உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 9/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • ‘இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான்!’—சிறுநீரக வியாதியோடு என் வாழ்க்கை
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 9/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

சிறுநீரக வியாதி “ ‘இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான்!’—சிறுநீரக வியாதியோடு என் வாழ்க்கை” (நவம்பர் 22, 1996) என்ற கட்டுரை, எங்களுடைய வாழ்க்கையின் மிகமுக்கியமான கட்டத்திலிருந்த என் கணவரையும் என்னையும் நல்லவிதத்தில் உற்சாகப்படுத்தியது. அந்தக் கட்டுரையின் எழுத்தாளரைப்போல என் கணவரும் பெரிடோனியல் டயாலிஸிஸ் ஆரம்பித்திருக்கிறார்; அது கடினமானதாக இருந்திருக்கிறது. சில சமயங்களில் நம்பிக்கையற்றநிலை எங்களை மேற்கொள்கிறது. ஆனால் உங்கள் கட்டுரை, சிறுநீரக குறைபாடு தற்காலிகமானதே, மற்ற எல்லா வியாதிகளோடும்கூட அதுவும் சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் நீக்கப்படும் என்று எங்களுக்கு நினைப்பூட்டுவதன் மூலம் அதிக ஆறுதலளித்தது.

வி. க்யூ., இத்தாலி

வாழ்நாள் முழுவதும் வியாதியுடன் போராடிக்கொண்டிருந்தும் தன்னுடைய குடும்பத்தையோ வணக்கத்தையோ அசட்டை செய்யாத ஒரு மனிதனை பற்றி வாசித்தது, என்னை அழவைத்தது. நான் ஆரோக்கியமான, 18 வயதான முழுநேர ஊழியன்; என்னுடைய ஆரோக்கியத்தை எவ்வளவு அசட்டையாக எடுத்துக்கொள்கிறேன் என்பதை நான் உணருகிறேன். லி கார்டவேயின் விசுவாசம் மற்றும் மனநிலை பற்றி வாசித்தது உண்மையில் உற்சாகமூட்டுவதாக இருந்தது.

ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

1992-ல், 11 வயதாக இருந்தபோது, எனக்கு சிறுநீரக வியாதி எனக்கு இருக்கிறது என்று அறிந்தேன்; இறுதியில் என் சிறுநீரகம் செயலற்று போனது. நான் டயாலிஸிஸ் செய்யவேண்டியிருந்தது. அந்த முறையை பற்றி நீங்கள் அவ்வளவு நன்றாக விளக்கியதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்; ஏனென்றால் அது எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள ஜனங்கள் எப்போதுமே ஆவலுள்ளவர்களாக இருக்கின்றனர். நான் இன்று அனுபவிக்கும் நிலைமை எப்போதும் இங்கிருக்காது என்று வாசிப்பது எனக்கும் என் நண்பர்களுக்கும்கூட உற்சாகமூட்டுவதாக இருந்தது.

ஏ. எச்., ஐக்கிய மாகாணங்கள்

லி கார்டவே பற்றிய கட்டுரையை வாசித்ததிலிருந்து உணர்ச்சியால் என் தொண்டை அடைத்துக்கொண்டது. அவர் இறந்துவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை! அவருடைய அன்பான மனைவிக்கும் குடும்பத்திற்கும் என் கணவனும் நானும் எங்கள் அன்பை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அவருடைய பிரச்சினையோடு ஒப்பிடுகையில் என்னுடைய பிரச்சினைகள் ஒன்றுமில்லை என்பதை அவருடைய அனுபவம் எனக்கு உணர்த்தியது. எப்படிப்பட்ட அன்புள்ள, விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவ மனிதர்! அவருடைய முன்மாதிரியால் நான் உற்சாகமடைகிறேன்.

எஃப். எச்., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு வயது பத்து, எந்த வியாதியும் இல்லையென்றாலும் இப்படிப்பட்ட உற்சாகமூட்டும் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும். இந்தக் கடிதத்தை லி கார்டவே படிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஆனால் பரதீஸில் உயிர்த்தெழுதல் அடையும்வரை அவரால் அதை செய்யமுடியாது என்பதை அறிவேன்.

ஈ. டி., ஐக்கிய மாகாணங்கள்

பில்கிரிம்கள் “பில்கிரிம்களும் அவர்களது சுதந்திரப் போராட்டமும்” (நவம்பர் 22, 1996) என்ற உங்கள் கட்டுரையை நான் எவ்வளவாக போற்றினேன் என்பதை சொல்ல விரும்பினேன். பில்கிரிம்களை பற்றிய உண்மையை நான் பள்ளியில் கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உங்கள் கட்டுரைகளிலிருந்து நான் அதிகமான கல்வியை பெற்றுக்கொண்டேன்!

எஸ். பி., ஐக்கிய மாகாணங்கள்

மாற்றுவகை ராக் இசை எனக்கு 18 வயது. “இளைஞர் கேட்கின்றனர் . . . மாற்றுவகை ராக் இசை—அது எனக்குரியதா?” (நவம்பர் 22, 1996) என்ற கட்டுரை நன்றாக எழுதப்பட்டிருந்தது. மாற்றுவகை ராக் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் அந்தக் கட்டுரை என்னை புண்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் அதை படித்து முடித்தபோது, போற்றவேண்டுமென்றுதான் உணர்ந்தேன். நான் மனச்சோர்வால் கஷ்டப்படுகிறேன்; நான் தெரிவுசெய்யும் இசை என் மனச்சோர்வை அதிகரிக்கலாம் அல்லது அதை மேற்கொள்ள எனக்கு உதவிசெய்யலாம் என்பதை நான் உணருகிறேன். ‘உங்களை மகிழ்விக்கும் இசையை ஏன் கண்டுபிடிக்கக்கூடாது?’ என்று அந்தக் கட்டுரை கேட்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது. இந்த உற்சாகமூட்டும், நடைமுறையான ஆலோசனைக்காக உங்களுக்கு நன்றி.

ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்

அந்தத் தகவல் ஆச்சரியமூட்டும் விதம் திருத்தமாகவும், ஒருதலை சார்பற்றதாகவும் இருந்தது. இதில் சிலவகை இசை கவர்ச்சியூட்டுவதாக இருப்பதை நான் காண்கிறேன். மாற்றுவகை ராக் இசையை ஒட்டுமொத்தமாக குறைகூறாமல், எச்சரிப்புகள் கொடுத்ததற்கு நன்றி.

எஸ். சி., ஐக்கிய மாகாணங்கள்

மிருக கதைகள் மிருகங்களை பற்றி நீங்கள் வெளியிடும் கட்டுரைகளை படிக்க நான் விரும்புவேன். ப்ளாடிபஸை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை ஆகையால், “மர்மமான ப்ளாடிபஸ்” (டிசம்பர் 8, 1996) என்ற கட்டுரை என்னை வியப்படையச் செய்தது! அதே பிரதியில், மனிதர்களுக்கும் ஒரு மிருகத்திற்கும் இடையிலுள்ள இனிமையான நட்பு பற்றிய “இந்தக் கூடூ ஞாபகம் வைத்திருந்தது” என்ற கட்டுரையும் என் இதயத்தைத் தொட்டது. மனிதர்கள் மிருகங்களுக்கு அன்பையும் மரியாதையையும் காட்டும்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது!

எஃப். ஏ., பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்