உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • yc பாடம் 8 பக். 18-19
  • யோசியா நல்லவர்களோடு பழகினான்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யோசியா நல்லவர்களோடு பழகினான்
  • செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • இதே தகவல்
  • சரியானதைச் செய்யவே யோசியா விரும்பினார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இஸ்ரவேலின் கடைசி நல்ல ராஜா
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
yc பாடம் 8 பக். 18-19
யோசியா ராஜா அவரோட நண்பர் எரேமியா பேசுறதை கேட்கிறார்

பாடம் 8

யோசியா நல்லவர்களோடு பழகினான்

நல்ல பிள்ளையா இருக்கிறது கஷ்டமா?— நிறைய பேர் அப்படித்தான் சொல்றாங்க. யோசியா-னு ஒரு பையனுக்கும் நல்ல பிள்ளையா இருக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா, யோசியாவுக்கு நல்ல நண்பர்கள் இருந்தாங்க. நல்ல பிள்ளையா இருக்க உதவி செய்தாங்க. யோசியாவையும் அவரோட நண்பர்களையும் பத்தி இப்போ படிக்கலாமா?

யோசியாவோட அப்பா பேரு ஆமோன். அவர் யூதா நாட்டுக்கு ராஜாவா இருந்தார். ஆமோன் ரொம்ப கெட்டவர். சிலைகளை வணங்கினார். ஆமோன் செத்ததுக்கு அப்புறம், யோசியா ராஜாவா ஆனார். அப்போ அவருக்கு எட்டு வயசுதான். அப்பா மாதிரி அவரும் கெட்டவரா இருந்தாரா?— இல்லவே இல்லை!

செப்பனியா தீர்க்கதரிசி யெகோவா சொன்ன விஷயத்தை யூதா மக்கள்கிட்ட சொல்றார்

சிலைகளை வணங்கக் கூடாதுனு மக்கள்கிட்ட செப்பனியா சொன்னார்

சின்னப் பையனா இருக்கும்போதே, யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்க யோசியா ஆசைப்பட்டார். அதனால யெகோவாவுக்குப் பிடிச்சத செய்ற ஆட்களோட மட்டும் பழகுனாரு. அவங்க அவருக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க யார்?

ஒரு நண்பர் பேரு செப்பனியா. அவர் ஒரு தீர்க்கதரிசி. யெகோவா சொல்றத மக்கள்கிட்ட சொல்றவர்தான் தீர்க்கதரிசி. ‘சிலைகளை வணங்கினா உங்களுக்குக் கெட்டது நடக்கும்’னு யூதா நாட்டு மக்கள்கிட்ட செப்பனியா சொன்னார். யோசியா அவர் பேச்சைக் கேட்டார். சிலைகளை வணங்காம யெகோவாவை வணங்கினார்.

இன்னொரு நண்பர் பேரு எரேமியா. அவருக்கும் யோசியாவுக்கும் ஒரே வயசுதான் இருக்கும். சின்ன வயசுல இருந்தே ஒரே ஊர்ல இருந்தாங்க. எரேமியாவும் யோசியாவும் நல்ல நண்பர்கள். ரெண்டு பேரும் யெகோவா பேச்சை கேட்டாங்க, நல்ல பிள்ளையா இருந்தாங்க. யோசியா செத்ததுக்கு அப்புறம், அவரை நினைச்சு நினைச்சு எரேமியா ஒரு சோகப் பாட்டை எழுதினார்.

யோசியாவும் எரேமியாவும் நல்ல பிள்ளைகளா இருந்தாங்க

யோசியாகிட்ட நீ என்ன கத்துக்கிட்ட?— யோசியா சின்ன பையனா இருந்தப்பவே, நல்ல பிள்ளையா நடந்துக்க ஆசைப்பட்டாரு. அதனால, யெகோவாவுக்குப் பிடிச்சத செய்த ஆட்களோட மட்டும் பழகினாரு. நீயும் நல்ல நண்பர்களோட பழகு. அப்பதான் நல்ல பிள்ளையா இருக்க முடியும்.

பைபிளில் படிங்க

  • 2 நாளாகமம் 33:21-25; 34:1, 2; 35:25

கேள்விகள்:

  • யோசியாவோட அப்பா பேரு என்ன? அவர் நல்லவரா?

  • சின்னப் பையனா இருந்தப்பவே யோசியா எப்படி இருக்க ஆசைப்பட்டார்?

  • யோசியாவின் நண்பர்கள் பேரு என்ன?

  • எந்த மாதிரி நண்பர்களோடு நீ பழகுவ? ஏன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்