உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 1/15 பக். 7
  • உலகச் செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகச் செய்திகள்
  • விழித்தெழு!—2015
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • சுவிட்சர்லாந்து
  • ஆப்பிரிக்காவின் கொம்பு
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2012
  • விழித்தெழு! பத்திரிகையில் இருக்கிற “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரைகள்
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • பெயரும் ஸ்விப்ட்—பறப்பதும் ஸ்விப்ட்
    விழித்தெழு!—1999
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—2015
g 1/15 பக். 7

உலகச் செய்திகள்

அமெரிக்கா

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வண்டி

சில போலீஸ் கார்ல, கம்பிரஸ்ட் ஏர் லான்ச்சர்ஸ்-னு ஒரு மெஷின் இருக்கும். குற்றவாளியை துரத்திட்டு போகும்போது, இந்த மெஷின்ல இருந்து புல்லட் மாதிரி ஒரு கருவி வேகமா போயி குற்றவாளியோட கார்ல ஒட்டிக்கும். இதை வெச்சி, அந்த குற்றவாளியோட கார் எங்கெல்லாம் போகுதுனு ஜிபிஎஸ் மூலமா கண்டுப்பிடிச்சிடலாம். வேகமா துரத்திட்டு போறதுனால வர ஆபத்துகளை இதனால தவிர்க்க முடியிது.

இந்தியா

இந்தியப் பெண்

வரதட்சனை வாங்குறதும் கொடுக்கிறதும் சட்டப்படி தப்பு. ஆனாலும், வரதட்சனை கொடுமையால, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். 2012-ல மட்டும் 8,200-க்கும் அதிகமான பெண்களை, வரதட்சனை பத்தலனு கொலை செஞ்சிருக்காங்க.

சுவிட்சர்லாந்து

ஆல்பைன் ஸ்விப்ட்

ஆல்பைன் ஸ்விப்ட் பறவைகள் எவ்ளோ நாள் தொடர்ந்து பறக்குதுனு தெரிஞ்சிக்க, 3 பறவைகள்ல சென்சார் கருவி பொருத்துனாங்க. அந்தப் பறவைகள் 200 நாட்கள் எங்கையுமே நிக்காம ஆப்பிரிக்காவுக்கு பறந்து போனத கண்டுபடிச்சிருக்காங்க. பொதுவா, கடல்ல வாழ்ற மிருகங்கள் மட்டும்தான் இந்த மாதிரி ரொம்ப நாள் தொடர்ந்து பயணம் செய்யும்.

ஆப்பிரிக்காவின் கொம்பு

கடத்தப்பட்ட கப்பல்களுக்கு கொடுத்த மீட்புத்தொகை

வடகிழக்கு ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்காவின் கொம்பு-னும் சொல்வாங்க. அந்தப் பகுதில இருக்கிற கடல் கொள்ளையர்கள், ஏப்ரல் 2005-லிருந்து டிசம்பர் 2012 வரைக்கும் 179 கப்பல்களை கடத்தியிருக்காங்க. அந்தக் கப்பல்களை மீட்பதற்காக 413 மில்லியன் டாலர்கள் (சுமார் 2560 கோடியே 60 லட்சம் ரூபாய்) கொடுக்க வேண்டியிருந்ததுனு உலக வங்கியின் கணக்கெடுப்பு காட்டுது. (g14-E 10)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்