பலப்படுத்துகிறார் என்ற புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அது எனக்கு கொடுத்தது.
கே. டி., ஐக்கிய மாகாணங்கள்
வழிநடத்துதல் “பைபிளின் கருத்து: யாருடைய வழிநடத்துதலை நீங்கள் நம்பலாம்?” (நவம்பர் 8, 1996) என்ற கட்டுரையை நான் உண்மையில் அனுபவித்தேன். அது எனக்கு மிகவும் ஆறுதலளிப்பதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது. நிறைய பேரைப் போல, கடந்த காலங்களில் வழிநடத்துதலுக்காக நானும் நம்பியிருந்தவர்கள் என் எதிர்பார்ப்புக்கிசைவாக இல்லாதபோது அதிகளவில் ஏமாற்றமடைந்திருந்தேன். தன்னுடைய தகப்பனுடைய கையைப் பிடித்துக் கொள்ளும் ஒரு பிள்ளையைப் பற்றிய உதாரணம் சட்டென்று என்னை அழ வைத்தது. ஏசாயா 41:13-ல் யெகோவா தம்முடைய மக்களின் ‘கையைப் பிடித்திருப்பதாக’ சொல்வதை அறிந்து கொள்வது இருதயத்திற்கு அதிக அனலூட்டுவதாக இருக்கிறது.
எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு 17 வயதாகிறது; சமீப காலங்களில் எனக்கு அதிகமான பிரச்சினைகள் உள்ளன. ஜெபிக்கும்படியும் ஆவிக்குரிய பிரகாரமாய் ஏதாவது வாசிக்கும்படியும் என்னுடைய நண்பர் என்னிடம் சொன்னார். “யாருடைய வழிநடத்துதலை நீங்கள் நம்பலாம்?” என்ற கட்டுரையை வாசித்தபிறகு, நம்பிக்கையை இழந்துவிடாமல் என்னுடைய பரலோகத் தகப்பனுடைய கையை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொள்ள வேண்டுமென்று நான் தீர்மானித்தேன்!
கே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்
சைகை மொழி “என் பிள்ளையோடு பேச, நான் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டேன்” (நவம்பர் 8, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் காதுகேளாத ஒரு மகனை உடைய ஒரு ஒற்றைப் பெற்றோர் தாய். அவனுக்கு இப்போது 24 வயது. ஸின்டி ஆடம்ஸ் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை என்னுடைய சொந்த அனுபவத்தால் நான் அறிந்திருக்கிறேன்; மேலும் அவர்கள் சாதித்திருப்பதன் பேரில் நான் அதிக மதிப்பை கொண்டிருக்கிறேன்.
ஹெச். பி., ஜெர்மனி
செவிடான மக்களுடன் பைபிள் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், சபையிலுள்ள காதுகேளாத சகோதரர்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்வதற்காகவும் சைகை மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கு இந்தக் கட்டுரை என்னைத் தூண்டியது.
பி. எல்., வெனிசுவேலா
நான் செவிடான ஒரு பருவ வயது பெண்ணுடன் பைபிளைப் படித்தேன். எங்கள் இருவருக்கும் சைகை மொழியில் அடிப்படை அறிவு மட்டுமே இருக்கிறபோதிலும், ஒருவரிடமிருந்து ஒருவர் அதிகத்தை கற்றுக் கொண்டோம். தன்னுடைய மகனுக்காக இந்த மொழியைக் கற்றுக் கொண்ட ஸின்டி ஆடம்ஸின் உறுதியைக் குறித்து வாசித்தது, என்னுடைய சமுதாயத்திலுள்ள காது கேளாத மக்களுடன் பைபிள் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக, இந்த அழகிய மொழியில் என்னுடைய திறமையை முன்னேற்றுவித்துக் கொள்ள என்னை உற்சாகப்படுத்தியது.
எஸ். டி., செ. மார்டின், நெதர்லேண்ட்ஸ் ஆன்டிலிஸ்
எனக்கும்கூட காதுகேளாத ஒரு பிள்ளை இருக்கிறான். ஆனால் நாங்கள் பேச்சுத்தொடர்பிற்காக வாய் அசைவு முறையைத் தேர்ந்தெடுத்தோம். இந்த முறையானது பேசுவதில் வளர்ச்சியடைவதற்கும் உதடு அசைவிலிருந்து வாசிப்பதற்கும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. இது என்னுடைய மகனுக்கு ஒரு சிறந்த தெரிவாக நிரூபித்திருக்கிறது. ஆரம்பத்தில் சபைக் கூட்டங்களிலிருந்து அவனால் சிறிதளவு நன்மையே பெற முடிந்தது. ஆனால் நானும், மற்றவர்களும் வாய்மொழியில் அதை சொல்லும்போது அதில் தன்னுடைய மனதை அவனால் செலுத்த முடிகிறது. அவன் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் இப்போது பேச்சு கொடுக்கிறான், மேலும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகவும் இருக்கிறான். அநேக ஆண்டுகளாக உழைத்தது இப்போது பலனளித்திருக்கிறது. அமெரிக்க சைகை மொழியானாலும்சரி, வாய் அசைவு முறையானாலும்சரி, பெற்றோரும் உள்ளூர் சபையினரும் அந்தப் பிள்ளையை உற்சாகப்படுத்துவதற்கு கடின முயற்சி எடுத்து, அவனோடு பேச்சுத்தொடர்பு கொண்டால் அது பலன்தரத்தக்கதாய் இருக்கும் என்று எங்களுடைய அனுபவம் காண்பித்திருக்கிறது.
எம். டி., ஐக்கிய மாகாணங்கள்