உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 7/22 பக். 19-20
  • டுவிங்கி ஒரு நடமாடும் காது!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டுவிங்கி ஒரு நடமாடும் காது!
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • டுவிங்கி செய்யும் வேலைகள்
  • திறமையான பயிற்சி
  • சந்தோஷமான தோழமை
  • உங்கள் நாயிடம்—சிறார்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்களா?
    விழித்தெழு!—1997
  • மிருகங்கள் கடவுள் தந்த பரிசு
    விழித்தெழு!—2004
  • நாயின் மோப்ப சக்தி
    யாருடைய கைவண்ணம்?
  • ஐடிட்டராடு—பத்து நூற்றாண்டுகளாக ஸ்தாபிக்கப்பட்டது
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 7/22 பக். 19-20

டுவிங்கி ஒரு நடமாடும் காது!

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்.

பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வெள்ளை மற்றும் பிரவுன் கலந்த நிறம் கொண்ட ‘டுவிங்கி’ எந்த கவலையுமின்றி நிம்மதியாக அந்த பெண்மணியின் இருக்கைக்கு கீழே ஒய்யாரமாய் படுத்திருந்தாள். ஜேக் ரசல் டெரியர் இனத்தை சேர்ந்த டுவிங்கி, டோரத்தியின் உயிர்த்தோழி. அவளைப் பற்றி பாசத்துடன் டோரத்தி நினைவுகூருகிறார்: “இவள் இல்லாமல் நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. டுவிங்கி என்னிடம் வந்து ஒரு சில மாதங்களே ஆகின்றன, ஆனால் என் வாழ்க்கையின் தரத்தையே உயர்த்திவிட்டாள்!”

டுவிங்கி கட்டியிருந்த மஞ்சள் நிற பெல்ட்டை நான் கவனித்த போது, ஒரு கணம் மலைத்துப்போனேன். அதில் “காது கேளாதோருக்கான நாய்” என்று எழுதியிருந்தது. ‘என்னே ஓர் அதிசயமான விலங்கு!’ என்று எனக்குள் வியந்து கொண்டதும் எனக்கு நினைவிருக்கிறது. ‘இந்த நாய் அப்படி என்னதான் செய்யும்?’

இங்கிலாந்திலுள்ள லண்டனில், சென்ற வருடம் ஜூலை மாதம் நடந்த “கடவுள் காட்டும் ஜீவ வழி” என்ற சர்வதேச மாநாட்டிற்கு ஆஜராயிருந்த 44,000 பேரில் நாங்களும் இருந்தோம்; ஆகவே இது ஒரு எதிர்பாராத சந்திப்பாக இருந்தது. அந்த கூட்டத்தில் டோரத்தி ஒரு ஒலிப்பெருக்கியின் பக்கத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்படியானால் அந்த நாய் அவருக்கு எதற்கு? என்ற கேள்வி எழுந்தது. இதைப்பற்றி சாப்பாட்டு இடைவேளையில் பேசியபோது, டோரத்தி அவருடைய கதையை சொன்னார்.

