பாட்டு 149
“தேவன் பொய் சொல்லக்கூடாதவர்”
1. ஆபிரகாம் சோதனையில் சிறந்தாரே,
ஆசீர்வாத வாக்குகளைப் பெற்றாரே.
ஆசிகளை மனக்கண்ணால் கண்டாரே,
தேவன் பொய் சொல்லார் என்று அறிந்தாரே.
2. தம்வாக்கின் மாறாமையைக் காண்பித்தாரே,
ஆபிரகாமிடமும் ஆணையிட்டாரே.
நம்பிக்கையுடன் தேவனைப் போற்றலாம்.
தேவன் பொய் சொல்லார் என்பதை நம்பலாம்.
3. நம் விசுவாசத்தை ஊன்றவைத்தாரே,
அதற்காக தேவன் ஆணையிட்டாரே.
நாம் விசுவாசத்தில் நிலை நிற்போமே.
தேவன் பொய் சொல்லார் என்று அறிவோமே.
4. உன்னத யெகோவா உண்மையின் தேவன்.
தம்பக்தர்களைக் கைவிடாததேவன்.
வார்த்தையையும் ஆணையையும் காப்பவர்.
ஆம், நம் தேவன் பொய் சொல்லக்கூடாதவர்.