உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 8/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • ரேவ்ஸ் வெறும் தீங்கற்ற விளையாட்டா?
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 8/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

விவாகரத்து “பிள்ளை பராமரிப்பு—சமநிலையான கருத்து என்ன?” (டிசம்பர் 8, 1997) என்ற தொடர் கட்டுரைகளுக்காக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். விவாகரத்திற்கு பின்பு, என் முன்னாள் கணவர் எங்கள் மகளிடம் எந்தளவு சொந்தம் கொண்டாடலாம் என்பதை தீர்மானிப்பதில் பிரச்சினைகள் இருந்தன. எனது புதிய கணவர் முடிந்தளவுக்கு அவரை அண்டவிடக்கூடாது என நினைத்தார். குழந்தையின் நலனே முக்கியம்; பெற்றோரின் அல்லது மாற்றாந் தாய்தகப்பனின் உணர்ச்சிகளோ அல்ல என விழித்தெழு! ஆலோசனை தந்து இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டியது.

எல். சி., வேல்ஸ்

எனக்கு ஒரே மகள். அவளுடைய அப்பாவுடன் தான் அவள் வாழ வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது என்னிடமிருந்து பறிக்கப்பட்டாள். அதனால், இந்தக் கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது. யெகோவா நமக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிப்பதை’ அறிவது உற்சாகத்தை தந்தது.—மத்தேயு 24:45, NW.

டி. பி., ஸ்விட்ஸர்லாந்து

பிள்ளை பராமரிப்பு பிரச்சினையோடு இரண்டு வருடங்களாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்; இந்த விழித்தெழு!-வின் அட்டையை பார்த்தவுடனே யெகோவாவுக்கு நன்றிக் கண்ணீர் வடித்தேன். இது ஒரு உணர்ச்சி சம்பந்தமான போராட்டமாக இருக்கிறது. இந்தக் கட்டுரை தகவல் நிறைந்ததாக இருந்தது. கருத்தாழமிக்க விதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதற்காக உங்களை மனமார பாராட்டுகிறேன்.

ஏ. எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

என் பெற்றோர் நான் குழந்தையாயிருந்தபோதே விவாகரத்து செய்து கொண்டார்கள். நான் இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவித்தேன். எனவே இவ்விஷயத்தில் வெளிவந்த இக்கட்டுரைகளை நான் எந்தளவுக்கு விரும்பி வாசித்தேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பிள்ளைகளை மனதில் வைத்து நீங்கள் இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய இருதயப்பூர்வமான நன்றி.

கே. டி., யுகோஸ்லாவியா

ஆல்ப்ஸ் மலை பூங்காக்கள் “ஆல்ப்ஸ் மலை தேசிய பூங்காக்களின் அழகு” (நவம்பர் 22 1997) என்ற கட்டுரைக்கு என் பாராட்டுக்கள். உண்மையைச் சொல்ல வேணுமென்றால், இயற்கையை பற்றி முன்பு வெளிவந்த கட்டுரைகளைப் பெரும்பாலும் கண்டும்காணாததுபோல் படிக்காமல் விட்டுவிடுவேன். ஆனால் இந்தக் கட்டுரையில் வந்த பிரமாதமான படங்களை பார்த்தவுடன் படிக்கத் தீர்மானித்தேன். படித்த பின்போ, இத்தகைய ஆர்வமூட்டுகிற இயற்கை கட்டுரைகளை வாசிக்காமல் போனதற்காக என்னையே நொந்து கொண்டேன்.

டி. எம்., உக்ரேன்

ஓரினப்புணர்ச்சி “பைபிளின் கருத்து—கிறிஸ்தவர்கள் ஓரினப்புணர்ச்சிக்காரரை வெறுக்கவேண்டுமா?” என்ற கட்டுரை வெளிவந்த டிசம்பர் 8, 1997, விழித்தெழு! பத்திரிகையை பெற்றபோது மிகுந்த ஆச்சரியமடைந்தேன். இது அதிக சங்கோஜமான விஷயம். ஆனாலும், சமநிலையோடு, அருமையாக எழுதப்பட்ட கட்டுரை இது.

எல். டபிள்யு., ஐக்கிய மாகாணங்கள்

சலிப்பு “உங்கள் வேலை சலிப்பூட்டுகிறதா?” (டிசம்பர் 22, 1997) என்ற கட்டுரையின் ஒரு பிரதியை என்னுடைய சூப்பர்வைசரிடம் கொடுத்தேன். அந்தக் கட்டுரை வெகு ஜோராக இருந்தது என்று அடுத்த நாள் காலை வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார். அவர் அதை என் சக ஊழியர்கள் சிலரிடம் படிப்பதற்கு கொடுத்தார். அந்தக் கட்டுரையின் ஒரு பிரதியை படிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்குமான அறையில் வைத்தார். இந்தக் கட்டுரை சமய சஞ்சீவியாய் திகழ்ந்தது.

வி. எல்., ஐக்கிய மாகாணங்கள்

ஆவலைத் தூண்டிய தகவல்களுக்கு நன்றி. எனக்கு 17 வயது. முழுநேர வேலை செய்கிறேன். என் வேலையை எப்படி இன்னும் அதிக இன்பமாக்கலாம் என்பதற்கு பிரமாதமான ஆலோசனைகளை இந்தக் கட்டுரை தந்தது. நன்றி!

இ. ஏ., இத்தாலி

இந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தொழில் பயிற்சியில் இரண்டாமாண்டு வேலை செய்கிறேன். என் வேலை படுபோர். அதை மகிழ்ச்சியாக செய்ய முடியவில்லை. இந்தக் கட்டுரை என் வேலையை மறுபடியும் ஜாலியாக செய்வதற்கு உதவியது.

ஐ. எஃப்., ஜெர்மனி

ரேவ்ஸ் எனக்கு 19 வயது, டெக்னோ மியூசிக் கேட்பது என்றால் எனக்கு ரொம்ப குஷி. ஆனால் “இளைஞர் கேட்கின்றனர் . . . ரேவ்ஸ் வெறும் தீங்கற்ற விளையாட்டா?” (டிசம்பர் 22, 1997) என்ற கட்டுரை என் உள்ளத்தை கொள்ளை கொண்டது. இதுவரை நான் படித்த கட்டுரைகளிலேயே இதுதான் இந்த இசையைப் பற்றி பிட்டுபிட்டு வைத்த முதல் கட்டுரை. “ரேவ்ஸ் உங்களுக்கு ஏற்றதா?” என்ற பகுதிக்காக விசேஷமாக உங்களுக்கு சபாஷ். கேள்விகளும் வேத வசனங்களும் எளிமையான, நியாயமான முடிவுக்கு வர உதவின.

ஏ. பி., ஸ்லோவேனியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்