டுவிங்கி செய்யும் வேலைகள்

டோரத்தி மூன்று வயதாயிருக்கையில் அவர் வாழ்க்கையில் வீசிய கீழ்வாதக் காய்ச்சல் என்ற புயலால் தாக்கப்பட்டு கேட்கும் சக்தியை இழந்தார். 23 வருடங்களுக்கு முன்பு தன் கணவன் இறந்தது முதற்கொண்டு தனிமையிலேயே வாழ்ந்து வந்தார். ஆனால் இப்பொழுது தனக்கு வயதாகி விட்டதால் வெறும் தோழமையைவிட அதிகம் தேவைப்பட்டதாக டோரத்தி சொல்கிறார். “என் வயதில் உள்ள காது கேட்காதவர்கள் தங்களுக்கு பாதுகாப்பே இல்லாதது போல் உணருவார்கள்” என்று சொன்னார். “எனக்கு வயது 74, நான் தனியாக ஒரு அப்பார்ட்மெண்டில் கண்காணிப்பாளரின் பாதுகாப்பில் வசித்து வருகிறேன். சில சமயம் அந்த கட்டிடத்தின் கண்காணிப்பாளர் என்னை பார்க்க வரும்போது என் வீட்டு அழைப்புமணி அலறும், ஆனால் எனக்கோ காது கேட்காது. ஆனால் அவரோ, எனக்கு உடல்நிலைதான் சரியில்லை என்று நினைத்துக் கொண்டு சில சமயம் எனக்கு தெரியாமல் நேராக வீட்டுக்குள்ளேயே வந்துவிடுவார். திடீரென்று அவர் என் முன்னே நிற்பதைப் பார்த்து பல முறை அதிர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது அந்தக் கவலையில்லை; அழைப்புமணி அலறியதும் டுவிங்கி என்னிடம் வந்து என் காலை சீண்டி என்னை கதவினிடம் கொண்டு போய் விடுகிறது. அதேபோல் ரொட்டி தயாரானதும் அவனிலிருந்து வரும் சத்தத்தை கேட்டதும் டுவிங்கி என்னிடம் ஓடி வந்து என்னை அங்கு கூட்டிகிட்டு போகிறது. புகை அல்லது நெருப்பு போன்ற ஆபத்தான சமயத்தில் டுவிங்கி என்னிடம் ஓடி வந்து என்னைத் தொட்டு, எச்சரிப்பை உணர்த்தியபின் படுத்துக்கொள்ளுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறாள். இப்படி அவள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் அவளுக்கு பரிசாக ஒரு பிஸ்கெட் கொடுத்து மகிழ்விப்பேன்.”

திறமையான பயிற்சி

நான் ஆவலுடன், “இந்த நாய் உங்களுக்கு எப்படி கிடைத்தது, இதற்கு பயிற்சி அளித்தது யார்?” என்று கேட்டேன். இதனால் டோரத்தி, காது கேளாதவர்களுக்கு காதாக சேவை செய்யும் நாய்களைப் பற்றி சில விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார். காது கேளாதவர்கள் சுதந்திரமாக செயல்படவும், அவர்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவிக்கவும், பிரிட்டனில் செயல்படும் ஒரு அறநிலையம் பற்றி சொன்னார். இது 1982 முதற்கொண்டு, பிரிட்டனில் உள்ள காது கேளாதவர்களுக்கு இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான நாய்களை கொடுத்து உதவியிருக்கிறது. ஒரு நாய் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, அதை புது எஜமான் தத்தெடுத்துக் கொள்கிறார், அதை அவருக்கு முற்றிலும் இலவசமாக இந்த அறநிலையம் வழங்குகிறது.

பெரும்பாலும் இந்த உஷாரான நாய்கள், தெருக்களிலிருந்தும், அந்த நாட்டில் இருக்கும் காப்பக மையங்களிலிருந்தும், நாய் வளர்ப்பவர்கள் அன்பளிப்பாக கொடுக்கும் சில நாய்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு நாயை பயிற்றுவிப்பதற்கு சுமார் 12 மாதங்கள் எடுக்கின்றன. இதனுடைய செலவுகள் ஒரு நிறுவனத்தாலோ, ஒருசிலருடைய கூட்டு நன்கொடையினாலோ ஆதரவளிக்கப்படுகிறது. அதேபோன்ற, குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக ஆவதற்கு உதவும் ஒரு கழகம், டுவிங்கியை டோரத்திக்கு அன்பளிப்பாக கொடுத்ததாக சொன்னார்.

சுமார் ஏழு வாரம் முதல் மூன்று வயது வரையுள்ள, ஒரு நாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஒருசில சத்தத்தை கேட்டவுடன் அதற்கேற்றவாறு செயல்படும்படி பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், முதலில் அந்த நாயின் வயதையும் திறமையையும் பொருத்து ஒரு சமூக சேவகரிடம் பயிற்சிக்காக சுமார் இரண்டு முதல் எட்டு மாதங்கள் விடப்படுகிறது. சமூகப்பயிற்சி என்று சொல்லும் போது அது வீட்டில் நடந்து கொள்ளவேண்டிய விதங்களைப் பற்றி சொல்லிக் கொடுப்பதையும் உட்படுத்துகிறது, அது முக்கியமாக பொது இடங்கள், போக்குவரத்து, குழந்தைகள் மற்றும் பிள்ளைகள் உட்பட வித்தியாசமான வயதுடையவர்களுடன் பழக நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் நோக்கம் அந்த நாய் எந்த வீட்டிற்கு சென்றாலும் அங்கு இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு நல்லபிள்ளையாக நடந்துகொள்ள அதற்கு பயிற்சி அளிப்பதேயாகும்.

