உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 3 பக். 4-5
  • உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • விழித்தெழு!—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரச்சினைக்கு ஆணிவேர்
  • பைபிள் ஆலோசனை
  • உண்மைகளை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
  • நீங்கள் என்ன செய்யலாம்?
  • பாகுபாடு​—⁠உங்களைத் தொற்றியிருக்கிறதா?
    விழித்தெழு!—2020
  • தப்பெண்ணத்திற்கு நீங்கள் இலக்கானவரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • தப்பெண்ணமே தலைதூக்காத ஒரு காலம்
    விழித்தெழு!—2004
  • தப்பெண்ணத்தின் பல முகங்கள்
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 3 பக். 4-5
ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்காக வந்திருக்கும் ஒரு பெண்ணை இரண்டு பேர் இன்டர்வியூ செய்கிறார்கள். அந்தப் பெண் பதட்டமாகத் தெரிகிறார்.

உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

பெரும்பாலும் பாகுபாடுக்குக் காரணமே தவறான தகவல்கள்தான். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

  • அறிவியல் அல்லது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய பெண்களுக்குத் தகுதியில்லை என்று முதலாளிகள் சிலர் தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

  • தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற ஆட்களில் ஒருவரைக் கல்யாணம் செய்வது குடும்பத்துக்கு அவமானம் என்று நிறைய பேர் தவறாக நினைக்கிறார்கள்.

  • உடல் குறைபாடு உள்ளவர்கள் எப்போதுமே சோகமாக இருப்பார்கள், கடுகடுப்பாக நடந்துகொள்வார்கள் என்று நிறைய பேர் தவறாக முடிவு செய்கிறார்கள்.

இதுபோன்ற தவறான கருத்துகளை நம்புகிறவர்கள், தாங்கள் ஏன் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை அல்லது தாங்கள் கேள்விப்பட்ட சில விஷயங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். தாங்கள் சொல்வதை யாராவது ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்குப் புத்தியே இல்லை என்று நினைக்கிறார்கள்.

பைபிள் ஆலோசனை

“ஒருவன் அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.”—நீதிமொழிகள் 19:2.

இதன் அர்த்தம் என்ன? உண்மைகளைத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் தவறான முடிவுகளைத்தான் எடுப்போம். உண்மைகளை நம்பாமல் கட்டுக்கதைகளை நம்பினால் மற்றவர்களை நாம் தவறாக எடைபோட்டு விடுவோம்.

பாரபட்சமாக நடந்துகொள்வதை பைபிள் ஆதரிக்கிறதா?

பாரபட்சமாக நடந்துகொள்வதை பைபிள் ஆதரிப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள்.

  • மனிதர்கள் எல்லாருமே உடன்பிறப்புகள்தான்: கடவுள், ‘ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணினார்.’—அப்போஸ்தலர் 17:26.

  • கடவுள் பாரபட்சம் பார்க்க மாட்டார்: “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.

  • கடவுள் வெளித்தோற்றத்தை அல்ல, உள்ளத்தைத்தான் பார்க்கிறார்: “மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்.”—1 சாமுவேல் 16:7.a

a யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.

உண்மைகளை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உண்மையான தகவல்களைத் தெரிந்துகொண்டால், சிலரைப் பற்றி மற்றவர்கள் சொல்கிற பொய்யான கருத்துகளை நம்ப மாட்டோம். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றி மற்றவர்கள் சொன்னது பொய் என்று தெரியவந்தால், வேறு ஏதாவது ஒரு பிரிவினரைப் பற்றி அவர்களாகவே ஊகித்துச் சொல்கிற விஷயங்களை நாம் நம்பிவிட மாட்டோம்.

நிஜ அனுபவம்: யோவிட்ஸா (பால்கன்ஸ்)

இந்தத் தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்தில் பார்த்த யோவிட்ஸா என்பவர், சின்ன வயதிலிருந்தே ஒரு சிறுபான்மை பிரிவினரைப் பற்றிய தவறான தகவல்களை மற்றவர்களும், செய்தி அறிக்கைகளும், டிவி நிகழ்ச்சிகளும் சொல்வதைக் கேள்விப்பட்டிருந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “அவங்கள பத்தின தப்பான எண்ணம் எனக்குள்ள வந்துடுச்சு. அவங்கள வெறுக்கவும் ஆரம்பிச்சிட்டேன். அவங்கள பத்தி அப்படி நெனச்சது எனக்கு கொஞ்சம்கூட தப்பா படல.

ஆனா, நான் ராணுவத்தில் இருந்தபோ அந்த சிறுபான்மை பிரிவ சேந்த ராணுவ வீரர்களோடதான் தங்க வேண்டியிருந்துச்சு, வேலையும் செய்ய வேண்டியிருந்துச்சு. போகப் போக அவங்கள பத்தி நெறய தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களோட மொழிய கத்துக்க ஆரம்பிச்சேன், அவங்களோட நாட்டுப்புற பாடல்களயும் கேக்க ஆரம்பிச்சேன். அவங்களோட பழகுறது எனக்கு பிடிச்சிருந்துது. அவங்கள பத்தின தப்பான எண்ணத்த மாத்திக்கிட்டேன். ஆனாலும், அந்த எண்ணம் திரும்பவும் எனக்குள்ள எட்டிப்பாக்க வாய்ப்பிருக்குனு தெரியும். அதனால, செய்திகள்ல அவங்கள பத்தி வர்ற தப்பான விஷயங்கள பாக்கக் கூடாதுனு முடிவு பண்ணுனேன். அதோட, அவங்கள கிண்டல் பண்ற மாதிரி வர்ற படங்களையும் காமெடிகளையும் பார்க்குறத நிறுத்திட்டேன். பாகுபாடுங்கற எண்ணத்த வளரவிட்டா அது கோபத்துலயும் வெறுப்புலயும்தான் முடியும்னு எனக்கு தெரியும்.”

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மோசமானவர்கள் என்று மக்கள் சொன்னாலும், அந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லாருமே அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

  • மற்றவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களுமே நமக்குத் தெரியாது என்பதை மனதில் வையுங்கள்.

  • நம்பகமான இடத்திலிருந்தோ நபர்களிடமிருந்தோ உண்மைகளைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

அவர்கள் பகையை வென்றார்கள்

படத்தொகுப்பு: 1. பேசிக்கொண்டே நடந்துபோகிற இரண்டு ஆண்கள். 2. நண்பர்கள் மத்தியில் சிரித்த முகத்தோடு இருக்கும் ஒருவர்.

பாகுபாட்டை விட்டொழிக்க ஒரு அரேபியருக்கும் யூதருக்கும் எது உதவியது?

உண்மையான அன்பு பகையை வெல்லும்—எப்போது? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்