உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 21 பக். 108-113
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ***********************
  • தகவல் நிறைந்த பேச்சு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • உங்கள் கேட்போரை நம்பச்செய்யுங்கள், அவர்களிடம் நியாயங்காட்டி பேசுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஆலோசனை கட்டியெழுப்புகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • கேட்போருடன் தொடர்பும் குறிப்புகளின் உபோயகமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 21 பக். 108-113

படிப்பு 21

அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்

1 பிரயோஜனமுள்ள பேச்சுக்கள் ஊக்கமான தயாரிப்போடு ஆரம்பமாகின்றன, இது நேரத்தையும் முயற்சியையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் இது எத்தனை பயனளிப்பதாய் உள்ளது! உங்கள் திருத்தமான அறிவு வளத்தை நீங்கள் பெருக்கிக்கொள்கிறீர்கள், உங்கள் கேட்போருடன் பகிர்ந்துகொள்ள உண்மையில் பிரயோஜனமுள்ள எதையோ கொண்டிருக்கிறீர்கள். பொதுச்செய்திகளைப் பேசுவதற்குப் பதிலாக, அளிப்பதற்கு உங்களிடம் பொருளை விளக்கும் விவரங்கள் இருக்கின்றன, மேலும் நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது சரியானது என்பதை அறிந்திருக்கிறீர்கள். இது கடவுளுடைய வார்த்தைக்குக் கேட்போரின் போற்றுதலைக் கட்டியெழுப்புகிறது, ஆகவே யெகோவாவை கனம்பண்ணுகிறது. அறிவை வளர்க்கும் பொருளை நாம் சிந்திப்பது விசேஷமாக உங்கள் பேச்சில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை உட்படுத்துகிறது. விஷயத்தின் பல்வேறு அம்சங்களைச் சுருக்கமாக சிந்தித்துப்பாருங்கள். பேச்சு ஆலோசனைத் தாளில் இது முதல் குறிப்பாகும்.

2 திட்டவட்டமான பொருள். பொதுச்செய்திகளைப் பற்றியதாக இருக்கும் ஒரு பேச்சு முக்கியத்துவத்திலும் தனிச்செல்வாக்கிலும் குறைவுபடுவதாய் இருக்கிறது. இதில் கருத்து தெளிவாக இல்லை. இது கேட்போரை சந்தேகத்தில் விட்டுவைக்கிறது. கருத்துக்கள் நினைவில் வைக்கப்பட வேண்டுமானால் அவை திட்டவட்டமாக, துல்லியமாக இருக்க வேண்டும். இது தலைப்புப் பொருளின்பேரில் ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் அத்தாட்சியைக் கொடுக்கிறது.

3 தயாரிப்பில் ஏன்? எப்போது? எங்கே? போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் இந்தப் பண்பை முயன்று அடையமுடியும். வெறுமனே பொதுவாக ஏதோ ஒன்று சம்பவித்தது என்று சொல்வது போதுமானதாக இல்லை. இடங்களின் பெயர்கள், தேதிகள், ஒருவேளை காரணங்களைக் கொடுங்கள். வெறுமனே சில உண்மைகளை எடுத்துரைப்பது போதுமானதல்ல. அவை ஏன் உண்மையாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்; அவற்றை அறிந்துகொள்வது ஏன் பயனுள்ளது என்பதைக் காட்டுங்கள். அறிவுரை கொடுப்பதாக இருந்தால், ஒரு காரியம் எவ்விதமாக செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குங்கள். இத்தகைய ஒரு விரிவுபடுத்துதல் எவ்வளவு அவசியம் என்பது ஏற்கெனவே கேட்போர் எவ்வளவு அறிந்திருக்கின்றனர் என்பதால் தீர்மானிக்கப்படும். ஆகவே என்ன விவரங்கள் தேவைப்படலாம் என்பதைக் கண்டுபிடிக்க கேட்போரை கருத்தில் கொள்ளுங்கள்.

4 உங்கள் கேட்போர் கூட்டத்தின் அறிவை வளர்த்தல். ஒரு கேட்போர் கூட்டத்தின் அறிவை வளர்க்கும் காரியம் மற்றொரு தொகுதியின் அறிவோடு எதையும் கூட்டாமல் இருக்கலாம் அல்லது அது அவர்களை முழுவதுமாக அறியாமையிலும் விட்டுவைக்கலாம். அப்படியென்றால், பொருள் குறிப்பிட்ட கேட்போர் கூட்டத்துக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். உதாரணமாக, நம்முடைய வேலை எவ்விதமாக நடத்தப்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு பேச்சில் பொருள், யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு நபரோடு பேசுகையில், அல்லது உலகப்பிரகாரமான ஒரு தொகுதியினிடமாக பேச்சுக் கொடுக்கையில் செய்யப்படுவதைவிட முற்றிலும் வித்தியாசமாக ஓர் ஊழியக் கூட்டத்தில் கையாளப்படும்.

