கடற் குதிரையும் போதை மருந்து வியாபாரமும்
கடற்குதிரையையும் யானையையும்விட அதிக வித்தியாசமுள்ள இரண்டு பெரிய பாலூட்டிகளைப் பற்றி எண்ணிப்பார்ப்பது கடினமாக இருக்கும். ஆனால் பெருங் கடலில் மிதக்கும் பனிக்கட்டிப் பாளங்களில் உலாவித்திரியும் பெரிய உருவமுள்ள மந்தமான கடல்நாய்கள், தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல்வெளிப் பரப்புகளில் வீறாப்பாகச் சுற்றித்திரிபவர்களினால் பொதுவான ஒரு பிரச்னையை அனுபவிக்கின்றன: அவைகளுடைய அதிக விலையேறப்பெற்ற சொத்து அநேகமாக அவைகளுக்கு அகால மரணத்தைக் குறிக்கிறது. இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கின்றன.
ஒருவேளை யானையைவிடவும் அதிகமாக, கடற்குதிரை அதன் தந்தத்தின் உதவியைக் கொண்டே வாழ்கிறது. அது உணவைத் தேடி சமுத்திரத்தின் அடிக்கு மூழ்கிச் செல்கையில், அது தன் உதடுகளினால் இரட்டையோடு சிப்பிகளையும், சிப்பிகளையும் உறிஞ்சிவிடுவது போலவே, அதன் தந்தத்தைக் கொண்டு சறுக்கிச் செல்கிறது. வெயிலிற் காய்வதற்காக அது மிதக்கும் ஒரு பனிக்கட்டிப் பாளத்தைப் பற்றிக்கொண்டு மேலே ஏறிவர விரும்புகையில், தண்ணீரிலிருந்து 2,000-லிருந்து 3,000 பவுண்டுகளுள்ள தன் பெரும் பிண்டத்தை இழுக்க தந்தத்தை இறுகப்பற்றும் கொக்கிகளாக பயன்படுத்துகிறது. தாய் கடற்குதிரை தன் குட்டியை அச்சுறுத்துகின்ற, விலங்குகளைக் கொன்று தின்னும் எதையும் எதிர்த்துப் போராட அது மரிக்கும்வரை தன் தந்தங்களைப் பயன்படுத்துவாள்.
ஆனால் கடற்குதிரைக்கு துன்பமுண்டாக, அதன் தந்தமும்கூட மனிதர்களால் உயர்வாக மதிக்கப்படுகிறது. தந்தத்திற்கான தனியாத தாகத்தை மனிதன் கொண்டிருக்கிறான். வட துருவ சூரியனில் குளிர்காய்ந்து கொண்டு சோம்பியிருக்கும் 10 அல்லது 12 அடி நீளமுள்ள கடற்குதிரை, பாதி தானாக இயங்கும் சுழல் துப்பாக்கியுடைய ஒரு மனிதனுக்கு கடினமான குறியிலக்கில்லை. ஆகவே அலாஸ்கா மக்களில் சிலர் சிறிய படகுகளில் இரைதேடி பெரிங் கடலுக்குள் சென்று எங்கெல்லாம் அவர்களை நோக்கி அவை வருகின்றனவோ அங்கெல்லாம் அவைகளை அடித்து, சங்கிலி இரம்பத்தினால் வெட்டப்பட்ட தந்தமுள்ள தலைகளைப் படகுநிறைய ஏற்றிக்கொண்டு வருவது வழக்கத்துக்கு மாறானதில்லை.
இதுவரை கதை கேட்டுப் பழக்கப்பட்டதாகவே தெரிகிறது, ஆனால் இந்தச் சமயம் நம்பமுடியாத ஒரு திடீர் திருப்பத்தைக் கொண்டிருக்கிறது: போதை மருந்துகள். போதை மருந்தின் கெட்டப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட அலாஸ்காவிலுள்ள எஸ்கிமோ வகுப்பினர் பணங்கொடுப்பதற்குப் பதிலாக கடற்குதிரையின் தந்தங்களை பயன்படுத்துகிறார்கள். நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிடுகிறபடியே: “பண்டமாற்று வீதம் அதிர்ச்சியூட்டும் வகையில் மலிவாக இருக்கிறது. கருப்பு–சந்தை வியாபாரிகள் ஒரு ஜோடி தந்தத்தை—1,28,000 ரூபாய் மதிப்புள்ளதை—ஆறு கஞ்சா சிகரெட்டுகளுக்கு வாங்கலாம் என்பதாக ஐ.மா. மீன் மற்றும் வனவிலங்கு சேவையின் விசேஷித்த ஏஜென்ட் ஒருவர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
சட்டம் வேட்டையாடப்படுபவைகளுக்கு அளிப்பதைவிட வேட்டைக்காரர்களுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. அது, அலாஸ்காவிலுள்ள சுதேசிகளுக்கு அது அவர்களுக்கு அளிக்கும் உணவுக்காக கடற்குதிரைகளை வேட்டையாட அனுமதி அளித்திருக்கிறது. நிச்சயமாகவே தந்தத்தை உள்ளூரில் செய்யப்படும் கைவேலைப்பாட்டுக்காக அதை ஒரு விளைபொருளாக அவர்கள் வைத்துக்கொள்ளலாம். சட்டம் நியாயமாகத் தோன்றுகிறது. ஆனால் பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்களுக்கு அது புகலிடமாக உள்ளது. சுதேசிகளாக இல்லாத சில தந்த வியாபாரிகள், தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தந்தங்கள், உள்ளூர் கைவேலைப்பாட்டுக்காக அடையாள முத்திரையிடப்பட்டவை என்பதாக உரிமைப் பாராட்டுவதற்காகவே எஸ்கிமோ வகுப்பைச் சேர்ந்த பெண்களுடன் பிரவேசித்திருக்கின்றனர்.
படுகொலை தொடருகையில், கவலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சட்டப்படி கடற்குதிரையை வேட்டையாடுபவர்களும், உண்மையில் தந்தத்தை கைவேலைப்பாட்டுக்கு பயன்படுத்துகிறவர்களும் தங்களுடைய பிழைப்புக்கு ஆபத்து வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். எஸ்கிமோ வகுப்பிலுள்ள வயதானவர்கள் தங்கள் இளைஞர் மத்தியில் வளரத் தொடங்கியுள்ள போதை மருந்துக்கு அடிமையாகும் கொள்ளைநோய் அதிர்ச்சி தருவதாகக் காண்கிறார்கள். கடற்குதிரை? பசிப்பிக்கில் இன்னும் அவற்றில் 2,50,000 இருக்கின்றன, ஆகவே அவை நெருக்கடியில் இருப்பதாக கருதப்படுவதில்லை. ஆனால் தலையில்லாத அவைகளின் பிணங்கள் நூற்றுக்கணக்கில் கரைநோக்கி மிதந்து வருகின்றன. சைபீரியாவின் கரையோரப் பகுதிகளில் அத்தனை அடித்துக்கொண்டு வந்திருப்பதன் காரணமாக, சோவியத் யூனியன் படுகொலையை நிறுத்தும்படியாக ஐக்கிய மாகாணங்களைத் துரிதப்படுத்தியுள்ளது. ஆனால் கடற்குதிரையின் தந்தங்கள், பேராசையுள்ளவர்களுக்குப் பணத்தையும் தீயொழுக்கமுள்ளவர்களுக்குப் போதை மருந்தையும் அர்த்தப்படுத்துகையில், இவை துடைத்தழிக்கப்படுவதிலிருந்து எவ்வளவுக் காலம் பாதுகாப்பாக இருக்கும்? (g90 1/22)