உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 21 பக். 54-பக். 55 பாரா. 2
  • பத்தாவது தண்டனை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பத்தாவது தண்டனை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • மோசேயும் ஆரோனும் பார்வோனை சந்திக்கிறார்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • முதல் மூன்று தண்டனைகள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யெகோவா யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இஸ்ரவேலரைக் கடவுள் விடுதலை செய்கிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 21 பக். 54-பக். 55 பாரா. 2
இஸ்ரவேலர் ஒருவர் தன்னுடைய வீட்டுவாசலின் நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளிக்கிறார்

பாடம் 21

பத்தாவது தண்டனை

பார்வோனுடைய முகத்தை இனி பார்க்கப் போவதில்லை என்று மோசே அவனிடம் உறுதியாகச் சொல்லிவிட்டார். ஆனால், கிளம்புவதற்கு முன் அவனிடம், ‘இன்றைக்கு நடுராத்திரி, பார்வோனின் மகன்முதல் அடிமையின் மகன்வரைக்கும் எகிப்தில் இருக்கிற எல்லா முதல் மகன்களும் செத்துப்போவார்கள்’ என்று சொன்னார்.

யெகோவா இஸ்ரவேலர்களிடம் ஒரு விசேஷ உணவைச் சாப்பிடச் சொன்னார். அவர்களிடம், ‘ஒருவயதுள்ள ஆட்டுக் கடாவைக் கொல்ல வேண்டும். அது செம்மறியாடாகவோ வெள்ளாடாகவோ இருக்கலாம். அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, வீட்டுவாசலின் நிலைக்கால்களில் தெளிக்க வேண்டும். அதன் இறைச்சியைச் சுட்டு, புளிப்பில்லாத ரொட்டியோடு சேர்த்து சாப்பிட வேண்டும். உடைகளைப் போட்டுக்கொண்டு, காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு கிளம்புவதற்குத் தயாராக இருங்கள். இன்று ராத்திரி நான் உங்களை விடுதலை செய்வேன்’ என்று சொன்னார். இஸ்ரவேலர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

நடுராத்திரியில், யெகோவாவின் தூதர் எகிப்தில் இருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் போனார். இரத்தம் தெளிக்கப்பட்டிருந்த வீடுகளை அந்தத் தேவதூதர் கடந்துபோனார். ஆனால், யாருடைய வீட்டு நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்படாமல் இருந்ததோ அந்த வீட்டிலுள்ள முதல் மகன் செத்துப்போனான். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எகிப்தியர்களின் முதல் மகன்கள் எல்லாரும் செத்துப்போனார்கள். ஆனால், இஸ்ரவேலர்களின் பிள்ளைகள் யாருமே சாகவில்லை.

பார்வோனுடைய மகனும் செத்துப்போனான். பார்வோனால் இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனடியாக மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டு, ‘இங்கிருந்து போய்விடுங்கள். போய் உங்களுடைய கடவுளை வணங்குங்கள். உங்கள் மிருகங்களையும் ஓட்டிக்கொண்டு போங்கள்!’ என்று சொன்னான்.

முழு நிலா வெளிச்சத்தில், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு கிளம்பினார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாகவும் கோத்திரம் கோத்திரமாகவும் போனார்கள். அவர்களில் ஆறு லட்சம் ஆண்களும் நிறைய பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள். எகிப்தில் இருந்த மற்ற மக்களில் நிறைய பேரும் யெகோவாவை வணங்குவதற்காக அவர்களோடு போனார்கள். ஒருவழியாக, இஸ்ரவேலர்களுக்கு விடுதலை கிடைத்தது!

யெகோவா தங்களை எப்படிக் காப்பாற்றினார் என்று நினைத்துப் பார்ப்பதற்காக, ஒவ்வொரு வருஷமும் இஸ்ரவேலர்கள் அந்த விசேஷ உணவைச் சாப்பிட்டார்கள். அதை பஸ்கா என்று சொன்னார்கள். அதற்கு, ‘கடந்து போவது’ என்று அர்த்தம்.

இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டுப் போகிறார்கள்

“உன் மூலம் என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.”—ரோமர் 9:17

கேள்விகள்: பத்தாவது தண்டனை என்ன? அந்தத் தண்டனையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

யாத்திராகமம் 11:1–12:42; 13:3-10

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்