உலக சரித்திரம் படைத்த உன்னத புத்தகம்
உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிள்தான். மிக அதிகமாக வினியோகிக்கப்பட்ட புத்தகமும் பைபிள்தான்! வேறு எந்தப் புத்தகத்தையும்விட, பைபிளில் இருக்கும் ஆலோசனைகள்தான் நிறைய பேருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்:
பைபிள் மொழிபெயர்ப்பும் வினியோகிப்பும்
96.5% மக்களிடம் பைபிள் இருக்கிறது
3,350 மொழிகளில் கிடைக்கிறது (முழுமையாகவோ, பகுதியாகவோ)
500,00,00,000 பிரதிகள் சராசரியாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன, வேறு எந்தப் புத்தகமும் இந்தச் சாதனையை நெருங்க முடியாது
இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
எங்கள் JW.ORG வெப்சைட்டைப் பாருங்கள், அதில்:
ஆன்லைனில் பைபிளைப் படிக்கலாம் (நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கிறது)
பைபிளை டவுன்லோட் செய்யலாம்
பைபிள் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ளலாம்
பைபிள் எப்படி பலருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்பதைப் பற்றி படிக்கலாம்
பைபிள் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
யெகோவாவின் சாட்சிகளும் பைபிளும்
பைபிளை மொழிபெயர்த்து, வினியோகிக்கும் வேலையை யெகோவாவின் சாட்சிகள் மும்முரமாகச் செய்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் வினியோகித்த சில பைபிள் மொழிபெயர்ப்புகள்:
1901-ல் வெளியான தி அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன்
த பைபிள் இன் லிவிங் இங்லிஷ், பையிங்டன்
தி எம்ஃபடிக் டயக்லாட்
கிங் ஜேம்ஸ் வர்ஷன்
ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன்
டிஷன்டார்ஃபின் நியூ டெஸ்டமென்ட்
புதிய உலக மொழிபெயர்ப்பு
180+ மொழிகளில் கிடைக்கிறது (முழுமையாகவோ பகுதியாகவோ)
22.7 கோடி பிரதிகள் 1950-லிருந்து அச்சடிக்கப்பட்டிருக்கின்றன
a இப்போது ஆங்கிலத்திலும் போர்ச்சுகீஸ் மொழியிலும் இருக்கிறது. சீக்கிரத்தில் நிறைய மொழிகளில் கிடைக்கும்.