உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • te அதி. 44 பக். 179-182
  • “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”
  • பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • இதே தகவல்
  • ”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? எங்கே வாழ்வார்கள்?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • பைபிள் குறிப்பிடுகிற பரதீஸ் எங்கே உள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • பூமியில் ஒரு பூஞ்சோலை-கற்பனையா அல்லது உண்மையா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
te அதி. 44 பக். 179-182

அதிகாரம் 44

“நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”

உனக்கு மிருகங்கள் பிரியமா? — ஒரு சிங்கத்துடன் நீ விளையாடக் கூடியவனாய் இருக்க உனக்கு விருப்பமா? அல்லது ஒரு கரடியைச் செல்லமாக வைத்து வளர்க்க உனக்குப் பிரியமா? —

இதை நீ செய்யக் கூடியவனாய் இருக்கப்போகிற காலம் வருகிறது. உன் பைபிளை எடு. நாம் இருவரும் அதைப்பற்றி வாசிக்கலாம்.

இந்த வேதவார்த்தை ஏசாயாவின் புத்தகம் 11-ம் அதிகாரம் 6-வது வசனத்தில் இருக்கிறது. அது சொல்வதாவது: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும் பாலசிங்கமும் காளையும் ஒருமித்திருக்கும்; ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான்.”

இன்று ஓர் ஓநாய் ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடிக்கக் கூடுமானால் என்ன நடக்கும்? — அது அதைச் சாப்பிட்டு விடும், அல்லவா? ஒரு புலி ஓர் வெள்ளாட்டுக்குட்டியுடன் இருக்குமானால் என்ன நடக்கும்? — அந்த வெள்ளாட்டுக்குட்டி அந்தப் புலிக்குச் சாப்பாடாகிவிடும்.

ஆனால் இது மாறப்போகிறது என்று பைபிள் சொல்லுகிறது. இந்த மிருகங்கள் ஒன்றையொன்று சாப்பிடுவதற்குப் பதிலாக, வைக்கோலைச் சாப்பிடும்படி கடவுள் செய்யப்போகிறார். இந்த மிருகங்களெல்லாம் சிநேகபாவத்துடன் இருக்கையில், ஒரு சிங்கத்தைச் செல்ல மிருகமாக வளர்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும், அல்லவா? — இது பரதீஸில் நடக்கப்போகிறது.

பரதீஸ் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? — பரதீஸானது ஓர் அழகிய தோட்டம் அல்லது பூங்கா. அது சமாதானமும் இன்பமுமுள்ள ஓர் இடம்.

முதல் மனிதனாகிய ஆதாமும், அவனுடைய மனைவியும் வாழ்வதற்கு, கடவுள் அவர்களுக்கு ஒரு பரதீஸைக் கொடுத்தார். அது ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. அந்தத் தோட்டத்தில் மிருகங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் ஒன்றும் மற்றவற்றிற்குத் தீங்கு செய்யவில்லை. மிக ருசியுள்ள ஏராளமான பழங்களைக் கொண்ட மரங்களுங்கூட அங்கே இருந்தன. மேலும் அங்கே ஒரு நதி இருந்தது. அது வாழ்வதற்கு மிகமிக நல்ல ஓர் இடமாக இருந்தது.

ஆனால் ஆதாமும் ஏவாளும் அந்தப் பரதீஸை இழந்துவிட்டார்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள். ஆகவே அவர்கள் பரதீஸில் இனிமேலும் வாழ முடியாமற்போயிற்று. இப்பொழுது ஏதேன் தோட்டம் இல்லை. ஆகவே, பரதீஸில் வாழ்வதற்கு நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? —

வாதனைக்குரிய கழுமரத்தில் தாம் மரிப்பதற்கு முன்பாக, பெரிய போதகர் ஒரு புதிய பரதீஸைப் பற்றிப் பேசினார். “இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும்,” என்று ஒரு மனிதன் அவரிடம் அப்பொழுதுதான் சொல்லியிருந்தான். இயேசு அதற்கு: “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்,” என்று பதிலளித்தார்.—லூக்கா 23:42, 43.

அதே நாளிலேதானே தாங்கள் பரதீஸில் இருக்கப் போவதாக இயேசு சொல்லவில்லை. அவர்கள் இருவரும் அந்த நாளிலேதானே மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்கள். ஆனால் இயேசு தம்முடைய ராஜ்யத்துக்கு வந்தபின் நடக்கப் போவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பரதீஸ் மறுபடியுமாக இருக்கும். இந்தப் புதிய பரதீஸ் என்றுமாக நீடித்திருக்கும்.

இந்தப் பரதீஸ் எங்கே இருக்கும்? — முதல் பரதீஸானது இங்கே பூமியிலேதானே இருந்தது, அல்லவா? ஆகவே இந்தப் புதிய பரதீஸுங்கூட இங்கே பூமியிலேயே இருக்கும். ஆகவேதான், கடவுளுடைய சித்தம் பூமியிலேயே செய்யப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்பித்தார். அந்தக் காலம் வருகையில், இந்த முழு பூமியும் ஒரு பரதீஸாகிவிடும்.

