உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 29 பக். 72-பக். 73 பாரா. 8
  • ஓய்வுநாளில் நல்லது செய்யலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஓய்வுநாளில் நல்லது செய்யலாமா?
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இதே தகவல்
  • ஓய்வுநாளில் நற்காரியங்களைச் செய்தல்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • ஓய்வுநாளில் நல்ல செயல்களைச் செய்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • அவர் மக்களை நேசித்தார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • “சீலோவாம் குளத்திலே கழுவு”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 29 பக். 72-பக். 73 பாரா. 8
பெத்சதா குளத்துக்குப் பக்கத்தில் ஒரு நோயாளியிடம் இயேசு பேசுகிறார்

அதிகாரம் 29

ஓய்வுநாளில் நல்லது செய்யலாமா?

யோவான் 5:1-16

  • யூதேயாவில் இயேசு பிரசங்கிக்கிறார்

  • குளத்துக்குப் பக்கத்தில் ஒருவரைக் குணமாக்குகிறார்

கலிலேயாவில் இயேசு மிகப் பெரிய அளவில் செய்த ஊழியத்துக்கு நல்ல பலன்கள் கிடைத்தன. ஆனால், “மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும்” என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதனால், அவர் போய் ‘யூதேயாவிலிருந்த ஜெபக்கூடங்களில் பிரசங்கிக்கிறார்.’ (லூக்கா 4:43, 44) அவர் சரியான சமயத்தில்தான் யூதேயாவுக்கு வந்திருக்கிறார். ஏனென்றால், எருசலேமில் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஒருவேளை மார்ச் அல்லது ஏப்ரல் மாதமாக இருக்கலாம்.

கலிலேயாவில் இயேசு செய்த ஊழியத்தைப் பற்றிச் சுவிசேஷங்களில் நிறைய தகவல்களைப் படிக்கிறோம். ஆனால், யூதேயாவில் செய்த ஊழியத்தைப் பற்றிச் சுவிசேஷங்கள் அந்தளவுக்குச் சொல்வதில்லை. யூதேயா மக்கள் இயேசுவின் செய்தியை ஆர்வமாகக் கேட்காவிட்டாலும், அவர் போகிற இடங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிறார், மக்களுக்கு நல்லது செய்கிறார்.

கி.பி. 31-ஆம் வருஷத்தின் பஸ்காவைக் கொண்டாடுவதற்காக யூதேயாவின் தலைநகரமான எருசலேமுக்கு இயேசு போகிறார். அங்கே ‘ஆட்டு நுழைவாசலுக்கு’ பக்கத்தில், பரபரப்பான ஒரு பகுதியில், பெத்சதா என்ற பெரிய குளம் இருக்கிறது. அந்தக் குளத்தைச் சுற்றி மண்டபங்கள் இருக்கின்றன. அந்தக் குளத்தின் தண்ணீர் கலங்கும்போது அதில் இறங்கினால் தங்களுடைய வியாதியெல்லாம் குணமாகிவிடும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதனால், ஏராளமான நோயாளிகளும், பார்வை இல்லாதவர்களும், கால் ஊனமானவர்களும் அந்தக் குளத்துக்கு வருகிறார்கள்.

அன்று ஓய்வுநாள்; 38 வருஷங்களாக நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற ஒருவரை இயேசு அங்கே பார்க்கிறார். அவரிடம் போய், “நீங்கள் குணமாக விரும்புகிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு அந்த நோயாளி, “ஐயா, குளத்து நீர் கலங்கும்போது என்னை அதில் இறக்கிவிட யாரும் இல்லை; நான் இறங்குவதற்குள் வேறு யாராவது எனக்கு முன்னால் இறங்கிவிடுகிறார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 5:6, 7.

அப்போது இயேசு, “எழுந்து, உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்” என்று அவரிடம் சொல்கிறார். (யோவான் 5:8) அதைக் கேட்டு அந்த நோயாளிக்கும் அங்கிருக்கிற மற்றவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இயேசு சொன்னபடியே நடக்கிறது. அந்த மனிதர் உடனே குணமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறார்.

இயேசு குணமாக்கிய மனிதரிடம் யூதர்கள் பேசுகிறார்கள்

இந்த அற்புதத்தைப் பார்த்து யூதர்கள் சந்தோஷப்படவில்லை. “இது ஓய்வுநாள், நீ படுக்கையைத் தூக்கிக்கொண்டு போவது சரியல்ல” என்று குணமடைந்த மனிதரிடம் சொல்கிறார்கள். அவரோ, “என்னைக் குணமாக்கியவர்தான் ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று என்னிடம் சொன்னார்” என்கிறார். (யோவான் 5:10, 11) உடனே, ஓய்வுநாளில் குணமாக்கிய நபரை அந்த யூதர்கள் குறை சொல்கிறார்கள்.

“‘இதை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று உனக்குச் சொன்ன அந்த மனுஷன் யார்?” என்று குணமடைந்த மனிதரிடம் கேட்கிறார்கள். “இயேசு கூட்டத்தோடு கூட்டமாகப் போய்விட்டதால்” அந்த மனிதரைக் குணமாக்கியது யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. குணமடைந்த மனிதருக்கும் இயேசுவின் பெயர் தெரியவில்லை. (யோவான் 5:12, 13) பிறகு, அந்த மனிதர் இயேசுவை ஆலயத்தில் பார்க்கிறார். அப்போது அவர் யார் என்பதைத் தெரிந்துகொள்கிறார்.

உடனே அவர் அந்த யூதர்களிடம் போய், இயேசுதான் தன்னைக் குணமாக்கினார் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும், யூதர்கள் நேராக இயேசுவிடம் போகிறார்கள். இந்த அற்புதங்களைச் செய்ய அவருக்கு எப்படிச் சக்தி கிடைக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக அவர்கள் போகவில்லை. அதற்குப் பதிலாக, ஓய்வுநாளில் நல்லது செய்ததால் அவர்மேல் குற்றம் சுமத்துவதற்காகப் போகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், அவரைத் துன்புறுத்தவும் ஆரம்பிக்கிறார்கள்!

  • இயேசு ஏன் யூதேயாவுக்குப் போகிறார், அங்கே என்ன செய்கிறார்?

  • பெத்சதா குளத்துக்கு ஏன் நிறைய பேர் போகிறார்கள்?

  • குளத்துக்குப் பக்கத்தில் இயேசு என்ன அற்புதத்தைச் செய்கிறார்? அதைத் தெரிந்துகொண்ட யூதர்கள் சிலர் என்ன செய்கிறார்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்