உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 37 பக். 212-பக். 214 பாரா. 5
  • முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • தலைப்பையும் பிரதான குறிப்புகளையும் உயர்த்திக்காண்பித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • குறிப்புத்தாளை தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 37 பக். 212-பக். 214 பாரா. 5

படிப்பு 37

முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முக்கிய குறிப்புகளுக்கு விசேஷ கவனம் செலுத்தும் விதத்தில் தகவல்களை ஒழுங்கமைத்து பேச்சைக் கொடுங்கள்.

ஏன் முக்கியம்?

ஞாபகத்தில் வைப்பதற்கு மட்டுமல்லாமல், தியானிப்பதற்கும் பொருத்துவதற்கும் உதவுகிறது.

ஒரு பேச்சில் முக்கிய குறிப்புகள் யாவை? பேசிக்கொண்டே போகையில் சுருக்கமாக சொல்கிற ஏதோ சுவாரஸ்யமான அம்சங்கள் அல்ல. அவை விரிவாக எடுத்துரைக்க வேண்டிய முக்கிய கருத்துக்கள். உங்களுடைய குறிக்கோளை எட்டுவதற்கு உயிர்நாடியாக விளங்கும் கருத்துக்களும் அவையே.

தகவல்களை ஞானமாக தேர்ந்தெடுத்து ஒழுங்கமைப்பதே முக்கிய குறிப்புகளைத் சிறப்பித்துக் காட்டுவதற்கு உதவும் திறவுகோல். பேச்சிற்காக ஆராய்ச்சி செய்கையில் பெரும்பாலும் ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் எதைப் பயன்படுத்துவது என்பதை எப்படி தீர்மானிக்கலாம்?

முதலாவதாக, சபையாரை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் உங்களுடைய பொருளைப் பற்றி நன்கு அறிந்தவர்களா அறியாதவர்களா? அவர்களில் பெரும்பாலோர் பைபிள் சொல்வதை ஒத்துக்கொள்கிறார்களா, அல்லது சிலர் சந்தேகப்படுகிறார்களா? அந்தப் பொருளைப் பற்றி பைபிள் சொல்வதை கடைப்பிடிக்க முயலும்போது, எப்படிப்பட்ட சவால்களை அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படுகிறார்கள்? இரண்டாவதாக, சபையாரிடம் அந்தப் பொருளில் பேசும்போது உங்களுடைய குறிக்கோளை மனதில் தெளிவாக வைத்திருங்கள். இந்த இரண்டு வழிமுறைகளையும் பயன்படுத்தி, தகவல்களை சீர்தூக்கிப் பார்த்து, உண்மையிலேயே பொருத்தமானவற்றை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

மையப்பொருளும் முக்கிய குறிப்புகளும் அடங்கிய ஒரு குறிப்புத்தாள் கொடுக்கப்பட்டால், அதிலுள்ளதை நீங்கள் அப்படியே பேச வேண்டும். என்றாலும், ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் விரிவாக்கும்போது மேற்கூறப்பட்ட அம்சங்களை நினைவில் வைத்திருந்தால், நீங்கள் கொடுக்கும் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்புத்தாள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றால் முக்கிய குறிப்புகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு.

முக்கிய குறிப்புகளை மனதில் தெளிவாக வைத்திருந்து அவற்றின் கீழுள்ள விவரங்களை ஒழுங்கமைத்திருந்தால், பேச்சு கொடுப்பது சுலபமாக இருக்கும். சபையாரும் அதிலிருந்து அதிக பயனடைவார்கள்.

தகவலை ஒழுங்கமைக்கும் பல்வேறு வழிகள். உங்களுடைய பேச்சின் பொருளுரையை ஒழுங்கமைப்பதற்கு பல்வேறு முறைகளை கையாளலாம். அவை உங்களுக்கு பரிச்சயமாகும்போது, உங்களுடைய குறிக்கோளைப் பொறுத்து, அவற்றில் பல பலன்தரத்தக்கவையாக இருப்பதை காண்பீர்கள்.

தகவல்களை பொருள்வாரியாக பிரித்துக்கொள்வதே (topical subdivision) பல்வகை பயனுடைய முறை. (ஒவ்வொரு முக்கிய குறிப்பும் தேவை, ஏனெனில் பொருளைப் புரிந்துகொள்வதற்கு அல்லது உங்கள் பேச்சின் குறிக்கோளை அடைவதற்கு இது உதவுகிறது.) காலவரிசைக் கிரமத்தில் அளிப்பது மற்றொரு முறை. (உதாரணமாக, ஜலப்பிரளயத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை அடுத்து, பொ.ச. 70-⁠ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்கு முன்பு நடந்த சம்பவங்களை சொல்லலாம். பிறகு நம்முடைய நாளில் நடக்கும் சம்பவங்களைக் குறிப்பிடலாம்.) மூன்றாவது முறை காரணகாரியம் (cause and effect). (இதை எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம். உதாரணமாக, தற்போதைய சூழ்நிலையுடன், அதாவது காரியத்துடன் ஆரம்பித்து, பிறகு அதற்குரிய காரணத்தைக் காட்டலாம்.) எதிர்மறைகளை உபயோகிப்பது நான்காவது முறை. (நன்மையையும் தீமையையும் அல்லது நேர்மறையானவற்றையும் எதிர்மறையானவற்றையும் வேறுபடுத்திக் காட்டலாம்.) சிலசமயங்களில் ஒரே பேச்சில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தலாம்.

