உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rk பாகம் 8 பக். 20-21
  • மேசியா வருகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மேசியா வருகிறார்
  • உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
  • இதே தகவல்
  • மேசியா தோன்றுகிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ஒரு தேவதூதன் மரியாளைச் சந்திக்கிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • இயேசுவின் பிறப்பால் சமாதானம் பிறப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!
rk பாகம் 8 பக். 20-21

பாகம் 8

மேசியா வருகிறார்

தானியேல்... தீர்க்கதரிசனம் சொல்லி 500-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்திருந்த சமயம் அது. அப்போது ஒருநாள் இறைத்தூதர் ஜிப்ரில்... தாவூத் ராஜாவின் சந்ததியில் வந்த இளம் கன்னிப்பெண் மரியாளுக்குத் தோன்றி, “மகா தயவைப் பெற்றவளே, வாழ்க! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்று சொன்னார். (லூக்கா 1:28) ஆனால், மரியாள் இதைக் கேட்டவுடன் வெலவெலத்துப் போனார்! அப்படியானால், ஜிப்ரில் சொன்ன அந்த வாழ்த்துக்கு அர்த்தமென்ன?

இறைத்தூதர் ஜிப்ரில் மரியாள்முன் தோன்றுகிறார்

மேசியாவைப் பெற்றெடுப்பாள் என்று மரியாளிடம் ஜிப்ரில் சொன்னார்

‘மரியாளே, பயப்படாதே; நீ இறைவனுடைய தயவைப் பெற்றிருக்கிறாய்; இதோ! நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய். . . . அவருடைய தந்தையான தாவூதின் சிம்மாசனத்தை இறைவனாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்; . . . அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது’ என்று ஜிப்ரில் விளக்கினார். (லூக்கா 1:30-33) எவ்வளவு சந்தோஷமான செய்தி! மேசியாவுக்கு, ஆம் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘வாரிசுக்கு,’ மரியாள் தாயாகப்போகிறாள்!

அடுத்த வருடம் பெத்லகேமில் இயேசு பிறந்தார். அன்றிரவு... ஓர் இறைத்தூதர் அந்த ஊர் மேய்ப்பர்களுக்குத் தோன்றி, ‘நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். தாவூதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் [அல்லது, மீட்பர்] பிறந்துள்ளார். அவரே கிறிஸ்து’ என்று அறிவித்தார். (லூக்கா 2:10, 11, ERV) பின்பு, இயேசுவின் குடும்பம் நாசரேத்துக்கு குடிபெயர்ந்து சென்றது, அங்குதான் அவர் வளர்ந்து வந்தார்.

சரியாக கி.பி. 29-ஆம் ஆண்டில்... மேசியா வரவிருந்த அதே ஆண்டில்... இயேசு இறைத்தீர்க்கதரிசியாக சேவை செய்ய ஆரம்பித்தார்; அப்போது அவருக்கு “ஏறக்குறைய முப்பது வயது.” (லூக்கா 3:23) இறைவனே அவரை அனுப்பி வைத்தார் என்பதை அநேகர் புரிந்துகொண்டார்கள். “மகா தீர்க்கதரிசி நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்” என்று சொன்னார்கள். (லூக்கா 7:16, 17) சரி, இயேசு என்ன போதித்தார்?

இறைவனை நேசிக்கவும் வழிபடவும் மக்களுக்கு இயேசு போதித்தார்: ‘நம்முடைய இறைவனாகிய யெகோவா ஒரே யெகோவா; உன் இறைவனாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’ என்று சொன்னார். (மாற்கு 12:29, 30) ‘உன் இறைவனாகிய யெகோவாவை வணங்கி, அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என்றும் சொன்னார்.—லூக்கா 4:8.

ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி மக்களை இயேசு உந்துவித்தார்: “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். (மாற்கு 12:31) “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்; சொல்லப்போனால், திருச்சட்டத்தின் சாராம்சமும் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் சாராம்சமும் இதுதான்” என்றும் சொன்னார்.—மத்தேயு 7:12.

இறை அரசைப் பற்றி மக்களுக்கு இயேசு தீவிரமாய் பிரசங்கித்தார்: ‘நான் . . . இறைவனுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்’ என்றார். (லூக்கா 4:43) இறை அரசு ஏன் அவ்வளவு முக்கியம்?

இறை அரசு என்பது சுவர்க்கத்திலிருந்து பூமியை ஆளப்போகும் ஓர் அரசாங்கம் என்று வேதம் சொல்கிறது. மேசியாவே, அதாவது இயேசுவே, இறைவனால் நியமிக்கப்பட்ட அரசர். சுவர்க்கத்தில் மேசியாவுக்கு ‘ஆட்சியுரிமையும் மாட்சிமையும் அரசும் கொடுக்கப்பட்டதை’ தானியேல் தீர்க்கதரிசி முன்னரே தரிசனத்தில் பார்த்தார். (தானியேல் 7:14, பொ.மொ.) அந்த அரசு... இந்தப் பூமியை இன்பவனமாய் மாற்றி இறைமக்களுக்கு முடிவில்லா வாழ்வைத் தரும். நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாய் இருக்கிறதல்லவா?

உங்கள் பதில்?

  • மரியாளிடம் இறைத்தூதர் ஜிப்ரில் என்ன சொன்னார்?

  • கி.பி. 29-ல் என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது?

  • இயேசு எதைப் பற்றியெல்லாம் போதித்தார்?

  • இறை அரசு என்றால் என்ன, அது என்ன செய்யும்?

இயேசு ஒரு கூட்டத்தாருக்குப் போதிக்கிறார்

மேசியா என்ற இயேசு யார்?

“மேசியா,” “கிறிஸ்து” ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று அர்த்தம், அதாவது ஒரு ஸ்தானத்தை வகிப்பதற்கு இறைவனால் நியமிக்கப்பட்டவர் என்று அர்த்தம். மேசியா என்ற இயேசுவுக்கு இறைவன் உயிர் கொடுத்தார். எந்த ஆணின் உதவியுமின்றி மரியாள் என்ற கன்னிகையின் மூலம் இயேசுவை அற்புதகரமாகப் பிறக்கச் செய்தார்.

இயேசுமீது அநேகர் நம்பிக்கை வைத்ததற்குக் காரணம் என்ன? இதோ சில...

  • பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் அவர் கற்பித்தார்.

  • சத்தியத்தையும் நீதியையும் நேசித்தவர்களை அவரது போதனைகளும் முன்மாதிரியும் கவர்ந்தன.

  • இறை வல்லமையால் அநேக அற்புதங்களைச் செய்தார்.

  • பரிசுத்த வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்