பரதீஸில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். காற்று சுத்தமாயும் புத்துயிரளிப்பதாயும் சுவாசிப்பதற்கு நல்லதாயும் இருக்கும். நதிகளிலுள்ள தண்ணீர் தெளிந்த நல்ல தண்ணீராக இருக்கும். ஒருவரும் பசியாய்ப் போகாதபடி தரை ஏராளமான உணவை வளரச் செய்யும். இந்தப் பூமி முழுவதும் ஒரு பூங்காவைப்போல் ஆகிவிடும். பறவைகளுடனும் மிருகங்களுடனும், எல்லா வகையான மரங்களுடனும் பூக்களுடனும் அது உயிர்ப்புடன் இருக்கும்.

ஆனால் எல்லாவற்றிலும் மிகப் பெரிய மாற்றங்கள் மக்களிலேயே இருக்கும். மக்களே இந்தப் பூமியை ஒரே குழப்பகரமாக்கிப் போடுகின்றனர், அல்லவா? — இவர்களில் சிலர் அழுக்கடைந்த வீடுகளில் வாழ்கின்றனர். மேலும் தாங்கள் போகிற இடமெல்லாம் குப்பைகளை எறிகின்றனர். ஆனால் பரதீஸ் அப்படி இராது. அது சுத்தமும் வாழ்வதற்கு இனிமையுமான ஓர் இடமாக இருக்கும். ஆகவே நாம் பரதீஸில் வாழ வேண்டுமென்றால், பொருட்களை ஒழுங்காயும் சுத்தமாயும் வைக்கக் கற்றுக்கொள்வதற்கு இப்பொழுதே காலம் என்று நீ சொல்வாய், அல்லவா? — இந்தப் பூமி ஒரு பரதீஸாக வேண்டுமென்று நாம் உண்மையில் விரும்புகிறோம் என்பதைக் காட்டுவதற்கு இது ஒரு வழி, அல்லவா? —

மற்ற வழிகளிலுங்கூட மக்கள் மாறுவார்கள். பரதீஸ் சமாதானத்துக்குரிய ஓர் இடமாயிருக்கும். ஆனால் இன்று எல்லோரும் சமாதானமுள்ளவர்களாக இல்லை. சில ஆட்கள் மற்றவர்களிடமாகக் கத்திக் கூச்சல் போடுகின்றனர். அவர்கள் மற்ற ஆட்களை அடித்துக் காயப்படுத்துகின்றனர். அவர்கள் மூர்க்க மிருகங்களைப் போலவே நடந்துகொள்கின்றனர். அவர்கள் சமாதானமாய் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பரதீஸில், அவர்கள் ‘எவ்விதத் தீங்கு செய்யவோ பாழ்படுத்தவோமாட்டார்கள்.’—ஏசாயா 11:9.

நீ எப்பொழுதும் மற்றவர்களுடன் சமாதானமுள்ளவனாய் இருக்கிறாயா? — நாம் பரதீஸில் வாழப் போகிறோம் என்றால், நாம் சமாதானமாயிருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும், அல்லவா? —

பரதீஸில் வாழ்வது மிக நல்ல காரியமாயிருக்கும். கடவுள் நமக்கு அப்பொழுது அதிசயமான காரியங்களைச் செய்யப்போவதாக வாக்கு கொடுக்கிறார். உன்னுடைய பைபிளில் வெளிப்படுத்தின விசேஷம் 21-ம் அதிகாரம், 3-ம் 4-ம் வசனங்களுக்குத் திருப்பு. அது சொல்வதை நாம் வாசிக்கலாம்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”

இதைச் சற்று நினைத்துப் பார்! கடவுள் நம்மைக் கவனித்துக் காப்பார். நாம் ஒருபோதும் விசனமடையவோ அதனால் அழவோ வேண்டியதிராது. ஒருவருக்கும் வியாதியோ அதனால் உண்டாகும் வேதனையோ இராது. ஒருவரும் மரிக்க வேண்டியதில்லை. பரதீஸில் இந்த விதமாகவே இருக்கும்.

நீ உண்மையில் பரதீஸில் வாழ விரும்புகிறாயா? — எனக்கு விருப்பம். இப்பொழுது ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்கிறோமோ அது, நாம் அங்கே இருப்போமோ இருக்கமாட்டோமோ என்பதைப் பாதிக்கிறது. நாம் பரதீஸில் வாழ விரும்புகிறோம் என்றால், அதற்காக ஆயத்தம் செய்யவேண்டிய காலம் இதுவே.

(இந்தப் பூமி என்றுமாக நிலைத்திருக்கும். கடவுள் இதை வாழ்வதற்கு உகந்த மிக நல்ல இடமாக்குவார். சங்கீதம் 104:5 [103:5, டூ.வெ.]; 37:10, 11 [36:10, 11, டூ.வெ.]; நீதிமொழிகள் 2:21, 22; ஏசாயா 35:5, 6; மீகா 4:3, 4 ஆகியவற்றில் இதைப்பற்றி மேலுமதிகத்தை வாசியுங்கள்.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்