உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • gf பாடம் 17 பக். 28-29
  • நண்பர் வேண்டுமா, நண்பராகுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நண்பர் வேண்டுமா, நண்பராகுங்கள்!
  • கடவுளுடைய நண்பர்
  • இதே தகவல்
  • கடவுளுடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால்...
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
கடவுளுடைய நண்பர்
gf பாடம் 17 பக். 28-29

பாடம் 17

நண்பர் வேண்டுமா, நண்பராகுங்கள்!

நட்புக்கு அடிப்படை அன்பு. யெகோவாவை பற்றி அதிகமாக கற்றுக்கொள்ளும்போது அவர் மீதுள்ள உங்களுடைய அன்பும் அதிகரிக்கும். கடவுள் மீதுள்ள அன்பு வளர வளர அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் வளரும். இது இயேசு கிறிஸ்துவின் சீஷராவதற்கு உங்களை உந்துவிக்கும். (மத்தேயு 28:19) யெகோவாவின் சாட்சிகளுடைய மகிழ்ச்சியான குடும்பத்தோடு சேர்ந்து நீங்களும் காலமெல்லாம் கடவுளுடைய நட்பை அனுபவிக்கலாம். அப்படியானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கடவுளை நேசிக்கிறீர்கள் என்பதை அவருடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதன் மூலம் காட்ட வேண்டும். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”​—⁠1 யோவான் 5:3.

கற்றவைகளை பின்பற்றுங்கள். இதற்கு உதாரணமாக இயேசு ஒரு கதையை சொன்னார். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டை கற்பாறையின் மீது கட்டினான். புத்தியில்லாத மனிதனோ மணலின் மீது கட்டினான். பெரும் புயல் வீசியபோது பாறையின் மீது கட்டின வீடு விழவில்லை. ஆனால் மணலின் மீது கட்டின வீடோ இடிந்து விழுந்தது. தம்முடைய போதனைகளை கேட்டு அதன்படி வாழ்பவர்கள் பாறையின் மீது வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறார்கள் என்று இயேசு சொன்னார். தம்முடைய போதனைகளை கேட்டு அதன்படி வாழாதவர்களோ மணலின் மீது வீட்டைக் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறார்கள் என்று சொன்னார். நீங்கள் எந்த மனிதனை போன்று இருக்க விரும்புகிறீர்கள்?​—⁠மத்தேயு 7:24-27.

ஒப்புக்கொடுத்தல். ஒப்புக்கொடுத்தல் என்பது நீங்கள் என்றென்றைக்கும் யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை ஜெபத்தில் அவரிடம் தெரிவிப்பதாகும். கடவுளுடைய சித்தத்தைச் செய்வது, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர் என்பதை காட்டுகிறது.​—⁠மத்தேயு 11:29.

முழுக்காட்டுதல். “அவருடைய நாமத்தை தொழுதுகொண்டு, முழுக்காட்டுதல் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு.”​—⁠அப்போஸ்தலர் 22:16, NW.

கடவுளுடைய சேவையில் முழுமையாக ஈடுபடுங்கள். “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே [“யெகோவாவுக்கென்றே,” NW] மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.”​—⁠கொலோசெயர் 3:⁠24.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்