பகுதி 10—முன்னுரை
யெகோவாதான் எல்லாவற்றுக்கும் மேலான ராஜா. இதுவரை அவர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இனிமேலும் அவர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். உதாரணமாக, எரேமியா சாகாதபடி அவரைக் கிணற்றிலிருந்து காப்பாற்றினார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை நெருப்புச் சூளையிலிருந்து காப்பாற்றினார். தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார். எஸ்தர் தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக அவளுடைய உயிரை யெகோவா காப்பாற்றினார். அக்கிரமங்கள் தொடர்ந்து நடப்பதற்கு அவர் விட மாட்டார். யெகோவாவின் அரசாங்கம் எல்லா அக்கிரமங்களையும் நீக்கிவிட்டு இந்தப் பூமியை ஆட்சி செய்யும். பெரிய சிலையையும் பெரிய மரத்தையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.