யூத நியாய சங்கத்திற்கு முன்பு ஸ்தேவான் பொய் குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் காலவரிசைக் கிரம முறையில் வலிமைமிக்க பேச்சு கொடுத்தார். அப்போஸ்தலர் 7:2-53-⁠ஐ வாசிக்கையில், அவர் தேர்ந்தெடுத்த குறிப்புகள் அர்த்தமுடையவையாக இருப்பதை கவனியுங்கள். அவர்களால் மறுக்க முடியாத சரித்திரத்தை முதலில் ஸ்தேவான் தெளிவாக விளக்கினார். அதற்குப் பின்பு, யோசேப்பை அவருடைய சகோதரர்கள் ஒதுக்கித் தள்ளியபோதிலும் விடுதலை அளிப்பதற்கு கடவுள் அவரை பயன்படுத்தியதை குறிப்பிட்டார். அடுத்து, கடவுள் மோசேயை பயன்படுத்தினார், ஆனால் யூதர்களோ அவருக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை காட்டினார். தங்களுடைய முற்பிதாக்கள் காட்டிய இதே குணத்தைத்தான் இயேசு கிறிஸ்துவை கொலை செய்த யூதர்களும் காட்டினார்கள் என்பதை வலியுறுத்தி தன் பேச்சை முடித்தார்.

அநேக முக்கிய குறிப்புகளைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவொரு மையப்பொருளுக்கும் சில அடிப்படை அம்சங்களே இருக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முக்கிய குறிப்புகளை விரல்விட்டே எண்ணிவிடலாம். ஐந்து நிமிடமோ 10 நிமிடமோ 30 நிமிடமோ அல்லது அதற்கும் அதிகமோ பேசினாலும் இதுவே உண்மை. அதிகமான குறிப்புகளை சிறப்பித்துக்காட்ட முயலாதீர்கள். ஒரு பேச்சிலிருந்து சில கருத்துக்களையே சபையாரால் கிரகிக்க முடியும். பேச்சு எந்தளவுக்கு நீண்டதாக இருக்கிறதோ அந்தளவுக்கு முக்கிய குறிப்புகள் அழுத்தம் திருத்தமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

நீங்கள் எத்தனை முக்கிய குறிப்புகளைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொன்றையும் போதுமான அளவுக்கு விளக்குகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் ஆழ்ந்து சிந்திக்க சபையாருக்கு போதுமான நேரத்தை அனுமதியுங்கள்; அப்போதுதான் அது அவர்களுடைய மனதில் ஆழமாக பதியும்.

உங்களுடைய பேச்சு எளிமையாக இருந்தது என்ற எண்ணத்தை கேட்போரின் மனதில் ஏற்படுத்த வேண்டும். இது, நீங்கள் எவ்வளவு தகவலை தருகிறீர்கள் என்பதையே எப்பொழுதும் சார்ந்திருப்பதில்லை. உங்களுடைய கருத்துக்களை சில முக்கிய தலைப்புகளின்கீழ் தெளிவாக தொகுத்து அவற்றை ஒன்றொன்றாக விளக்கினால், அந்தப் பேச்சு புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் ஞாபகத்தில் வைப்பதற்கு சுலபமாகவும் இருக்கும்.

முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள். தகவல்களை நீங்கள் சரியாக ஒழுங்கமைத்திருந்தால், முக்கிய குறிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது சிரமமாக இருக்காது.

