உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • yc பாடம் 14 பக். 30-31
  • பூமி முழுவதும் ஒரே ஆட்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி முழுவதும் ஒரே ஆட்சி
  • செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • இதே தகவல்
  • “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • கடவுளுடைய நண்பர்கள் பரதீஸில் வாழ்வர்
    கடவுளுடைய நண்பர்
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? எங்கே வாழ்வார்கள்?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
yc பாடம் 14 பக். 30-31
அழகான பூமியை இயேசு ஆட்சி செய்றார்

பாடம் 14

பூமி முழுவதும் ஒரே ஆட்சி

எந்த ஆட்சியை பத்தி இப்போ படிக்கப்போறோம்?— கடவுளோட ஆட்சியை பத்தி. அந்த ஆட்சியில இந்தப் பூமி ஒரு அழகான தோட்டமா மாறப்போகுது. உனக்கு அதை பத்தி தெரிஞ்சிக்க ஆசையா?—

ஆட்சி செய்யணும்னா அதுக்கு ஒரு ராஜா வேணும். கடவுளோட ஆட்சியில ராஜா யார்?— இயேசுதான் ராஜா. அவர் பரலோகத்தில இருக்கிறார். சீக்கிரத்தில அவர்தான் நம்ம எல்லாருக்கும் ராஜாவா இருப்பார். இயேசு பூமியை ஆட்சி செய்யும்போது சந்தோஷமா இருக்குமா?—

அழகான பூமியில நீ என்ன செய்வ?

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். எல்லாரும் அன்பா இருப்பாங்க. யாருமே சண்டை போட மாட்டாங்க. நோய் வராது, யாரும் சாக மாட்டாங்க. கண்ணு தெரியாதவங்களுக்கு கண்ணு தெரியும். காது கேட்காதவங்களுக்குக் காது கேட்கும். நடக்க முடியாதவங்க துள்ளிக் குதிச்சு ஓடுவாங்க. விதவிதமா சாப்பாடு கிடைக்கும். மிருகங்கள்கூட ஒற்றுமையா இருக்கும். யாரையும் கடிக்காது. செத்துப்போனவங்க உயிரோட வருவாங்க. ரெபேக்காள், ராகாப், தாவீது, எலியா எல்லாரும் உயிரோட வருவாங்க. அவங்ககிட்ட போய் நீ பேசுவியா?—

யெகோவா உன்மேல உயிரையே வைச்சிருக்காரு. நீ சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படுறாரு. யெகோவாவை பத்தி நிறைய படிச்சி தெரிஞ்சிக்கோ. அவர் பேச்சை கேளு. அப்போ நீயும் அழகான பூமியில எப்பவும் வாழ முடியும். அந்த பூமியில வாழ உனக்கு ஆசையா?—

பைபிளில் படிங்க

  • ஏசாயா 2:4; 11:6-9; 25:8; 33:24; 35:5, 6

  • யோவான் 5:28, 29; 17:3

கேள்விகள்:

  • கடவுளோட ஆட்சியில ராஜா யார்?

  • இயேசு யாரை ஆட்சி செய்வார்?

  • இயேசு ராஜாவாகும்போது பூமியில என்ன நல்லது நடக்கும்?

  • அழகான பூமியில எப்பவும் வாழணும்னா, நீ என்ன செய்யணும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்