பாகம் 13
கடவுளுக்குப் பிடித்த மாதிரி எப்படி வாழலாம்?
கெட்டதைச் செய்யாதீர்கள். 1 கொரிந்தியர் 6:9, 10
யெகோவாமேல் அன்பு இருந்தால், அவருக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்ய மாட்டோம்.
திருடுவது, அதிகமாகக் குடிப்பது, போதைப்பொருள் பயன்படுத்துவது இதெல்லாம் யெகோவாவுக்குப் பிடிக்காது.
சண்டை போடுவது, கொலை செய்வது, கருவைக் கலைப்பது, ஆணோடு-ஆணும் பெண்ணோடு-பெண்ணும் உறவுகொள்வது, அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவது கடவுளுக்குப் பிடிக்காது.
சிலைகளை வணங்குவது, மாயமந்திரம் பண்ணுவது, குறி கேட்பது எல்லாம் தவறு.
பூஞ்சோலை பூமியில் கெட்டவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
நல்லதைச் செய்யுங்கள். மத்தேயு 7:12
கடவுளைப் போல நடந்துகொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும், அப்போதுதான் அவருக்கு நம்மைப் பிடிக்கும்.
எல்லாரிடமும் அன்பாக இருங்கள், எல்லாருக்கும் தாராளமாக உதவி செய்யுங்கள்.
நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்.
இரக்கம் காட்டுங்கள், மன்னியுங்கள்.
யெகோவாவைப் பற்றியும் அவருடைய வழிகளைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். —ஏசாயா 43:10.