உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 56 பக். 134
  • யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • யோசியா நல்லவர்களோடு பழகினான்
    செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இஸ்ரவேலின் கடைசி நல்ல ராஜா
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • சரியானதைச் செய்யவே யோசியா விரும்பினார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 56 பக். 134
சுருளில் எழுதியிருந்ததை யோசியா ராஜாவுக்கு சாப்பான் வாசித்துக்காட்டுகிறார்

பாடம் 56

யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்

யோசியா எட்டு வயதில் யூதாவின் ராஜாவாக ஆனார். அந்தச் சமயத்தில், மக்கள் மாயமந்திரம் செய்தார்கள், சிலைகளை வணங்கினார்கள். 16 வயதில், யெகோவாவை எப்படி வணங்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள யோசியா முயற்சி செய்தார். 20 வயதில், அந்தத் தேசத்தில் இருந்த சிலைகளையும் பலிபீடங்களையும் உடைத்துப்போட ஆரம்பித்தார். 26 வயதில், யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்க ஏற்பாடு செய்தார்.

தலைமைக் குருவான இல்க்கியா, திருச்சட்டத்தின் சுருளை ஆலயத்தில் கண்டுபிடித்தார். அது ஒருவேளை மோசே எழுதிய சுருளாக இருக்கலாம். ராஜாவின் செயலாளரான சாப்பான் அதை ராஜாவிடம் கொண்டுவந்து, சத்தமாக வாசித்தார். மக்கள் பல வருஷங்களாகவே யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை என்பது அப்போதுதான் யோசியாவுக்குப் புரிந்தது. அதனால் அவர் இல்க்கியாவிடம், ‘யெகோவா நம்மேல் ரொம்பக் கோபமாக இருக்கிறார். நீங்கள் போய் அவரிடம் பேசுங்கள். நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொல்வார்’ என்றார். உல்தாள் என்ற பெண் தீர்க்கதரிசி மூலமாக யெகோவா பதில் சொன்னார். ‘யூதா மக்கள் என்னை விட்டுவிட்டார்கள். அவர்களுக்குத் தண்டனை கொடுப்பேன். ஆனால், யோசியா ராஜாவாக இருக்கிற காலத்தில் அதைக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அவன் ரொம்பத் தாழ்மையாக நடந்துகொண்டான்’ என்று சொன்னார்.

யெகோவாவின் திருச்சட்டம் எழுதப்பட்டிருந்த சுருளை இல்க்கியா கண்டுபிடிக்கிறார்

யோசியா ராஜா இதைக் கேட்டபோது, ஆலயத்துக்குப் போய், யூதா மக்கள் எல்லாரையும் அங்கே வரச் சொன்னார். பிறகு, யெகோவாவின் திருச்சட்டத்தை எல்லாருக்கும் முன்னால் சத்தமாக வாசித்தார். யெகோவாவுக்கு முழு மனதோடு கீழ்ப்படிவோம் என்று யோசியாவும் மக்களும் அப்போது சத்தியம் செய்தார்கள்.

யூதா தேசத்து மக்கள் பல வருஷங்களாக பஸ்கா பண்டிகையைக் கொண்டாடவில்லை. ஆனால், பஸ்கா பண்டிகையை ஒவ்வொரு வருஷமும் கொண்டாட வேண்டும் என்று திருச்சட்டத்தில் எழுதியிருந்தது. யோசியா அதைத் தெரிந்துகொண்டதால், ‘நாம் யெகோவாவுக்கு பஸ்கா கொண்டாடலாம்’ என்று மக்களிடம் சொன்னார். பிறகு, நிறைய பலிகளைக் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆலயத்தில் பாடுவதற்கு பாடகர் குழுவை ஏற்பாடு செய்தார். பிறகு, பஸ்காவையும் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையையும் ஏழு நாட்களுக்கு மக்கள் கொண்டாடினார்கள். சாமுவேலின் காலத்துக்குப் பிறகு அந்த மாதிரி ஒரு பஸ்கா கொண்டாடப்படவில்லை. யோசியா கடவுளுடைய சட்டத்தை ரொம்ப நேசித்தார். உனக்கும் யெகோவாவைப் பற்றிப் படிக்கப் பிடிக்குமா?

“உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.”—சங்கீதம் 119:105

கேள்விகள்: கடவுளுடைய திருச்சட்டத்தில் எழுதியிருந்ததைக் கேட்டபோது யோசியா ராஜா என்ன செய்தார்? யோசியாவைப் பற்றி யெகோவா என்ன சொன்னார்?

2 ராஜாக்கள் 21:26; 22:1–23:30; 2 நாளாகமம் 34:1–35:25

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்