பகுதி 9—முன்னுரை
யெகோவாமேல் அசைக்க முடியாத விசுவாசம் வைத்த சின்னப் பிள்ளைகள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் பற்றி இந்தப் பகுதி சொல்கிறது. சீரியாவில் இருந்த ஒரு இஸ்ரவேல் சிறுமிக்கு, யெகோவாவின் தீர்க்கதரிசியால் நாகமானைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எதிரி படையிடமிருந்து யெகோவா தன்னைக் காப்பாற்றுவார் என்று எலிசா தீர்க்கதரிசி நம்பினார். தலைமைக் குருவான யோய்தா தன்னுடைய உயிரைக்கூட பெரிதாக நினைக்காமல் இளம் யோவாசை அவனுடைய பாட்டியான பொல்லாத அத்தாலியாள் கையிலிருந்து காப்பாற்றினார். யெகோவா எருசலேமைப் பாதுகாப்பார் என்று எசேக்கியா ராஜா நம்பினார். அதனால் அசீரியர்களின் மிரட்டலுக்குப் பயந்து சரணடையவில்லை. யோசியா ராஜா தன்னுடைய தேசத்திலிருந்து சிலை வணக்கத்தை ஒழித்துக்கட்டினார், ஆலயத்தைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவந்தார், மக்கள் திரும்பவும் உண்மைக் கடவுளை வணங்க உதவினார்.