முக்கிய கருத்திற்கு கவனத்தை ஈர்த்து அதை விரிவுபடுத்தும் விதத்தில் அத்தாட்சிகளையும் வசனங்களையும் மற்ற தகவல்களையும் அளிப்பதே முக்கிய குறிப்பை சிறப்பித்துக் காட்டுவதற்கு பிரதான வழி. அனைத்து துணைக் குறிப்புகளும் அந்த முக்கிய குறிப்பை தெளிவுபடுத்தவோ உறுதிப்படுத்தவோ அல்லது விரிவுபடுத்தவோ வேண்டும். கேட்பதற்கு ஆர்வமூட்டுவதாக இருந்தாலும் சம்பந்தமில்லாத குறிப்புகளை சேர்க்காதீர்கள். துணைக் குறிப்புகளை விளக்கும்போது, முக்கிய குறிப்போடு அதற்குள்ள தொடர்பை தெளிவாக காட்டுங்கள். சபையாரே அதைத் தொடர்புபடுத்தி பார்க்கும்படி விட்டுவிடாதீர்கள். மையக் கருத்தை தெரிவிக்கும் முக்கிய வார்த்தைகளை மீண்டும் சொல்வதன் மூலம் அல்லது முக்கிய குறிப்பின் சாராம்சத்தையே அவ்வப்பொழுது சுருக்கமாக மறுபடியும் சொல்வதன் மூலம் இத்தொடர்பை காட்டலாம்.

பேச்சாளர்கள் சிலர் முக்கிய குறிப்புகளை ஒவ்வொன்றாக இலக்கமிட்டு கூறுவதன் மூலம் அவற்றை சிறப்பித்துக் காட்டுகிறார்கள். முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுவதற்கு இது ஒரு வழியாக இருந்தாலும், தகவல்களை கவனமாக தேர்ந்தெடுத்து தர்க்க ரீதியில் விரிவாக்குவதற்கு மாற்றீடாக அமைந்துவிடக் கூடாது.

அத்தாட்சிகளை அளிப்பதற்கு முன்பு ஆரம்பத்திலேயே முக்கிய குறிப்பை சொல்லலாம். இது, கேட்கப்போகும் விஷயத்தின் மதிப்பை சபையார் உணர உதவும், அந்த முக்கிய குறிப்பை வலியுறுத்தியும் காட்டும். ஒரு குறிப்பை முழுமையாக விளக்கிய பிறகு அதை சுருக்கமாக தொகுத்துரைப்பதன் மூலம் நீங்கள் வலுப்படுத்தலாம்.

வெளி ஊழியத்தில். மேலே கூறப்பட்டுள்ள நியமங்கள் பேச்சுக்களுக்கு மட்டுமல்ல, வெளி ஊழியத்திற்கும் பொருந்தும். ஊழியத்திற்காக தயாரிக்கையில், அந்தப் பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் எதிர்ப்படும் ஏதேனும் முக்கிய பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பைபிள் தரும் நம்பிக்கை அந்தப் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கும் என்பதை காண்பிப்பதற்கு ஏற்ற ஒரு மையப்பொருளை தேர்ந்தெடுங்கள். அந்த மையப்பொருளை விரிவாக்குவதற்கு ஒருவேளை இரண்டு முக்கிய குறிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தக் குறிப்புகளுக்கு ஆதாரமாக எந்த வசனங்களை பயன்படுத்துவீர்கள் என்பதை தீர்மானியுங்கள். அதற்குப்பின் உரையாடலை எப்படி ஆரம்பிப்பீர்கள் என்பதை திட்டமிடுங்கள். இவ்வாறு தயாரித்தால் உங்கள் உரையாடலை மாற்றியமைத்துக் கொள்வது எளிதாக இருக்கும். வீட்டுக்காரர் நினைவில் வைப்பதற்கு ஏற்ற ஒன்றை சொல்வதற்கும் உதவும்.

எப்படி செய்வது

  • முக்கிய குறிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, இந்தப் பொருளைப் பற்றி சபையார் எந்தளவு அறிந்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து, உங்களுடைய குறிக்கோளை தீர்மானியுங்கள். இந்த அம்சங்களை மனதில் வைத்து தகவலை ஒழுங்கமையுங்கள்.

  • முக்கிய கருத்துக்கும் அதை ஆதரிக்கும் அத்தாட்சிகள், வசனங்கள், பிற தகவல்கள் ஆகியவற்றிற்கும் இடையேயுள்ள தொடர்பை தெளிவாக காட்டுங்கள்.

  • ஒவ்வொரு முக்கிய குறிப்புக்கும் கவனம் செலுத்துங்கள். இலக்கமிட்டு சொல்லுதல், விவாதத்திற்கு ஆதாரமான தகவலை அளிப்பதற்கு முன் ஒவ்வொரு முக்கிய குறிப்பையும் குறிப்பிடுதல், அல்லது அதை விளக்கிய பிறகு அந்தக் குறிப்பை மீண்டும் எடுத்துரைத்தல் போன்றவற்றின் மூலம் இதைச் செய்யலாம்.

பயிற்சி: இந்த வாரத்திற்குரிய காவற்கோபுர படிப்புக் கட்டுரையை மறுபார்வை செய்யுங்கள். தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள உபதலைப்புகளையும் கேள்விப் பெட்டியில் உள்ள கேள்விகளையும் பயன்படுத்தி முக்கிய குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு வாரமும் இப்படி செய்வது பிரயோஜனமாக இருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்