உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 4/14 பக். 3
  • உலகச் செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகச் செய்திகள்
  • விழித்தெழு!—2014
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அமெரிக்கா
  • இத்தாலி
  • மலேஷியா
  • ஆப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • கடற் குதிரையும் போதை மருந்து வியாபாரமும்
    விழித்தெழு!—1991
  • எய்ட்ஸை ஒழிப்பதில் முன்னேற்றம்
    விழித்தெழு!—2005
  • எய்ட்ஸ் நிவாரணி—ஓர் அவசர தேவை!
    விழித்தெழு!—2005
  • தொற்று நோய்கள் ஆபத்தானவை ஆனால் தடுக்கக்கூடியவை
    விழித்தெழு!—2001
மேலும் பார்க்க
விழித்தெழு!—2014
g 4/14 பக். 3

உலகச் செய்திகள்

அமெரிக்கா

“புகைப்பிடிக்காதவரோடு ஒப்பிடும்போது புகைப்பிடிப்பவரை வேலையில் வைக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஒரு வருடத்தில் [சராசரியாக] 5,816 டாலர் அதிகமாகச் செலவாகிறது” என்று நியு யார்க் டைம்ஸ் சொல்கிறது. புகைப்பிடிப்பதற்காக வேலையைவிட்டு இடையிடையே எழுந்திருப்பது, உடல்நலத்தைக் கவனித்துகொள்வதற்கு ஆகும் செலவு, அடிக்கடி எடுக்கப்படும் விடுப்பு போன்றவை இதற்குக் காரணம் என்று ஒஹாயோ மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வந்த அறிக்கை காட்டுகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்தும்போது ஏற்படும் பாதிப்புகளால் வேலையில் மந்தமாவதும் இதற்கு மற்றோரு காரணமாக இருக்கலாம்.

இத்தாலி

போப் பிரான்ஸிஸ்

பாஸ்டர்கள் மற்றும் சர்ச்சுக்கு வரும் விசுவாசிகள், சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்பதால் இது சர்ச்சின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக போப் பிரான்ஸிஸ் சொல்கிறார்.

மலேஷியா

கடத்தப்பட்ட தந்தங்களை மலேசிய அதிகாரிகள் மீட்கிறார்கள்

இரண்டு கன்டெய்னர்களில், மரத்துண்டுகளுக்கு நடுவில் பதுக்கப்பட்ட 1,000-திற்கும் அதிகமான, 24 டன் எடையுள்ள யானை தந்தங்களை மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதுவரை இந்தளவுக்கு அதிகமாகக் கைப்பற்றப்படவில்லை என்று இயற்கை வள பாதுகாவலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தத் தந்தங்கள் ஆப்பிரிக்காவிலுள்ள டோகோவிலிருந்து சீனாவிற்குக் கடத்தப்படவிருந்தன.

ஆப்பிரிக்கா

ஓர் ஆப்பிரிக்க மனிதர்

உலக சுகாதார அமைப்பின் 2012-ஆம் ஆண்டு அறிக்கையின்படி 63 சதவீதத்தினர் இறப்பதற்குக் காரணம், தொற்றுநோய்களே. முக்கியமாக எயிட்ஸ், வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட வியாதிகள், மலேரியா, காசநோய் (டிபி), குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அதில் அடங்கும்.

ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்ஃபோன்களிலும் வலம்வரும் சூதாட்ட விளையாட்டுகள்

ஸ்மார்ட்ஃபோன்களிலும் (smartphones) மற்ற கருவிகளிலும் வலம்வரும் சூதாட்ட விளையாட்டுகள் இன்று பிள்ளைகள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. சில விளையாட்டுகள் பார்க்க அசல் சூதாட்டம் போலவே இருக்கும், அதில் ஜெயிப்பதும் சுலபம். இதனால் சூதாட்டம் பிள்ளைகள் மத்தியில் சர்வசாதாரணமாகிவிடும் என்றும் “எதிர்காலத்தில் இவர்கள் சூதாட்டக்காரர்களாக ஆகிவிடுவார்கள்” என்றும் அரசாங்க அறிக்கை எச்சரிக்கிறது. (g14-E 02)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்