பாட்டு 102
உயிர்த்தெழுதல் மகிழ்ச்சி
1. லாசரு தூங்கினான்
கல்லறையிலே.
சகோதரிகளும்
துக்கித்தனரே!
‘இயேசு முன்
வந்திருந்தால் மரித்திரான்,
அவன் ஹேடீஸிற்குள்
பிரவேசித்திரான்.’
கல்லறைக்கு நண்பர்
இயேசு சென்றாரே,
‘லாசருவெளிவா!’
என்றழைத்தாரே.
மரித்த லாசரு
கீழ்ப்படிந்தானே.
நண்பர்கட்கு
அன்று மகிழ்ச்சிதானே!
2. இயேசு மரித்ததும்
அவர் சீஷர்கள்
விடுதலை இல்லை
என்றெண்ணினார்கள்.
அவரை கல்லறையிலே
வைத்தார்கள்.
அவர்கள் துயரில்
ஆழ்ந்திருந்தார்கள்!
ஹேடீஸோ
வைத்துக்கொண்டில்லை தனக்குள்,
தேவன் எழுப்பினார்
மூன்றே நாளிற்குள்.
அதைப்பார்த்த
சீஷர் மகிழ்கின்றாரே.
இயேசு ஹேடீஸின்
சாவியைப் பெற்றாரே.
3. ஆதாம் பாவத்தால்
மரணம் வந்தது.
உயிர்த்தெழுதல்
இயேசுவால் வந்தது.
மரித்தவர்கள்
அவர்சத்தம் கேட்பர்,
குறித்தகாலத்தில்
எழுந்திருப்பர்.
தேவசிங்காசனம்
முன்நின்றிடுவர்,
தாங்கள் செய்தவை
பேரில்தீர்ப்படைவர்.
ஜீவபுத்தகத்தில்
பெயர்பெற்றோரே
புதிய பூமியில்
என்றும் வாழ்வரே.