உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g04 9/8 பக். 25
  • நவீன நாளைய நல்ல சமாரியன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவீன நாளைய நல்ல சமாரியன்
  • விழித்தெழு!—2004
  • இதே தகவல்
  • ஒரு சமாரியன் அன்புள்ள அயலானாக நடந்துகொள்கிறான்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • ஒரு நல்ல அயலான்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • அன்பைப் பற்றி ஒரு பாடம்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • அயலானுக்கு அன்புகாட்டுதல் கூடியகாரியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—2004
g04 9/8 பக். 25

நவீன நாளைய நல்ல சமாரியன்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அயலானுக்கு உதவிய நல்ல சமாரியன் பற்றிய பைபிள் கதையை நாம் எல்லாருமே கேட்டிருக்கிறோம். (லூக்கா 10:29-37) தேவையிலிருந்த தன் அயலானுக்கு அன்போடு உதவுவதற்கு ஒரு சமாரியன் எந்தளவுக்கு முயற்சி செய்தான் என்பதை இயேசு அந்தக் கதையில் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட நல்ல சமாரியர்கள் இன்றும் இருக்கிறார்களா? மெக்சிகோவிலிருந்து வந்த பின்வரும் அறிக்கையை கவனியுங்கள்:

பெட்டூவலும் அவருடைய குடும்பத்தாரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடு இன்னும் சில கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தது; அப்போது நெடுஞ்சாலையில் ஒரு கோர விபத்தைப் பார்த்தார்கள். உடனே, உதவி செய்வதற்கு காரை நிறுத்தினார்கள். விபத்தில் சிக்கியவர்களில் ஒரு டாக்டரும் இருந்தார்; தனது கர்ப்பிணி மனைவியையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி அவர்களிடம் கேட்டார். அவர்கள் அவ்வாறே செய்தனர்; கூடுதல் உதவி அளிப்பதற்கு பெட்டூவல் மறுபடியும் விபத்து நடந்த இடத்திற்குத் திரும்பினார்.

பெட்டூவல் விவரிக்கிறார்: “அதற்குள் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் அங்கு வந்திருந்தார்கள்; உயிர் சேதம் ஏற்பட்டிருந்ததால் டாக்டரை விசாரணைக்காக பிடித்து வைத்திருந்தார்கள். நான் அவருக்கு உதவியதற்கான காரணத்தை அவர் கேட்டபோது, நாங்கள் யெகோவாவின் சாட்சிகள்; எங்கள் அயலகத்தாரை நேசிக்க வேண்டும் என்று பைபிளிலிருந்து நாங்கள் படித்திருக்கிறோம் என்று பதிலளித்தேன். உங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் பற்றி கவலைப்பட வேண்டாம், அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் அவரிடம் சொன்னேன். நன்றியால் கண்ணீர் பொங்க, தன்னுடைய விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கும்படி அவர் என்னிடம் கொடுத்தார்.”

பெட்டூவலும் அவருடைய குடும்பத்தாரும் அந்த டாக்டரின் குடும்பத்தாரை தங்களோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று பல நாட்களுக்கு கவனித்து கொண்டனர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களோடு பெட்டூவல் பைபிள் படிப்பை ஆரம்பித்தார். காவலிலிருந்து டாக்டர் விடுவிக்கப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகளை புகழ்ந்து பாராட்டி தன்னுடைய நன்றியையும் தெரிவித்தார். தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்ற பிறகு பைபிள் படிப்பை தொடர்வதாக உறுதியளித்தார். தன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தால், பெட்டூவல் என்ற பெயரைத்தான் வைப்போம் என்றும் சொன்னார். பெட்டூவல் தொடர்ந்து சொல்கிறார்: “இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் சொன்னபடியே பைபிளை படித்து வந்தார்கள், மேலும் அவர்களுடைய குட்டிப் பையனுடைய பெயர் பெட்டூவல். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது!” (g04 8/8)

[பக்கம் 25-ன் படம்]

பெட்டூவல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்