உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • gf பாடம் 14 பக். 22-23
  • கடவுளுடைய நண்பர்கள் கெட்டதை தவிர்க்கிறார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய நண்பர்கள் கெட்டதை தவிர்க்கிறார்கள்
  • கடவுளுடைய நண்பர்
  • இதே தகவல்
  • கடவுள் வெறுக்கிற பழக்கங்கள்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • கடவுளுக்குப் பிடித்த மாதிரி எப்படி வாழலாம்?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • பாகம் 13
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
  • கடவுள் மறுபடியும் கெட்டவர்களை அழிப்பாரா?
    பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
மேலும் பார்க்க
கடவுளுடைய நண்பர்
gf பாடம் 14 பக். 22-23

பாடம் 14

கடவுளுடைய நண்பர்கள் கெட்டதை தவிர்க்கிறார்கள்

கெட்ட செயல்களைச் செய்வதற்கு மக்களை சாத்தான் தூண்டுகிறான். யெகோவாவின் நண்பராக இருக்க விரும்புகிறவர் அவர் வெறுப்பதை வெறுக்க வேண்டும். (சங்கீதம் 97:10) கடவுளுடைய நண்பர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

பாலுறவு சம்பந்தமான பாவங்கள். “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:14) திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பாலுறவு கொள்வது தவறு.​—⁠1 கொரிந்தியர் 6:⁠18.

குடிவெறி. “குடிவெறியர் . . . கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.”​—⁠1 கொரிந்தியர் 6:10, NW.

கொலை, கருக்கலைப்பு. “கொலை செய்யாதிருப்பாயாக.”​—⁠யாத்திராகமம் 20:⁠13.

திருட்டு. “களவு செய்யாதிருப்பாயாக.” ​—⁠யாத்திராகமம் 20:⁠15.

பொய் சொல்லுதல். ‘பொய் நாவை’ யெகோவா வெறுக்கிறார்.​—⁠நீதிமொழிகள் 6:⁠17.

வன்முறை, கட்டுப்படுத்த முடியாத கோபம். “வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் [யெகோவா] வெறுக்கின்றார்.” (சங்கீதம் 11:5, பொ.மொ.) “மாம்சத்தின் கிரியைகள் . . . கோபங்கள்.”​—⁠கலாத்தியர் 5:19, 20.

சூதாடுதல். ‘பேராசைக்காரருடன் . . . உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்.’​—⁠1 கொரிந்தியர் 5:⁠11, பொ.மொ.

ஜாதி பகை, இனப் பகை. ‘பகைவரிடம் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.’​—⁠மத்தேயு 5:43, 44, பொ.மொ.

கடவுள் சொல்லும் இவை அனைத்தும் நம்முடைய நன்மைக்கானவை. கெட்ட செயல்களை தவிர்ப்பது எப்பொழுதும் சுலபமல்ல. ஆனால் யெகோவாவின் உதவியோடும் அவருடைய சாட்சிகளின் உதவியோடும், கடவுள் வெறுக்கும் செயல்களை நீங்கள் தவிர்க்க முடியும்.​—⁠ஏசாயா 48:17; பிலிப்பியர் 4:13; எபிரெயர் 10:24, 25.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்