உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g22 எண் 1 பக். 10-12
  • 3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்
  • விழித்தெழு!-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் முக்கியம்?
  • இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • இதைச் செய்துபாருங்கள்
  • நல்ல நண்பர்களும் கெட்ட நண்பர்களும்
    விழித்தெழு!—2005
  • நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • நட்புக்கான தீரா பசியைத் தீர்த்தல்
    விழித்தெழு!—2005
  • அன்பற்ற உலகில் நட்பைக் காத்துக்கொள்ளுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
விழித்தெழு!-2022
g22 எண் 1 பக். 10-12
வயதான ஒரு தம்பதி ஒருவரை ஒருவர் சந்தோஷமாக தழுவிக்கொள்கிறார்கள்.

தத்தளிக்கும் உலகம்

3 | உறவுகளைக் கட்டிக்காத்திடுங்கள்

ஏன் முக்கியம்?

உலகத்தில் நெருக்கடி அதிகமாகும்போது மக்கள் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். அந்தக் கவலையிலேயே உறவுகளை மறந்துவிடுகிறார்கள்.

  • நண்பர்களோடு ஒட்டாமல் தங்களையே தனிமைப்படுத்திகொள்கிறார்கள்.

  • கணவன் மனைவிக்கு நடுவில் நிறைய சண்டைகள் வருகின்றன.

  • பிள்ளைகள் படும் கஷ்டங்களை அப்பா அம்மா கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • உடலும் மனதும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நண்பர்கள் தேவை. அதுவும், கஷ்டமான காலத்தில் ரொம்ப ரொம்பத் தேவை!

  • உலகத்தில் இருக்கும் நெருக்கடியால் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த மன அழுத்தத்தால், எதிர்பார்க்காத பிரச்சினைகள் குடும்பத்தைத் தாக்கலாம்.

  • மனதைப் பாதிக்கும் செய்திகளைப் பிள்ளைகள் பார்த்தால், நாம் நினைப்பதைவிட அவர்கள் ரொம்பவே பயந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இதைச் செய்துபாருங்கள்

பைபிள் சொல்கிறது: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள், நல்ல அறிவுரைகளையும் கொடுப்பார்கள். அக்கறை காட்டுவதற்கு ஒருவர் இருந்தாலே தினம்தினம் வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க பலம் கிடைக்கும்.

எப்படிச் சமாளிக்கலாம்?—இதோ சில டிப்ஸ்

நெருக்கடியான காலத்தில், உறவுகளைக் கட்டிக்காப்பதற்கு இதையெல்லாம் செய்யுங்கள்

திருமண பந்தத்தைப் பலப்படுத்துங்கள்

வயதான ஒரு தம்பதி ஒருவரை ஒருவர் சந்தோஷமாக தழுவிக்கொள்கிறார்கள்.

திருமண பந்தத்தைப் பலப்படுத்துங்கள்

பைபிள் சொல்கிறது: “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. . . . ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும்.” (பிரசங்கி 4:9, 10) கணவனும் மனைவியும், விமானி மற்றும் துணை விமானியைப் போல இருக்க வேண்டும். அதாவது, ஒரே நோக்கத்தோடு செயல்பட வேண்டும். ஒருவரை ஒருவர் தாக்க நினைக்கும் போர் விமானிகளைப் போல் இருக்கக் கூடாது.

  • உங்கள் டென்ஷனை உங்கள் துணைமேல் கொட்டாதீர்கள். பொறுமையாக இருங்கள்.

  • ஏதாவது பிரச்சினை இருந்தால் உங்கள் துணையிடம் அதை மனம் திறந்து சொல்லுங்கள். வாரத்துக்கு ஒரு தடவையாவது இப்படிப் பேச நேரம் ஒதுக்குங்கள். அப்படிப் பேசும்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளாதீர்கள், பிரச்சினையைத் தாக்குங்கள்!

  • உங்கள் இரண்டு பேருக்குமே பிடித்த சில விஷயங்களைச் செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

  • இரண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமாக இருந்த சமயங்களை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, கல்யாண ஃபோட்டோவையோ நல்ல தருணங்களை ஞாபகப்படுத்தும் ஃபோட்டோக்களையோ பார்க்கலாம்.