5 தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பல்வேறு நியமனங்களில் இந்தக் காரியங்களும்கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட எந்த ஒரு பேச்சிலும் அளிக்கப்படும் பொருள், கேட்போர், பேச்சு அமைப்பு மற்றும் பேச்சினுடைய நோக்கத்தின் சம்பந்தமாக கருதப்பட வேண்டும். என்ன மாதிரியான பேச்சு என்பதும் பேச்சாளர் ஏற்பாடு செய்திருக்கும் பேச்சு அமைப்புமே இந்தக் காரியங்களைத் தீர்மானிக்கும். நிச்சயமாகவே, போதகப் பேச்சு சபைக்கு கொடுக்கப்படும் பேச்சாக இருக்கும். மற்ற பேச்சுக்கள் வித்தியாசமாக இருக்கலாம், கேட்போரும் நோக்கமும் பேச்சு அமைப்பினால் அடையாளப்படுத்தப்படும். எல்லா சந்தர்ப்பங்களிலும், அளிப்பில் உட்பட்டிருக்கும் குறிப்பிட்ட அந்தக் கேட்போருக்குப் பொருள் பொருத்தமாக இருக்கிறதா? கேட்போர் இதனால் அறிவைப்பெற்று போதிக்கப்படுவார்களா? என்பதாக மாணாக்கரும் ஆலோசகரும் தங்களையே கேட்டுக்கொள்ளலாம்.

6 தயாரிக்கையில், உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், இந்தப் பேச்சில் நான் எதைச் சாதிக்க விரும்புகிறேன்? நான் சொல்ல விரும்புவதில் இந்த நபர் அல்லது தொகுதிக்கு ஏற்கெனவே எவ்வளவு தெரியும்? இந்தக் குறிப்புகள் தெளிவுபடுத்தப்படுவதற்கு முன்பாக என்ன அஸ்திவாரத்தை நான் போட வேண்டும்? மொத்தத்தில் வித்தியாசமான ஒரு தொகுதிக்கு இதை நான் எவ்விதமாக வித்தியாசமாகச் சொல்லுவேன்? ஒப்பிடுதல்கள் அநேகமாக நம்முடைய நோக்குநிலைகளைத் தெளிவுபடுத்துகின்றன. உங்கள் தயாரிப்பில் வித்தியாசமான தொகுதிகளுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளை முயற்சிசெய்துபாருங்கள். கேட்போரை ஆலோசித்து, நீங்கள் பேசப்போகும் அந்தக் குறிப்பிட்ட கேட்போரின் அறிவை வளர்க்கும் வகையில் பொருளை அமைப்பதிலிருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொள்வதற்காக அப்படிச் செய்துபாருங்கள்.

7 நடைமுறை பயனுள்ள பொருள். கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது, ஆனால் அவை அனைத்தும் நடைமுறைக்குப் பயனுள்ளதாக இல்லை. நமக்கு, அறிவை வளர்க்கும் பொருள் கிறிஸ்தவ ஜீவியத்திற்கும், நம்முடைய ஊழியத்திற்கும் நாம் அறிந்திருக்கவேண்டிய அந்தக் காரியங்களைப் பற்றியதாயிருக்கிறது. நாம் முயன்று பெற்றுக்கொண்டிருக்கும் இந்தத் தகவலை எவ்விதமாக பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

8 தயாரிப்புசெய்கையில் மாணாக்கரும், ஆலோசனை கொடுப்பதில் பள்ளி கண்காணியும், இவ்வாறு கேட்டுக்கொள்வதன் மூலம் இந்தக் குறிப்பை சிந்திக்கலாம்: என்ன வழிகாட்டும் நியமங்களை இந்தப் பேச்சில் காணமுடியும்? தீர்மானங்களைச் செய்வதில் இந்தப் பொருளைப் பயன்படுத்த முடியுமா? அளிக்கப்படும் தகவலை வெளி ஊழியத்துக்கு ஏற்ப அமைக்கமுடியுமா? அது கடவுளுடைய வார்த்தையைப் புகழ்ந்து அவருடைய நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறதா? வெகு சில பேச்சுக்களே இந்த எல்லா தகவலையும் அளிக்கமுடியும், ஆனால் நடைமுறையில் பயனுள்ளதாக இருப்பதற்கு பொருள் கேட்போரால் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்த முடிவதாக இருக்க வேண்டும்.

