உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g05 2/8 பக். 23
  • ஒரு விசித்திர ஜோடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு விசித்திர ஜோடி
  • விழித்தெழு!—2005
  • இதே தகவல்
  • புத்திசாலி கடல் பச்சோந்தி
    விழித்தெழு!—2004
  • ஆக்டோபஸின் அதிசயக் கைகள்
    யாருடைய கைவண்ணம்?
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • காக்-ஆஃப்-த-ராக்—அமேசான் காட்டின் ஆணழகன்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—2005
g05 2/8 பக். 23

ஒரு விசித்திர ஜோடி

ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் பவளப்பாறைக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பகுதியில் இரவு நேரத்தில் முக்குளிக்கும் கடல் வள விஞ்ஞானிகள் சமீபத்தில் முதன்முறையாக உயிருள்ள ஓர் ஆண் ப்ளாங்கெட் ஆக்டோபஸை பார்த்தனர். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

ப்ளாங்கெட் ஆக்டோபஸ் “உலகிலேயே ஆண், பெண் ஜோடிகளில் மாபெரும் உருவ வித்தியாசமுடைய பெரிய ஜீவி” என அழைக்கப்படுகிறது. இதற்கு நியாயமான காரணமிருக்கிறது. பெண் ஆக்டோபஸ் ஆறடி நீளம் வரை வளருகிறது. அதன் எடை 10 கிலோ வரை இருக்கும். ஆனால் ஆண் ஆக்டோபஸின் நீளம் 3 செ.மீ., எடை 0.3 கிராம் மட்டுமே! சொல்லப்போனால், பெண் ஆக்டோபஸுடைய கண்மணி அளவிற்குத்தான் ஆண் ஆக்டோபஸ் இருக்கிறது. அதாவது, ஆணைவிட பெண் 40,000 மடங்கு பெரியதாக இருக்கிறது. நுண்ணுயிரிகளைத் தவிர மற்ற ஜீவராசிகளுடன் ஒப்பிடுகையில் இந்தளவுக்கு உருவ வித்தியாசமுள்ள உயிரின ஜோடிகள் வேறெதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த ஆக்டோபஸ் கடலில் வாழ்கிறது. இன்று வரை, வலையில் சிக்கிய பெண் ஆக்டோபஸ்களும் செத்த ஆண் ஆக்டோபஸ்களும்தான் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

உருவத்தில் இந்தளவு வித்தியாசப்படும் இந்த ஜோடிகள் எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன? ஆண் ஆக்டோபஸின் எட்டுக் கைகளில் ஒன்று சற்று குழிவாக உள்ளது. பெண் ஆக்டோபஸைக் கண்டுபிடித்ததும், அது தன் கைக் குழியில் விந்துக்களை நிரப்புகிறது. பின்னர் அந்தப் பகுதி மட்டும் தனியே பிரிந்து சென்று பெண் ஆக்டோபஸின் உடலிலுள்ள பெரிய காலியிடத்தில் நுழைந்துகொள்கிறது. அந்த விந்துக்களை பெண் ஆக்டோபஸ் சினை முட்டைகள் மேல் பீச்சியடித்து கருவுறச் செய்யும் வரையில் அது அங்கேயே தங்கிவிடுகிறது.

அதனுடைய அளவை ஈடுகட்டும் வகையில், போர்ச்சுகீஸிய போர்வீரன் என்றழைக்கப்படும் ஜெல்லி மீன்களிடம் இருந்து திருடிய கொடுக்குகளை அது தன்னுடைய கைகளில் உள்ள உறிஞ்சு உறுப்புகளில் தற்காப்பு கருவிகளாக வைத்துக்கொள்கிறது. ஆனால் இக்கொடுக்குகள் அதை பாதுகாப்பதில்லை, ஏனெனில் இணை சேர்ந்து தன் கடமையை முடித்ததும் அது உயிரைவிட்டு விடுகிறது. இவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் வியப்படைந்ததில் ஆச்சரியமேதுமில்லை!

இந்த விசித்திர ஆக்டோபஸ்கள் உருவத்தில் இந்தளவு வித்தியாசப்படுவதற்கு எது காரணமாக இருந்தாலும் சரி, பைபிளில் காணப்படும் “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” என்ற வார்த்தைகள் பொய்யாகவில்லை.​—⁠சங்கீதம் 104:25. (g05 1/22)

[பக்கம் 23-ன் படங்கள்]

பெண்: நீளம் ஆறடி வரை; எடை 10 கிலோ

ஆண்: நீளம் மூன்று செ.மீ.; எடை 0.3 கிராம்

உருவளவில் பெண் ஆக்டோபஸுடன் ஒப்பிடுகையில் ஆண்

[படங்களுக்கான நன்றி]

பெண்: Photo P. Wirtz; ஆண்: போட்டோ. D. Paul

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்