கொடுத்த வாக்கை காப்பாற்றினார்கள்!
ஆன்டனியோ, உயர்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த மாணவன் தன் உடன் மாணவர்களுக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுக்க விரும்பினான். ஆகவே, அவன் நாஸி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கிறார்கள் என்ற வீடியோ-வை போட்டு காட்ட தன் சரித்திர ஆசிரியையிடம் அனுமதி கேட்டான். அது பயனுள்ளதாய் இருக்குமா என்பதைக் குறித்து சந்தேகித்தபோதிலும், அந்த ஆசிரியை மறுநாள் அந்த வீடியோவை போட்டு காட்டுவதாக ஒத்துக்கொண்டார்கள்.
ஆன்டனியோ இவ்வாறு கூறுகிறான், “ஆரம்பத்தில் ஆசிரியை அக்கறையில்லாமல் வீடியோவை கவனித்துக் கொண்டிருந்தார்கள்; ஆனால் சித்திரவதை முகாம்களில் யெகோவாவின் சாட்சிகளின் சரித்திரத்தைப் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த சரித்திராசிரியர்கள் விவரிப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டபோது அதிக கவனம் செலுத்தினார்கள். முடிவில் வீடியோவை போட்டு காட்டியதற்கு நன்றி கூறினார்கள்.”
அடுத்த பாடத்தின்போது, ஜெர்மனியில் பீபள்ஃபார்ஷர் என அப்போது அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைப்பற்றி விவரிக்க அந்த ஆசிரியை முயற்சித்தார்கள்; ஆனால் ஆன்டனியோ அதை விவரிப்பது தான் நல்லது என அவர்கள் தீர்மானித்தார்கள். ஆன்டனியோ சாட்சிகளின் கொள்கைகளில் சிலவற்றையும் சமூகத்தில் அவர்களது பங்கையும் விளக்கினான். அவன் இவ்விதமாக சொல்லி முடித்தான்: “ஜனங்கள் எங்களுக்கு செவிகொடுக்கவில்லையென்றாலோ, எங்கள் முகத்துக்கு எதிரே கதவை அடைத்தாலோ அல்லது எங்களுடைய பிரசுரங்களை படிக்கவில்லையென்றாலோ நாங்கள் எடுத்துச் செல்லும் மதிப்புள்ள செய்தியிலிருந்து அவர்கள் நன்மையடைய முடியாது என்பதில் சந்தேகமில்லை.”
இந்த கருத்தை ஆன்டனியோவின் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். மேலும் அந்த ஆசிரியை மாணவர்களுக்கு ஒரு தீர்மானத்தையும் முன் வைத்தார்கள்: கிடைக்கும் முதல் வாய்ப்பில், சாட்சிகள் சொல்வதை கவனித்து அவர்களுடைய பிரசுரங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். வகுப்பு முழுவதும் சிறிது நேரத்திற்கு அந்த வீடியோவைப் பற்றியே ஒரே பேச்சாக இருந்தது. அடுத்த சில நாட்களில் தன் உடன் மாணவர்களில் பலர் காவற்கோபுர பத்திரிகைகளுடன் வகுப்புக்கு வந்து ஒவ்வொருவரும் புன்சிரிப்புடன் “பார், நான் கொடுத்த என் வாக்கை காப்பாற்றிவிட்டேன்!” என சொல்வதை கேட்ட ஆன்டனியோவுக்கு ஏற்பட்ட மனநிறைவை நீங்கள் கற்பனைசெய்து பார்க்கலாம்.