9 கூற்றின் திருத்தமானத்தன்மை. யெகோவாவின் சாட்சிகள் சத்தியத்தின் ஓர் அமைப்பாக இருக்கின்றனர். நாம் சத்தியத்தைப் பேச விரும்ப வேண்டும் மற்றும் எல்லா சமயங்களிலும் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் முற்றிலும் திருத்தமாக இருக்க வேண்டும். இது கோட்பாடு சம்பந்தப்பட்டதில் மாத்திரமல்லாமல், நம்முடைய மேற்கோள்களிலும், நாம் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறோம் அல்லது அவர்களை நாம் எவ்விதமாக பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பதிலும், மேலுமாக அறிவியல் செய்திக்குறிப்புகள் அல்லது செய்தி நிகழ்ச்சிகளிலும்கூட உண்மையாக இருக்க வேண்டும்.

10 கேட்போருக்கு எடுத்துரைக்கப்படும் தவறான கூற்றுகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படலாம், பிழைகள் பெரிதுபடுத்தப்படலாம். கேட்போர் அடையாளங்கண்டுகொள்ளும் தவறுகள், மற்ற குறிப்புகளின்பேரில் பேச்சாளரின் தகுதியைக் குறித்து கேள்விகளை எழுப்பவும், ஒருவேளை செய்தியின் உண்மையையே மறுக்கவும்கூட செய்யக்கூடும். இப்படிப்பட்ட கூற்றுகளைக் கேட்கும் புதிதாக அக்கறை காட்டும் ஒரு நபர், மற்றொரு சமயத்தில் வித்தியாசமான கருத்து தெரிவிக்கப்பட்டதை கேட்டிருப்பதால், யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் கருத்து ஒற்றுமை இல்லை என்ற முடிவுக்கு வந்து அவருடைய காரணத்தை வெளிப்படுத்தாமலும்கூட கூட்டுறவைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

11 மாணாக்கர், விசேஷமாக சத்தியத்தில் புதியவராக, அதன் காரணமாக கடவுளுடைய வார்த்தையின் ஆழமான காரியங்களில் முழுமையாக நிலைநாட்டப்பட்டில்லாமல் இருக்கையில், ஆலோசகர் அவர் சொல்லும் ஒவ்வொரு கூற்றிலும் குற்றங்களை எடுத்துக்காட்டக்கூடாது. மாறாக, அவர் சாதுரியமாக மாணாக்கரின் சிந்தனையை உருவமைக்க உதவிசெய்து, கவனமுள்ள முன்தயாரிப்பின் மூலம் எவ்விதமாக அவருடைய திருத்தமானத்தன்மையை மேம்படுத்தலாம் என்பதை அவருக்குக் காண்பிப்பார்.

12 கூடுதலான தெளிவுபடுத்தும் பொருள். தியானம் அல்லது ஒரு தலைப்புப் பொருளின்பேரில் கூடுதலான ஆராய்ச்சியிலிருந்து சேகரித்ததன் விளைவாக அளிக்கப்படும் எண்ணங்கள் ஒரு பேச்சுக்கு அதிகத்தை அளித்து, சில சமயங்களில் கேட்போருக்கு ஏற்கெனவே பரிச்சயமாயிருக்கும் புத்தறிவையூட்டாதப் பொருளைத் திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர்க்க உதவிசெய்யும். இது அளிப்புக்குப் புத்துணர்ச்சியைக் கூட்டி, கேட்போரின் அக்கறைக்கு உயிர்ப்பூட்டி, மிகவும் பரிச்சயமான ஒரு தலைப்புப் பொருளை உண்மையில் அனுபவிக்கும்படிச் செய்யக்கூடும். மேலும், அது பேச்சாளருக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர் அளிப்பதற்குச் சற்றே வித்தியாசமான ஏதோவொன்றைக் கொண்டிருக்கும் அறிவிலிருந்து தோன்றும் ஆர்வத்தோடு தன் பேச்சை அணுகுகிறார்.

