உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 4/12 பக். 3
  • எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்!
  • விழித்தெழு!—2012
  • இதே தகவல்
  • நேர்மை வெற்றியின் ஏணிப்படி
    விழித்தெழு!—2012
  • முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளுக்குக் கனிவான, அன்பான கவனிப்பு தேவை
    விழித்தெழு!—1990
  • சாமுவேலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • நேர்மைக்கு வரும் சவால்கள்
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—2012
g 4/12 பக். 3

எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்!

ஹாங் காங்கில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார், டேனி.a ஒரு முறை அவர், தன்னுடைய கம்பெனிக்குப் பொருள்களை சப்ளை செய்யப் போகும் தொழிற்சாலைக்குச் சென்றார். அந்தப் பொருள்கள் தன்னுடைய கம்பெனி எதிர்பார்க்கும் அளவுக்குத் தரமாக இல்லை என்று சொல்லிவிட்டார். பிறகு, அந்தத் தொழிற்சாலை மானேஜர் அவருக்கு விருந்து தந்து, ஒரு ‘கவரை’ அவரிடம் நீட்டினார். அதைத் திறந்தால் ஆயிரக்கணக்கான டாலர் பணம்—அது லஞ்சம்! டேனியுடைய ஒரு வருட சம்பளத்துக்குச் சமம்.

● இது போன்ற அனுபவம் நிறையப் பேருக்கு இருக்கிறது. இன்று உலகில் எங்கும் எதிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. உதாரணத்திற்கு, 2001-க்கும் 2007-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு பெரிய ஜெர்மன் தொழில் நிறுவனம் கான்ட்ராக்ட்டுகளைப் பெறுவதற்கு 140 கோடி டாலர் பணத்தை (இந்திய மதிப்புபடி சுமார் 7,302 கோடி ரூபாய்) லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

பிரபல தொழில் நிறுவனங்கள் செய்த மோசடிகளின் விளைவாக ஊழலைத் தடுக்க சமீபத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; இருந்தாலும் மொத்தத்தில் நிலைமை மோசமாகிக்கொண்டுதான் போகிறது. ஊழலை ஒழிக்கப் பாடுபடும் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு 2010-ல் செய்த ஆய்வின்படி, உலகெங்கும் “கடந்த மூன்று வருடங்களில் ஊழல் அதிகரித்திருக்கிறது.”

ஊழல் ஏன் இந்தளவுக்கு அதிகமாகிவிட்டது? நேர்மையாக வாழ முடியுமா? முடியும் என்றால், எப்படி? இந்த விஷயத்தில் பைபிள் நமக்கு உதவுமா? (g12-E 01)

[அடிக்குறிப்பு]

a இந்தத் தொடர் கட்டுரைகளில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்