சாட்சி கொடுக்கும் வீடியோக்களால் வரும் நன்மைகள்
1 “நடைபழகுவதற்கு முன்பிருந்தே எங்கள் மகன் அந்த வீடியோவை பார்த்திருக்கிறான். அதை திரும்ப திரும்ப பார்க்கிறான். நம் பிள்ளைகளில் யெகோவாவிற்கான அன்பை ஊட்டி வளர்க்கும் உபகரணங்கள் நம்மிடம் இருப்பது எவ்வளவு அருமையானது!” இந்தக் கிறிஸ்தவ பெற்றோர் எந்த வீடியோவை விவரித்தார்? நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் என்ற ஆங்கில வீடியோவைத்தான். சாட்சியாக இல்லாத ஒரு தாய் கிளை அலுவலகத்திற்கு 4,000-க்கும் அதிக ரூபாயை அனுப்பி குழந்தைகளுக்கான வேறு ஏதாவது வீடியோக்கள் உள்ளனவா என விசாரித்தார்; ஏனெனில் அவருடைய மகன் நோவா வீடியோவை வேறொருவர் வீட்டில் பார்த்திருந்தான். யெகோவாவின் அமைப்பு தயாரிக்கும் வீடியோக்கள் இளையோர், முதியோர் அனைவர் மீதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
2 குடும்பத்தில்: நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கின்றனர் என்ற ஆங்கில வீடியோவை சாட்சி குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து பார்த்தனர்; பிறகு அந்தத் தாய் இவ்வாறு கூறினார்: “அசாதாரணமான காரியங்களை சகிக்க சாதாரண மக்களுக்கு யெகோவா எவ்வாறு உதவினார் என்பதை குறித்து நாள் முழுவதும் சிந்தித்தேன்! இதை பற்றி யோசிக்கையில் என் சொந்த பிரச்சினைகள் எவ்வளவு சிறியவை என்பது புரிந்தது. எங்கள் மகள்களோடு சேர்ந்து இந்த வீடியோவை பார்த்தது, யெகோவா மீது எந்தளவுக்கு சார்ந்திருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு இன்னும் தெளிவாக உணர்த்தியது. வீடியோவை பார்த்த பிறகு அதை பற்றி அவர்களோடு கலந்துபேசினோம்; இவ்வாறு, எப்படிப்பட்ட அழுத்தங்களும் துன்புறுத்துதலும் வந்தாலும் அதை சமாளிக்க தயாராயிருக்க அவர்களுக்கு உதவியிருக்கிறோம்.”
3 பள்ளியில்: பள்ளியில் அளிக்க வேண்டிய ஓர் அறிக்கையின் பாகமாக, டீனேஜ் சாட்சி ஒருவன் தன் வகுப்பிலுள்ளவர்களுக்கு உறுதியாக நிற்கின்றனர் வீடியோவின் ஒரு பகுதியை போட்டுக் காட்ட முடிந்தது. தனக்கு சாட்சிகளை பிடிக்காது என அவனுடைய ஆசிரியை முன்பு கூறியிருந்தார். வீடியோவை பார்த்த பிறகு அவர் கூறியதாவது: “யெகோவாவின் சாட்சிகள் பற்றிய என் கருத்தை இது முற்றிலும் மாற்றிவிட்டது. அவர்கள் அடுத்த முறை என் வீட்டிற்கு வரும்போது அவர்கள் சொல்வதை கேட்டு, அவர்களோடு பைபிளை படிக்க ஆரம்பிப்பேன், இது நிச்சயம்!” நம்மீது அவருக்கிருந்த கருத்தை மாற்றியது எது? நமது ‘உண்மையான அன்பும் உத்தமமுமே’ என அவர் கூறினார்.
4 ஊழியத்தில்: ஒரு சகோதரி ஊழியத்தில் ஒரு பெண்மணியை சந்தித்தார்; அவர் நம்மையும் நம் நம்பிக்கைகளையும் பற்றி பல கேள்விகளை கேட்டபோதிலும் பிரசுரங்களை ஏற்க தயங்கினார். சகோதரி அடுத்த முறை சந்திக்கையில், யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு என்ற ஆங்கில வீடியோவை அந்தப் பெண்மணிக்கும் அவர் கணவனுக்கும் போட்டு காண்பித்தார். இருவருக்குமே அதிகம் பிடித்துவிட்டதால் பைபிளை படிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு அருமையான சாட்சி கொடுக்கப்பட்டதன் விளைவாக கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க ஆரம்பித்தனர்.
5 நமது வீடியோக்களை நீங்கள் நன்கு பயன்படுத்துகிறீர்களா?