13 சொந்த கருத்து தவிர்க்கப்பட வேண்டிய ஓர் ஆபத்தாகும். சொஸைட்டியின் பிரசுரங்கள் பயன்படுத்தப்பட்டு அதன்மீது சார்ந்திருத்தல் வேண்டும். சொஸைட்டியின் இன்டெக்ஸ்-கள் மற்றும் வேதவசனங்களின் அடிக்குறிப்புகளையும் சரிபார்க்க வேண்டும். நீங்கள் சொல்வது, தவறாக அறிவிப்பதாக இல்லாமல் அது தெளிவாக்குவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

***********************

14 உங்கள் பொருளைத் தயாரிக்கையில், சொல்லவேண்டியதை நீங்கள் எவ்வாறு சொல்லப்போகிறீர்கள் என்பதற்கு ஜாக்கிரதையாக கவனம்செலுத்துவதும்கூட முக்கியமாகும். இதைத்தான் பேச்சு ஆலோசனைத் தாள் “தெளிவு, புரியும்படி இருத்தல்” என்று குறிப்பிடுகிறது. இதற்குப் போதிய கவனம் செலுத்த தவறுவது உங்கள் கேட்போரைச் சென்றெட்டுவதைத் தடைசெய்யவும் அல்லது அவர்கள் கேட்பதை மனதில் தக்கவைத்துக்கொள்வதில் அவர்களுக்குத் தடங்கலாகவும் இருக்கலாம். இந்த விஷயத்தில் சிந்திப்பதற்கு மூன்று அடிப்படை அம்சங்கள் உள்ளன.

15 எளிதாகச் சொல்லுதல். இது சொற்றொடர்கள் முன்கூட்டியே யோசித்துவைக்கப்பட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் அளிக்கப்படவிருக்கும் கருத்துக்கள் நுணுக்கமாக ஆராயப்பட்டு ஒருசில திட்டவட்டமான காரியங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது பொதுவாக கச்சிதமான ஒரு பேச்சிலும், கருத்து சாதாரணமான, தெளிவான மொழியில் பேசப்படுவதிலும் விளைவடையும். பேச்சாளரின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஒரு தலைப்புப் பொருள் அளிப்பிலும்கூட ஆக்கிரமித்துக்கொள்வதாக இருக்கும்.

16 கடைசி நிமிட தயாரிப்பு தவிர்க்கப்பட வேண்டும். பேச்சின் ஒவ்வொரு குறிப்பும் பேச்சாளருக்கு எளிமையாகவும் தெளிவாகவும் ஆகும்வரை முழுவதுமாக நேரமெடுத்து ஆலோசிக்கப்பட வேண்டும். பேச்சைக் கொடுப்பதற்காக தயாரிக்கையில் இந்தக் குறிப்புகளை மறுபார்வை செய்வது அவருடைய மனதில் அவற்றை அவ்வளவு தெளிவாக பதித்துவிடுவதால் தேவை ஏற்படுகையில் அவை உடனடியாக வெளிவருகின்றன, அவை பேச்சாளருக்கு இருப்பதைப் போலவே கேட்போருக்கும் தெள்ளத்தெளிவாக இருக்கும்.

17 பழக்கமில்லாத பதங்கள் விளக்கப்படுதல். வேதாகமத்தையும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களையும் படிப்பது, நம்முடைய வேலையில் பழக்கமில்லாதவர்களுக்கு மிகவும் விநோதமாக இருக்கும் பதங்களின் ஒரு சொல்தொகுதியை நமக்கு அளித்திருக்கிறது. இதுபோன்றப் பதங்களை உபயோகித்து ஒருசில கேட்போருக்கு பைபிள் சத்தியங்களை நாம் விளக்கவேண்டியிருந்தால், நாம் சொல்வதில் பெரும்பகுதி இழக்கப்பட்டுவிடும் அல்லது நம்முடைய பேச்சு முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கும்.

18 உங்கள் கேட்போரை ஆலோசித்துப்பாருங்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் அளவு என்ன? நம்முடைய வேலையைப் பற்றி அவர்களுக்கு எவ்வளவு தெரியும்? பேச்சாளர் அறிந்திருப்பது போல இந்தச் சொற்றொடர்களில் எத்தனை அவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ளப்படும்? “தேவாட்சி,” “மீதியானோர்,” “வேறே ஆடுகள்,” போன்றவை “அர்மகெதோன்,” மற்றும் “ராஜ்யம்,” போன்ற பதங்களும்கூட கேட்போரின் மனதுக்கு வித்தியாசமான ஒரு கருத்தை எடுத்துச்செல்லக்கூடும் அல்லது எதையுமே எடுத்துச்செல்லாதிருக்கலாம். கேட்பவர் நம்முடைய வேலையில் பழக்கப்பட்டவராக இல்லையென்றால், “ஆத்துமா,” “நரகம்,” மற்றும் “ஆத்துமா அழியாமை,” ஆகிய பதங்களும்கூட தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகும். ஆனால் பேச்சு சபைக்குக் கொடுக்கப்படுமேயானால், இப்படிப்பட்ட பதங்கள் விளக்கப்படவேண்டிய அவசியமில்லை. ஆகவே பேச்சு அமைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

