கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சாமுவேலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
சாமுவேல் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அவர் சின்ன பையனாக இருந்தபோது, ஏலியின் மகன்களான ஓப்னி, பினெகாஸ் மாதிரி கெட்ட விஷயங்களைச் செய்யவில்லை. (1சா 2:22-26) சாமுவேல் வளர்ந்து பெரிய ஆளானார். யெகோவா எப்போதும் அவருக்குத் துணையாக இருந்தார். (1சா 3:19) வயதான காலத்திலும் அவர் யெகோவாவின் வழியில் நடந்தார். அவருடைய பிள்ளைகள் யெகோவாவைவிட்டு விலகிப்போனாலும் அவர் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்.—1சா 8:1-5.
சாமுவேலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நீங்கள் ஒரு இளம் பிள்ளையாக இருந்தால், உங்களுடைய பிரச்சினைகளை யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். அவற்றை நினைத்து நீங்கள் எப்படி வேதனைப்படுகிறீர்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். தைரியமாக இருப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுவார். (ஏசா 41:10, 13) நீங்கள் ஒரு பெற்றோரா? உங்களுடைய மகனோ மகளோ யெகோவாவைவிட்டு விலகி போய்விட்டார்களா? அப்படியென்றால், சாமுவேலை நினைத்துப்பாருங்கள். அவருடைய மகன்கள் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விட்டார்கள். அந்த சமயத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால், எல்லாவற்றையும் யெகோவாவின் கையில் விட்டுவிட்டு, தொடர்ந்து அவருக்கு உண்மையாக இருந்தார். அவருக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்தார். நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், ஒருநாள் உங்களுடைய பிள்ளையும் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்—சாமுவேல் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
சின்ன பையனாக இருந்தபோது சாமுவேல் எப்படித் தைரியமாக நடந்துகொண்டார்?
டேனி எப்படித் தைரியமாக நடந்துகொண்டான்?
வயதான காலத்தில் சாமுவேல் எப்படி மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தார்?
சரியானதைச் செய்கிறவர்களுக்கு யெகோவா துணையாக இருப்பார்
டேனியின் அப்பாவும் அம்மாவும் எப்படி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார்கள்?