பாடல் 137
அன்றும் இன்றும் மின்னும் பெண்கள்!
1. ரூத் மரியாள் சாராள் எஸ்தர் எல்லோரும்,
பௌர்ணமி நிலவாய் வானில் வந்தார்கள்.
தேவனை உயிராய் நெஞ்சில் கொண்டார்கள்,
தினம் உண்மையோடு வாழ்ந்தே சென்றார்கள்.
பெயரில்லா இன்னும் பல பெண்கள்,
யெகோவாவின் கண்ணில், மின்னுகின்றார்களே!
2. பூவிதழ் மென்மை, வீரம், நல்ல பண்பும்,
மாறிட மறுக்கும் அன்பும் கொண்டார்கள்.
நீர்விழும் நிலத்தில் வேர்போல் நின்றார்கள்,
இவர்கள் நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டார்கள்.
அவர்கள் போல் பக்தியுடன் வாழும்,
பெண்களிங்கு நூறு, பின்பற்றுவோம் நாமே!
3. தங்கையும் தாயும் தாரமும் வாருங்கள்,
தன் துணை இழந்த பெண்கள் கேளுங்கள்!
தாழ்மையை அணிந்த தாமரை நீங்கள்,
தலை சாய்க்காமல் நல்சேவை செய்தீர்கள்.
விழிநீர் ஏன் வழிந்திட வேண்டும்?
விடிந்திடும் வானம், யெகோவாவின் கண்ணே!
(பாருங்கள்: பிலி. 4:3; 1 தீ. 2:9, 10; 1 பே. 3:4, 5.)