“கணவனும் மனைவியும் எல்லா விஷயத்துலயும் ஒத்துபோவாங்கனு சொல்ல முடியாதுதான்! அதுக்குனு, ஒன்னா சேர்ந்து எதையுமே செய்ய முடியாதுனு அர்த்தம் கிடையாது. கணவனும் மனைவியும் சில முடிவுகள எடுத்து அத சேர்ந்தே செயல்படுத்தலாம்.”—டேவிட்.

நட்பைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்

  • வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பெண்கள் பேசி சிரித்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

    நட்பைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்

    நண்பர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். நீங்களும் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசியுங்கள். மற்றவர்களைப் பலப்படுத்தும்போது நீங்களும் பலமாக ஆவீர்கள்.

  • ஒரு நாளைக்கு, ஒன்று அல்லது இரண்டு நண்பர்களிடமாவது ஃபோன் செய்தோ மெசேஜ் செய்தோ விசாரியுங்கள்.

  • உங்களுக்கு இருக்கிற பிரச்சினைகள் உங்கள் நண்பர்களுக்கும் வந்திருந்தால் அதை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்று கேளுங்கள்.

“பிரச்சினைகள சமாளிக்க உங்க ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு உதவுவாங்க. உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயங்களா இருந்தாலும், அத ஞாபகப்படுத்தி உதவி செய்வாங்க. உங்க ஃப்ரெண்ட்ஸுக்கு உங்கமேல அக்கறை இருக்கு. நீங்களும் அவங்கமேல பாசம் வெச்சிருக்கீங்கனு அவங்களுக்கு தெரியும்.”—ஆஷா.

பிள்ளைகளைப் புரிந்துகொள்ளும் பெற்றோராக இருங்கள்

பெற்றோர் தங்கள் இரண்டு பிள்ளைகளோடு ஒரு மரப் பாலத்தின் மேல் உட்கார்ந்து, சுற்றியிருக்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பிள்ளைகளைப் புரிந்துகொள்கிற பெற்றோராக இருங்கள்

பைபிள் சொல்கிறது: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.” (யாக்கோபு 1:19) பிள்ளைகள் தங்கள் மனதில் இருக்கிற பயங்களையும் கவலைகளையும் எடுத்த எடுப்பில் சொல்லிவிட மாட்டார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை நீங்கள் பொறுமையாகக் கேட்டால் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கொட்டுவார்கள்.

  • மனதில் இருக்கிற எல்லாவற்றையும் பிள்ளைகள் வெளிப்படையாகச் சொல்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துங்கள். நேருக்கு நேர் உட்கார்ந்து பேசினால் அவர்கள் எல்லாவற்றையும் சொல்லாமல் போய்விடலாம். ஒருவேளை, ஜாலியாக இருக்கும் சமயங்களில் அவர்கள் மனம் திறந்து பேசலாம்.

  • பயப்படுகிற மாதிரியான நியூஸை பிள்ளைகள் அதிகமாகப் பார்க்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • குடும்பம் பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.

  • அவசர சூழ்நிலைகளில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை முன்பாகவே யோசித்து வையுங்கள். அதை பிள்ளைகளோடு சேர்ந்து நடித்துக்கூடப் பார்க்கலாம்.

“பிள்ளைங்ககிட்ட பேசுங்க. அவங்க என்ன நினைக்குறாங்கனு சொல்றதுக்கு விடுங்க. பயம், கவலை, கோபத்தையெல்லாம் அவங்க மனசுக்குள்ளயே வைச்சிருப்பாங்க. உங்களுக்கும் இதே மாதிரிதான் இருந்ததுனும், அத நீங்க எப்படி சமாளிச்சீங்கனும் அவங்ககிட்ட சொல்லுங்க.”—செலினா.

“மணவாழ்வில் மகிழ்ச்சி மலர…” என்ற வீடியோவில் வரும் காட்சி. ஒரு தம்பதி சந்தோஷமாக கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்துபோகிறார்கள்.

அதிகம் தெரிந்துகொள்ள: மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற வீடியோவைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்