பாட்டு 89
அன்பின் தெய்வீக மாதிரி
1. யெகோவா தேவன்
ஞானமாய்க் கொடுத்தார்,
நமக்கு அளித்தார்,
நாமும் விழாமல் நிலைக்கத் தந்தாரே
நல் தெய்வீக மாதிரியே.
அவர் கையாளும் சிறப்பான வழி,
நாம் செல்வதற்கு
அவர் காட்டும் வழி.
நாமும் பிரிந்து
செல்லாதவழியே தேவ வழி,
அன்பின் வழியே.
2. தேவபாதை செல்,
சகோதர அன்பில்;
உண்மையாய் அவ்வன்பில்.
உதவ கவனமாயிருப்போமே.
கவனமாய் இருப்போமே.
எப்பொழுதும் நாம்மெய்
அன்பைக் காண்பிப்போம்.
பிறர்தவறாதிருக்கவும் காப்போம்.
சிலர் தள்ளுண்டு
போகாமல் நாம் காப்போம்
சகோதர அன்பைக் காண்பிப்போம்.
3. யெகோவா தேவன்
அன்புள்ளவர் என்றும்,
எப்போதும், ஆம் என்றும்.
அவர் அமைப்பும்
உண்மையாய் போற்றுமே.
போற்றிடுமே, போற்றிடுமே.
கேட்போருக்கெல்லாம் அவர் பேர்கூறுவோம்.
“வேறேஆடுகள்” சத்தியம்காணச் செய்வோம்.
அவர் சேனையை மேன்மேலும் மதிப்போம்.
இவ்வாறு நாம்
அன்பைக் காண்பிப்போம்.