உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 4 பக். 10-11
  • ஓர் அற்புதமான மூலப்பொருள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஓர் அற்புதமான மூலப்பொருள்
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • இரகசிய கொலைகாரன் கார்பன் மோனாக்ஸைடு
    விழித்தெழு!—2001
  • காடுகளின் சேவைகள்—எந்தளவு மதிப்புள்ளவை?
    விழித்தெழு!—2004
  • ஒருபென்சில் கொடுங்களேன்
    விழித்தெழு!—2007
  • அதிசயமான இரத்தச் சிவப்பணுக்கள்
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—2016
g16 எண் 4 பக். 10-11

ஓர் அற்புதமான மூலப்பொருள்

கார்பன் அணுக்கள்

“கார்பனைவிட வாழ்க்கைக்கு முக்கியமான மூலப்பொருள் வேறு எதுவும் இல்லை” என்று இயற்கையின் கட்டுமான பொருள்கள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. ஒரு கார்பன் அணு மற்ற கார்பன் அணுக்களோடும் இன்னும் நிறைய மற்ற அணுக்களோடும் இணைந்து லட்சக்கணக்கான புதிய சேர்மங்களை உருவாக்கும் விசேஷத் தன்மை கார்பனுக்கு இருக்கிறது. இதில் பலவற்றை விஞ்ஞானிகள் இன்னும் கண்டிப்பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இங்கு காட்டப்பட்டிருக்கிறபடி, கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்து பிரமிடுகள், ஷீட்டுகள், டியூபுகள், சங்கிலி தொடர்கள், வளையங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கும். கார்பன் உண்மையிலேயே ஒரு அற்புதமான மூலப்பொருள் என்றே நாம் சொல்லலாம். ◼ (g16-E No. 5)

வைரம்

வைரம்

கார்பன் அணுக்கள் பிரமிடு வடிவத்தில் ஒன்றிணைகிறது. இதற்கு ‘நான்முகி அமைப்பு’ (tetrahedrons) அதாவது, நான்கு பக்கங்கள் கொண்ட அமைப்பு என்று பெயர். இப்படி இணைவதால், அதிக உறுதியும் கடினமும் உள்ள ஒரு பொருள் கிடைக்கிறது. இயற்கையாகவே உருவாகும் இந்த பொருளைத்தான் நாம் வைரம் என்று சொல்கிறோம். ஒரு சிறந்த வைரம் என்பது கார்பன் அணுக்களின் ஒரே ஒரு மூலக்கூறால் ஆனது.

கிராஃபைட்

லெட பென்சில்

கார்பன் அணுக்கள் மிக நெருக்கமாக ஷீட்டுக்களின் வடிவத்தில் ஒன்றுக்குமேல் ஒன்று இணைக்கப்பட்டிருகிறது. ஆனால் அது நெருக்கமாக இல்லாமல் லேசாக அடுக்கப்படுகிறது. இதைத்தான் கிராஃபைட் என்று சொல்கிறோம். இந்த தன்மைகள் இருப்பதால் உராய்வை தடுக்கும் எண்ணெய்யைப் போல் கிராஃபைட் செயல்படுகிறது. அதோடு, ‘லெட் பென்சிலை’a தயாரிக்கவும் பயன்படுகிறது.

கிராஃபீன்

பென்சிலால் வரைந்த ஒரு கோடு

கார்பன் அணுக்கள் ஒரே அடுக்கில் அறுங்கோண வடிவத்தில் வலைப்பின்னலைப் போல் இணைக்கப்பட்டிருகிறது. கிராஃபீனுக்கு இருக்கும் வலையும் தன்மை ஸ்டீலைவிட பல மடங்கு அதிகமானது. பென்சிலால் போடப்பட்ட ஒரு கோட்டில், ஒரு அடுக்கிலோ பல அடுக்கிலோ சிறிதளவு கிராஃபீன் காணப்படும்.

ஃபுல்லிரீன்

ஃபுல்லிரீன்

கார்பனால் ஆன இந்த மூலக்கூறுகள் வித்தியாசமான வடிவங்களில் இணைக்கப்பட்டிருகிறது. இவை கண்ணுக்கு தெரியாத மிக சிறிய பந்துகளாலும் நானோடியூபுகள் என்று அழைக்கப்படும் டியூபுகளாலும் ஆனது. இது நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படுகிறது.

உயிரினங்கள்

உயிருள்ள செல்களில் கார்பன் அணுக்கள்

செடிகள், மிருகங்கள், மனிதர்கள் எல்லாம் பல செல்களால் உருவாகி இருக்கின்றன. இந்த செல்களில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்களிலும் மற்றும் சில கொழுப்புகளும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் கார்பன் காணப்படுகிறது.

“காணமுடியாத [கடவுளுடைய] பண்புகள் . . . படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன.”—ரோமர் 1:20.

a ஜூலை 2007-ன் விழித்தெழு! பத்திரிகையில் “ஒரு பென்சில் கொடுங்களேன்” என்ற கட்டுரையை பாருங்கள்.

ஒரு நட்சத்திரம்

கார்பன்-நட்சத்திரங்களில் ஏற்படும் நுணுக்கமான மாற்றத்தால் உருவாகும் ஒன்று

மூன்று ஹீலியம் உட்கருக்கள் இணைவதால் கார்பன் உருவாகிறது. இந்த நுணுக்கமான மாற்றம், ரெட் ஜெயன்ட்ஸ் என்று அழைக்கப்படும் நட்சத்திரங்களுக்குள் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால், ஹீலியம் இப்படி இணைவதற்கு மிகவும் சரியான சூழல் இருக்க வேண்டும். பால் டேவிஸ் என்ற விஞ்ஞானி இப்படி சொல்கிறார்: “இயற்கையில் இருக்கும் சட்டங்களை கொஞ்சம் மாற்றினால்கூட, இந்த பிரபஞ்சமே இருக்காது. எந்த உயிரினங்களும் ஏன், மனிதர்களும்கூட இருக்க மாட்டார்கள்.” இப்படிப்பட்ட நுணுக்கமான மாற்றம் தானாக நடக்க வாய்ப்பு இருக்கிறதா? இது தானாக நடந்திருக்கும் என்றுதான் சிலர் சொல்கிறார்கள். மற்றவர்களோ இதை ஒரு புத்திசாலியான படைப்பாளர்தான் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எது உங்களுக்கு நியாயமாகப்படுகிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்