19 அளவுக்கு அதிகமான பொருளைக் கொண்டில்லாமல் இருத்தல். ஒரு பேச்சு அவ்வளவு அதிகமான தகவலைக் கொண்டிருப்பதால், அதிகமான அளவில் பொருள் கேட்போரை வந்தடைய, புரிந்துகொள்ளுதல் மந்தமாகியோ முழுமையாக இழக்கப்பட்டோ விடுகிறது. ஒரு பேச்சின் நோக்கத்தை நிறைவேற்ற, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தெளிவாக விரிவாக்குவதற்கும் அதிகமான பொருளை உட்புகுத்தக்கூடாது. கேட்போர் நியாயமாக கிரகித்துகொள்வதற்கும் அதிகமாக சொல்லக்கூடாது. மேலுமாக, ஓர் அந்நியருக்கு அல்லது புதிதாக அக்கறைக் காட்டுபவருக்கு அளிக்கப்படும் பொருள், அதே தலைப்புப் பொருளின்பேரில் சபைக்கு அளிக்கப்படும் பொருளோடு ஒப்பிடுகையில் கணிசமாக எளிதாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இங்கும்கூட, ஆலோசகர் பேச்சாளர் பேசுகின்ற கேட்போரை கவனத்தில் கொள்ள வேண்டும்.

20 ஒரு பேச்சினுள் எவ்வளவு பொருளை உட்புகுத்த வேண்டும் என்பதை மாணாக்கர் எவ்விதமாக அறிவார்? ஒப்பிடுதல் தயாரிப்பில் பிரயோஜனமாக இருக்கும். நீங்கள் அளிக்கவேண்டியதை ஆய்வுசெய்யுங்கள். இந்தக் குறிப்புகளில் எத்தனை, குறைந்தபட்சம் பகுதியளவிலாவது ஏற்கெனவே கேட்போருக்கு தெரிந்திருக்கும்? எத்தனை முற்றிலும் புதியதாக இருக்கும்? அறிவின் அஸ்திவாரம் ஏற்கெனவே விசாலமாயிருக்கையில், கொடுக்கப்பட்ட நேரத்தில் அதிகம் கட்டப்படலாம். ஆனால் கலந்தாராயப்படும் தலைப்புப் பொருளின்பேரில் உண்மையில் எதுவுமே அறியப்படாதிருந்தால், கேட்போர் முழுமையாக புரிந்துகொள்ளும் வண்ணமாக எவ்வளவு சொல்லப்படபோகிறது, மற்றும் இந்தக் குறிப்புகளை விளக்குவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதைக்குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

[கேள்விகள்]

1-3. ஒருவருடைய பேச்சு அறிவை வளர்ப்பதாக அமைவதற்கு திட்டவட்டமான பொருள் ஏன் அவசியமாயிருக்கிறது?

4-6. குறிப்பிட்ட கேட்போர் கூட்டத்துக்கு உங்கள் பேச்சு அறிவை வளர்ப்பதாக அமைவதற்கு, என்ன காரியங்களை நீங்கள் மனதில் வைக்க வேண்டும்?

7, 8. நம்முடைய பேச்சுக்களை நாம் எவ்விதமாக நடைமுறை பயனுள்ளதாகச் செய்யலாம்?

9-11. கூற்றின் திருத்தமானத்தன்மை ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?

12, 13. கூடுதலான தெளிவுபடுத்தும் பொருளின் மதிப்பு என்ன?

14-16. காரியங்கள் எளிமையாக சொல்லப்படுவதற்காக ஒரு பேச்சை தயாரிக்கையில் என்ன செய்யப்பட வேண்டும்?

17, 18. பழக்கமில்லாத பதங்கள் ஏன் விளக்கப்பட வேண்டும்?

19, 20. அளவுக்கு அதிகமான பொருளைக் கொண்டிருப்பதை நாம் எவ்விதமாக தவிர்க்கலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்