கூடுதலாக, சில அமைப்புகள் விசேஷ தேவைகளையுடைய ஆட்களுக்கு உதவவும் இந்த நாய்களை பயன்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொண்டேன். அதுமட்டுமின்றி, கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கு கொடுக்கப்பட்ட பயிற்சியோடுகூட, ஒரு சில பொருட்களை பார்த்தவுடன் செயல்படவும், ஒருசில வாசனைகளுக்கேற்ப செயல்படவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உதாரணமாக, சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவிசெய்யும் நாய், அவருடைய தொலைபேசியை எடுக்கவும், கடிதங்களை கொண்டுவரவும், கடிதங்களில் ஸ்டாம்புகளை ஒட்டவும்கூட பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மற்றொரு நாய் 120 கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படவும், சூப்பர் மார்க்கெட் செல்லும்போது அலமாரிகளில் இருக்கும் கேன்களையும், பாக்கெட்டுகளையும் எடுத்துவரவும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. ஊனமுற்ற அதன் எஜமான், தனக்கு தேவையான பொருளை ஒரு லேசர் ஒளி மூலமாக சுட்டிக்காட்ட, அதை அந்த நாய் உடனே ஓடிப்போய் எடுத்து வருகிறது.

சந்தோஷமான தோழமை

“டுவிங்கியின் சேவையை அனைவரும் மெச்சுகிறார்களா?” என்று நான் கேட்டேன். “ஒரு கடைக்காரர் டுவிங்கியை அவர் கடைக்குள் அனுமதிக்கவில்லை, ஒருவேளை கடையில் சில உணவுப்பொருட்களை வெளியே வைத்திருந்ததால் அவர் அவ்வாறு நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். உண்மையில், டுவிங்கியின் உதவி எனக்கு எந்தளவுக்கு தேவை என்பதை அவர் புரிந்துகொள்ளாததால் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். மற்றபடி சாதாரணமாக யாரும் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.”

இப்படிப்பட்ட ஒரு நாய் வீட்டில் இருப்பதன் நன்மையை இப்போது நான் புரிந்து கொண்டேன். ஆனால் கேட்பதற்கு மற்றொரு கேள்வி இருந்தது, டோரத்தி உடன் கிறிஸ்தவர்களுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும் போது டுவிங்கி எந்த விதத்தில் உதவிசெய்கிறாள்? டோரத்தி சொல்கிறார் “என்னுடன் பேசுபவர் என்ன பேசுகிறார் என்று அவர் உதட்டசைவின் மூலமாகவே தெரிந்து கொள்வதாலும், மேலும் என்னிடம் காது மெஷின் இருப்பதனாலும் மற்றவர்களிடம் உரையாட முடிகிறது. இருப்பினும், ஜனங்கள் டுவிங்கியின் மஞ்சள் பெல்ட்டை பார்த்தவுடன் எனக்கு காது கேட்காது என்று உடனடியாக தெரிந்து கொள்கிறார்கள். ஆகையால், அவர்கள் என்னிடம் நேரடியாகவும் புரிந்துகொள்ளத்தக்க விதத்திலும் பேசுகிறார்கள். இதனால் எனக்கு காது கேட்காது என்று அவர்களுக்கு விளக்க வேண்டிய சங்கடமும் ஏற்படுவதில்லை, இது என்னுடைய வாழ்க்கையை எளிதாக்குகிறது.”

சிறிது நேரத்தில் மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் துவங்கவிருந்தது, டுவிங்கி மதிய நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குமுன் சிறிது வாக்கிங் போக ஆசைப்பட்டாள். நான் அங்கிருந்து விடை பெறுவதற்கு முன்பு, அவளை தட்டிக்கொடுக்க குனிந்தேன். டுவிங்கி தன் பிரகாசமான கண்களை திறந்து டோரத்தியை ஒருகணம் பார்த்துவிட்டு தன் வாலை மெல்ல அசைத்து எனக்கு டாட்டா சொன்னது. உண்மையிலேயே ஓர் கீழ்ப்படிதலுள்ள, பயனுள்ள குட்டி தோழிதான்​—⁠அடடா! என்ன ஒரு பொருத்தம்!

[பக்கம் 20-ன் படம்]

மாநாடுகளில் டுவிங்கியின் உதவிகள் பெரும் மதிப்புள்ளவை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்