உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 1/08 பக். 24
  • சிலந்தி பட்டுநூல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிலந்தி பட்டுநூல்
  • விழித்தெழு!—2008
  • இதே தகவல்
  • பட்டு—“துணிகளின் ராணி”
    விழித்தெழு!—2006
  • “இயற்கையிடமிருந்து விஞ்ஞானம் பாடம்படிக்கிறது”
    விழித்தெழு!—1994
  • இயற்கையை பார்த்து பாடம் பயில்தல்
    விழித்தெழு!—2000
  • பரிணாமம் தர்க்கரீதியானதா?
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—2008
g 1/08 பக். 24

யாருடைய கைவண்ணம்?

சிலந்தி பட்டுநூல்

◼ அது பஞ்சைவிட மென்மையானது என்றாலும், எடைக்கு எடை ஸ்டீலைவிட பலம் வாய்ந்தது. ‘ஆர்ப் வீவர்’ எனப்படும் சிலந்திகள் உற்பத்தி செய்யும் பட்டுநூலை பல பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்திருக்கிறார்கள். வட்ட வட்டமாக வலை பின்னும் இந்தச் சிலந்திகளால் பின்ன முடிந்த ஏழு வகையான பட்டுநூல்களில் வலிமை வாய்ந்த ‘ட்ராக்லைன்’ பட்டுநூலே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக உடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பட்டுப்புழு இழைகளைவிட கெட்டியிலும் நீர் உட்புகாமல் காக்கும் தன்மையிலும் இது சிறந்து விளங்குகிறது.

யோசித்துப் பாருங்கள்: ‘கெவ்லார்’ போன்ற செயற்கை இழைகளை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதற்கு அதிக வெப்பமும் கரிம கரைமங்களும் அவசியப்படுகின்றன. மாறாக, சிலந்திகளோ சாதாரண அறையின் வெப்பத்தில் தண்ணீரைக் கரைமமாகப் பயன்படுத்தி பட்டுநூலைத் தயாரித்துவிடுகின்றன. மேலும், இப்படி உருவாகும் ‘ட்ராக்லைன்’ பட்டுநூல் கெவ்லாரைவிட வலிமையானது. இந்த ‘ட்ராக்லைன்’ பட்டுநூல் வலையை கால்பந்தாட்ட மைதானம் ஒன்றின் அளவுக்கு விரிவாக்கினால், பறந்து செல்லும் ஜம்போ ஜெட்டைகூட இந்த வலையால் நிறுத்திவிட முடியும்!

ஆம், இந்தப் பட்டுநூலின் கெட்டியான தன்மையைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியக்கிறார்கள் என்றால் அதில் ஆச்சரியமேதுமில்லை. “இந்தளவு கெட்டியான தன்மையை உடைய இழைகளை விஞ்ஞானிகளால் தயாரிக்க முடிந்தால், குண்டு துளைக்காத ஆடைகளிலிருந்து தொங்கு பாலத்தின் கம்பிகள் வரையாக பல வகையான பொருள்களில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவார்கள்” என்பதாக ஸைன்ஸ் நியூஸ் பத்திரிகையில் எழுதுகிறார் இமே கன்னிங்ஹாம்.

ஆனால், இந்த ‘ட்ராக்லைன்’ பட்டுநூலை செயற்கையாக உற்பத்தி செய்வதொன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஏனென்றால், சிலந்தியின் உடலுக்குள் சுரக்கப்படும் இந்தப் பட்டுநூல் எப்படி உற்பத்தியாகிறது என்பதுபற்றி இதுவரை முழுமையாக அறியப்படவில்லை. “நம் வீட்டின் அடித்தளங்களில் சிலந்திகள் இயல்பாகச் செய்துவரும் ஒரு விஷயத்தை புத்திக்கூர்மையுள்ள அநேகர் செய்துபார்க்க முயலுவதை யோசிக்கையில், அது நம்மை மிகவும் சிறுமையாக உணர வைக்கிறது” என்று உயிரியலாளர் ஷெரல் ஒய். ஹாயாஷீ சொல்வதாக கெமிக்கல் அண்ட் இன்ஜினீரிங் நியூஸ் பத்திரிகை மேற்கோள் காட்டியது.

என்ன நினைக்கிறீர்கள்? சிலந்தியும் ஸ்டீலைப்போல் வலிமை வாய்ந்த அதன் பட்டுநூலும் தற்செயலாக வந்தவையா, அல்லது புத்திக்கூர்மையுள்ள படைப்பாளர் ஒருவரின் கைவண்ணத்தில் உருவானவையா? (g 1/08)

[பக்கம் 24-ன் படம்]

சிலந்தி பட்டுநூல் வெளிப்படும் காட்சி நுண்ணோக்கியில்

[படத்திற்கான நன்றி]

Copyright Dennis Kunkel Microscopy, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்